ஹரிஹரன் கோயில்

ஹரிஹரன் கோயில் (Harihareshwara Temple) இந்தியாவில், கர்நாடக மாநிலத்தின் தாவண்கரே மாவட்டத்தில், ஹரிஹர் வருவாய் வட்டத்தில், துங்கப்பத்திரை ஆற்றாங்கரையில் ஹரிஹர் எனுமிடத்தில் அமைந்துள்ளது. ஹோய்சாளப் பேரரசின் இரண்டாம் வீர நரசிம்மன் மன்னனின் தலைமைப் படைத்தலைவராக இருந்த பொலல்வா (Polalva) என்பவரால் 1224இல் கட்டப்பட்டது. 1268இல் இக்கோயில் மறுசீரமைக்கப்பட்டது. இடது புறம் ஹரியும், வலது புறம் ஹரனும், இணைந்த ஹரிஹரன் எனும் சங்கரநாராயணன் சுவாமி பெயரில் அர்ப்பணிக்கப்பட்டது இக்கோயில். ஹரியும் சிவனும் ஒன்றே என்ற கோட்பாட்டை முன்னிறுத்த அமைந்த கோயில். இது போன்ற கோயில் தமிழ்நாட்டில் சங்கரன்கோயில் எனும் ஊரில் சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் அமைந்துள்ளது.

ஹரிஹரன் எனும் சங்கரநாராயணன்
ஹரிஹரேஸ்வரர் கோயிலின் திறந்த வெளி மண்டபம்
திறந்த வெளி மண்டபத்தை தாங்கும் தூண்கள்

கோயில் அமைப்பு தொகு

ஹோய்சாலர் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்ட இக்கோயிலின் நடுவில் உருளை வடிவில் பல தூண்களுடன் கூடிய திறந்த வெளி மண்டபம் அமைந்துள்ளது.[1] மண்டபத்தின் கூரையில் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய தாமரை வடிவ சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் முந்தைய கோபுர விமானம் மாற்றப்பட்டு, தற்கால செங்கல் சுண்ணாம்பு கலவையால் அமைக்கப்பட்டுள்ளது.

அடிக்குறிப்புகள் தொகு

  1. Foekema (1996), p. 22

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிஹரன்_கோயில்&oldid=2466276" இலிருந்து மீள்விக்கப்பட்டது