ஹர்சுல் ஏரி

ஹர்சுல் ஏரி, மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ளது. இது அவுரங்காபாத்தில் வாழும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கான நீர் ஆதாரமாக இருக்கிறது. இதன் மூலம் இந்த நகரத்தின் 16 வார்டுகளில் உள்ள மக்களுக்கு நீர் வழங்கப்படுகிறது. இது வற்றும்பொழுது ஜெயக்வாடி அணையில் தேங்கியுள்ள நீரைப் பயன்படுத்துவர். இந்த ஏரியில் சராசரியாக 24 அடி உயரத்துக்கு நீர் வரத்து இருக்கும்.[1]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்சுல்_ஏரி&oldid=1795102" இருந்து மீள்விக்கப்பட்டது