ஹாங்காங் தொலைக்காட்சி நாடகம்

ஹாங்காங் தொலைக்காட்சி நாடகம் (香港電視劇) என்பது ஹாங்காங் நாட்டில் கண்டோனீயம் மொழியில் தயாரித்து ஒளிபரப்பாகும் பொழுதுபோக்கு அம்சம் ஆகும். இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி நாடகங்கள் ஹாங்காங் மக்களிடையே ஒரு தனித்துவமான கலாச்சார அடையாளத்திற்கு பங்களிப்பு செய்ய உதவியதுடன், உலகெங்கிலும் உள்ள கண்டோனீயம் சீன மொழி பேசும் சமூகத்திற்கான கலாச்சார வளமாக செயல்படுகின்றது.

ஹாங்காங்கில் உள்ளூர் ஒளிபரப்பு தொலைக்காட்சி சேவை முதன்முதலில் 1957 ஆம் ஆண்டில் ரெடிஃபியூஷன் டெலிவிஷன் தொடங்கப்பட்டது, இது அகண்ட சீனாவின் முதல் பிரித்தானியப் பேரரசின் காலனியில் உள்ளூர் தொலைக்காட்சி சேவை செய்யப்பட்டது. பின்னர் 1967 ஆம் ஆண்டில் டி.வி.பி என்ற தொலைக்காட்சி இவ் பிரதேசத்தின் முதல் இலவசமாக தொலைக்காட்சி சேவையாக மாறியது. 1970 கள் மற்றும் 1980 களின் முற்பகுதியில் ஆரம்பகால தொலைக்காட்சி நாடகங்களின் வளர்ச்சி மிகவும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது, பிரைம் டைம் தொடர்கள் ஒளிபரப்பும்போது இலக்கு அளவீட்டுப் புள்ளிகள் சில நேரங்களில் 70% வரை பெற்றது.[1]

1980 களில், தொலைக்காட்சி நாடகங்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஹாங்காங்கின் கலாச்சார சின்னமாக மாறியது, இந்த பகுதி தொலைக்காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்புக்கான மையமாக மாறியது. மேலும், ஹாங்காங் தொலைக்காட்சித் துறையின் வெற்றி பின்னர் சீனா மற்றும் பிற தொழில்மயமாக்கப்பட்ட ஆசிய நாடுகளில், குறிப்பாக தைவான் மற்றும் தென் கொரியாவில் தொலைக்காட்சிக்கு பெரும் செல்வாக்கு செலுத்தியது.

மேற்கோள்கள்

தொகு