ஹாஜி மசுதான்

இந்திய மாபியாக்கள்

மசுதான் ஹைதர் மிர்சா அல்லது ஹாஜி மசுதான் (1926-1994) இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பனைக்குளத்தில் பிறந்தவர் ஆவார். மும்பையில் மாஃபியா கும்பலுடன் தொடர்புடைய இவர் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டார். 1926 ஆம் ஆண்டு பிறந்த இவர் தன் எட்டாவது வயதில் தனது தந்தையுடன் மும்பைக்கு குடிபெயர்ந்தார். தன் தந்தையுடன் மிதிவண்டி பழுதுபார்க்கும் கூடத்தைச் சிலகாலம் நடத்தினார். 1944ல் மும்பை துறைமுகத்தில் சுமைதூக்கும் தொழிலாளியானார். கரீம் லாலாவுடன் இணைந்து பணியாற்றி 1960களில் செல்வந்தரானார். இந்தித் திரைப்படங்களுக்கு நிதியுதவி அளித்து திரைப்படத் தயாரிப்பாளரானார்.அமிதாப் பச்சன், திலிப் குமார், ராஜ் கபூர், தர்மேந்திரா, பிரோஸ் கான், சஞ்சீவ் குமார் முதலானோருடன் நல்லுறவு கொண்டிருந்தார்.

ஹாஜி மசுதான்
பிறப்புமசுதான் ஹைதர் மிர்சா
மார்ச்சு 1, 1926(1926-03-01)
பனைக்குளம், இராமநாதபுரம் மாவட்டம், சென்னை மாகாணம் (தற்போதைய தமிழ்நாடு), பிரித்தானிய இந்தியா
இறப்பு9 மே 1994(1994-05-09) (அகவை 68)[1]
மும்பை, மஹாராஷ்டிரா, இந்தியா
இருப்பிடம்மும்பை, மஹாராஷ்டிரா, இந்தியா
தேசியம்இந்தியர்
இனம்தமிழர்
பணிதிரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட விநியோகிப்பாளர், திரைப்பட உருவாக்குனர், அரசியல்வாதி, கள்ளக் கடத்தல்
சமயம்இசுலாம்
வாழ்க்கைத்
துணை
சோனா
பிள்ளைகள்அக்தர்,நசீர், நாதிர்

இந்திய நெருக்கடி நிலைக் காலத்தில் சிறையிடப்பட்டார். 1984 முதல் அரசியலில் ஈடுபட்ட ஹாஜி மசுதான் 1985 ல் தலித் முசுலீம் நல்வாழ்வு மகா சங்கத்தைத் தொடங்கினார்.

அமிதாப் பச்சன் நடித்து 1975ல் வெளிவந்த தீவார் எனும் இந்தித் திரைப்படம் ஹாஜி மசுதானின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.[2]

சான்றுகள்தொகு

  1. Deeptiman Tiwary (July 23, 2010). "The Real Haji Mastan". Mumbai Mirror. பார்த்த நாள் August 5, 2010.
  2. Bhattacharya, Chandrima S. (November 14, 2005). "Marilyn to Monica, don-showgirl relationships flourish". telegraphindia.com (Calcutta, India). http://www.telegraphindia.com/1051114/asp/frontpage/story_5474433.asp. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாஜி_மசுதான்&oldid=2950983" இருந்து மீள்விக்கப்பட்டது