ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி

ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி என்பது தேனி மாவட்டம், உத்தமபாளையம் எனும் ஊரில் அமைந்த ஒரு கலை அறிவியல் கல்லூரியாகும்.

ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி
வகைபொது (இருபாலர்)
உருவாக்கம்1956
நிறுவுனர்ஹாஜி கருத்த ராவுத்தர் (எ) ஹாஜி முகமது மீரான் ராவுத்தர்
முதல்வர்ஹாஜி முனைவர் ஹெச். முகமது மீரான்
செயலாளர் மற்றும் தாளாளர்ஹாஜி தர்வேஷ் முகைதீன்
கல்வி பணியாளர்
158
நிருவாகப் பணியாளர்
64
மாணவர்கள்2688
அமைவிடம்உத்தமபாளையம், தமிழ்நாடு, இந்தியா
சேர்ப்புமதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்ஏஏசி ஏ தகுதி
இணையதளம்http://www.hkrhc.ac.in/

விளக்கம்தொகு

ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி என்பது உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஹாஜி கருத்த ராவுத்தர் என்று அழைக்கப்பெற்ற ஹாஜி முகமது மீரான் ராவுத்தர் என்பவரால் 1956 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1] இக்கல்லூரியானது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற, அரசு நிதியுதவி பெறும் தன்னாட்சிக் கல்லூரியாகும்.[2]

இக்கல்லூரியில் தற்போது 17 இளநிலைப் பட்டப்படிப்புகளும், 11 முதுநிலைப் பட்டப்படிப்புகளும், 5 ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புகளும், 3 முனைவர் பட்டப்படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இக்கல்லூரியில் தற்போது சுமார் 2700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் கல்விப் பணிகளில் 158 பேராசிரியர்களும், நிருவாகப் பணிகளில் 64 பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். கல்விப் பணிகளிலிருப்பவர்களில் 50 பணியாளர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.[3]

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் இக்கல்லூரியில் இளங்கலை வரலாறு பட்டப்படிப்பு படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. [4] [5], [6] கவிஞர் நா. காமராசன் இக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறார். [7] [8]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு