அலால்
அலால் அல்லது ஹலால் (அரபி:حلال, ஆங்கிலம்:Halal ) அரபு மொழிச் சொல், சரியத் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்தவொரு பொருள் அல்லது செயல் போன்றவற்றை குறிப்பதாகும்.இதன் எதிர்ச்சொல் ஹராம் ஆகும். இச்சொல் மிகப்பரவலாக இசுலாமியரின் சரியத் சட்டத்திற்குட்பட்ட உணவுப் பொருள் பயன்பாட்டில் பயன்படுத்தப்படுவதாகும். (الشريعة الإسلامية).
உலகளவில் 70% இசுலாமிய பெருமக்கள் இந்த அலால் முறையில் செய்யப்பட்ட உணவு வகைகளை உட்கொள்கின்றனர்[1]. மற்றும் உலகளாவிய நடப்பு அலால் வணிகம் $580 பில்லியன் தொழிற்துறைகளைக்க் கொண்டுள்ளன[2].
"அலால்" என்ற சொல்
தொகுஇச் சொல் அரபி பேசும் மக்கள் மற்றும் அரபி பேசா மக்கள் என இருவரிடமும் வேறு பட்டு பயன்படுத்தபடுகின்றது.
- அரபு பேசும் நாடுகள்
அரபு மொழி பேசும் நாடுகளில் இச்சொல் இசுலாமியச் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்தவொரு பொருளும் என்ற பொருள் கொண்ட சொல்லாக வழங்குவதாகவும் ஹராம் என்ற சட்டத்திற்கு நேர்பொருளைக் கொண்டதாகவும் அழைக்கப்படுகின்றது. இச்சட்டம் தனி மனித ஒழுக்கம், பேச்சுத் தொடர்பு, உடையணிதல், நன்னடத்தை, வழக்கமரபு மற்றும் உணவுப் பழக்க விதிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- அரபு பேசா நாடுகள்
அரபு பேசா நாடுகளில், பொதுவாக இச்சொல் குறுகிய பொருளுடைய இசுலாம் உணவு முறை விதியை உணர்த்தும் சொல்லாக, குறிப்பாக இறைச்சி மற்றும் கோழியிறைச்சி உணவு வகைகளை குறிப்பதற்காக பொதுவாகப் பயன்படுத்தபடுகின்றது.
இஸ்லாத்தின் உணவு சட்டம்
தொகுஇசுலாம் சட்டம் எந்த உணவு உட்கொள்ளத் தக்கவை மற்றும் எவை உட்கொள்ளத் தகாதவை என்று வகுத்துள்ளது. உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையினையும் வகுத்துள்ளது. அம்முறை தபிகா எனப்படுகின்றது.
இஸ்லாமிய சட்டப்படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். அதை விடுத்து பன்றி இறைச்சியையோ அல்லது தபிஹாஹ் செய்யப்படாத இறைச்சியை சாப்பிடுவதோ மிகவும் பாவகரமான செயல் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
“ | எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு | ” |
- (திருக் குர்ஆன்-2:174)
அனால் தவிர்கமுடியாத சூழலில் ஒருவர் வற்புறுத்தலினாலோ அல்லது வேறு உணவு இல்லாத நிலையிலோ ஹலால் அல்லாத உணவை உட்கொள்ளலாம் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.
சுராஹ் 2 .173
“ | தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான் | ” |
- (திருக் குர்ஆன்-2:173)
திட்டவட்டமாய் தடுக்கப்பட்ட பண்டங்கள்
தொகுமனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய (அராம்) பரவலான பண்டங்களை உண்பது, குரானில் கூறப்பட்ட வாசகங்களின்படித் தடைசெய்யப்பட்டவையாகும்.
- பன்றிறைச்சியை வேறு எந்த உணவும் கிடைக்காதபட்சத்தில் தவிர்க்கமுடியாத காரணத்தால் உண்ணலாம் என்ற விலக்களிக்கப்பட்டுள்ளது.
- குருதி (இரத்தம்)
- அனைத்து ஊனுண்ணிகள் மற்றும் இரைகளை பிடிக்கும் பறவைகள்.
- விலங்குகள் எவருக்காகவோ வெட்டப்பட்டவை ((அ) கொல்லப்பட்டவை ) ஆனால் அல்லாவின் பெயரால் வெட்டப்படாதவை . அனைத்தும் இறைவனுக்கான அர்ப்பணம் அல்லது தியாகத்திறகான வழிபாட்டு பலிபீடம் அல்லது புனிதர் (saint) அல்லது தெய்வத்தன்மை வாய்ந்த ஒருவர்.
- அழுகும் பிணம்
- குரல்வளையை நெரித்துக்கொல்லபட்ட விலங்கு, அல்லது அடித்துக் கொல்லபட்ட விலங்கு, கீழே தள்ளிக் கொன்றவை, அல்லது உறைந்ததினால் இறந்தவை, அல்லது கொடிய மிருகங்களால் கொல்லபட்ட இரை, அவை வெட்டப்படுவதற்கு முன் உயிருடன் இருக்கும் மிருகங்களைத் தவிர.
- அல்லாவின் பெயரை உச்சரிக்காமல் தயாரிக்கப்பட்ட உணவை.
- ஆல்ககால் (மது) மற்றும் இதர மதிமயக்கும் போதைப் பொருட்கள்.
தபிகா: வெட்டப்படும் முறை
தொகுதபிகா சமயச்சடங்கின்படி இசுலாமியச் சட்டப்படி மீன் மற்றும் பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்களைத் தவிர ஏனைய அனைத்து விலங்குகளை வெட்டப்படும் முறையாகும். இம்முறையில் விலங்குகளை வெட்டப்படுவது விரைவானது, ஆழமாக வெட்டக்கூடியது, கூறிய முனையுடன் கூடிய கத்தியைக் கொண்டு கழுத்துப் பகுதியை வெட்டுவது, சுகுலார் சிரையை (jugular vein- கழுத்து பெருநாளங்களுள் ஒன்று) வெட்டுவது மற்றும் சிரசுத் தமனியை (சிரசு நாடி-carotid artery) இருபக்கமும் தண்டுவடத்தை (முண்ணான்-spinal cord))தவிர (அதைச்சுற்றி) வெட்டுவது.
இசுலாமிய மற்றும் யூதர்களின் உணவுமுறைச் சட்டங்களின் ஒப்பீடு
தொகுதபிகா அலால் மற்றும் கசரத் வெட்டுச் சட்டங்களில் நிறைய ஒற்றுமை, வேற்றுமைகள் உள்ளன. இசுலாமல்லாதார் கசரத் முறையை அலால் முறைக்கு மாற்றாகப் பய்னபடுத்தபடவேண்டும் என்று கூறப்படுகின்றது. இருப்பினும் இது இன்றுவரை சர்ச்சைக்குரியனவாக, தனிநபர் விவாதத்துக்குரியனவாக கருதப்படுகின்றது.[3] அதேசமயம் சில இசுலாம் அலால் குழுக்கள் இக்கருத்தை அதாவது கோசர் இறைச்சியை அலால் இறைச்சியாக ஏற்றுக்கொண்டுள்ளன. யூதர்களின் கோசர் குழுக்கள் அலால் இறைச்சியை கோசர் இறைச்சியாக ஏற்றுக்கொள்ளாத நிலையிலும் வேறுபட்டத் தேவைக்களுக்கேற்ப இசுலாமிய குழுக்கள் மட்டும் ஏற்றுக்கொண்டுள்ளன.
இசுலாமியரல்லாத நாடுகளில் அலால்
தொகுடியர்பான், மிச்சிகன், அமெரிக்கா, போன்ற நாடுகளிலும் துரித உணவகங்களிலும் அலால் முறை பின்பற்றப்படுகின்றது. கனடாவில் அலால் முறை மிகுதியாக பின்பற்றப்படுகின்றது. இலங்கையில் அலால் முறை, இசுலாமிய நடைமுறைகளை இசுலாமியர்கள் அல்லாதவர்களுக்கு பலாத்காரமாகத் திணிப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால், இலங்கை அரசு இசுலாமியருக்கு மாத்திரம் அலால் முறையிலான உணவினை விற்கலாம் என இலங்கை அரசு அறிவித்தது.[4]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dorothy Minkus-McKenna. "the Pursuit of Halal". Progressive Grocer; Dec 1, 2007; 86, 17;
- ↑ அலால் பொருள்களின் வணிகம்: முன்னோக்கிய வழி பரணிடப்பட்டது 2010-07-29 at the வந்தவழி இயந்திரம் முனைவர். சாத் அல் அரன் & பாட்ரிக் லோ, அலால் குறிப்பேடு மார்ச் 03, 2008
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-21. பார்க்கப்பட்ட நாள் 2009-06-09.
- ↑ இலங்கையில் இசுலாமியர்களுக்கு மாத்திரம் அலால் உணவு பிபிசி தமிழோசை, 20 பெப்ரவரி 2013