ஹேரியட் டப்மேன்

(ஹாரியெட் டப்மன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹாரியெட் டப்மன் (அ) ஹேரியட் டப்மேன் (Harriet Tubman) (1822 – மார்ச்சு 10, 1913) அமெரிக்க நாட்டில் அடிமை முறை சில பகுதிகளில் நடைமுறையில் இருந்த சமயம், அவர்களை அடிமைகளாக நடத்தாதப் பகுதிக்கு இடம்பெயரச் செய்ய உதவிய சமூக சேவகி. இவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர். அமெரிக்க நாட்டில் அடிமைமுறையை ஒழித்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆவார். மேரிலன்டில் அடிமைத்தனத்தில் பிறந்த டப்மன் 1849இல் ஃபிலடெல்ஃபியாவுக்கு தப்பிப்போனார். இதற்கு பிறகு நிலக்கீழ் தொடர்வண்டிப் பாதை வழியாக இவரின் குடும்பத்தையும் வேறு 300 அடிமைகளை காப்பாற்றி ஐக்கிய அமெரிக்காவின் அடிமைகள் வாழாத வட பகுதிக்கு இவர்களை கொண்டுவந்தார். பாதாள ரயில் பாதை என்ற குறிச்சொல் இப்பணியில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இதில் ரயில் நிலையமோ, ரயிலோ சம்பந்தப்பட்டிருக்காது. சரக்கு என்றால் இடம்பெயரச் செய்யப்பட வேண்டிய பயணிகள் என்றும், ஸ்டேஷன் என்பது ஒரு இடத்தை என்று பலவும் குறிச்சொல்லால் சுட்டப்பட்டு அடிமைகள் இடம்பெயரச் செய்யப்பட்டார்கள்.[1]. இத்தகைய ஆபத்தான சேவையில் ஈடுபட்டிருந்த ஹரியட் டப்மேன், ’நர்கோலெப்ஸி’ எனும் கொடூரமான நோயால் பாதிக்கப்பட்டவர்.இந்த நோய் காரணமாக தூக்கம் எந்நேரமும் தாக்கக்கூடும் என்ற சூழ்நிலையிலும் இவர் இத்தகைய துணிச்சலான சேவையை செய்தார்.[1]. உள்நாட்டுப் போரில் ஒன்றிய இராணுவத்தில் வேவு பணியும், சமையல் பணியும் செய்தார்.

ஹாரியெட் டப்மன்
1880இல் ஹாரியெட் டப்மன்
பிறப்பு1822
டார்செஸ்டர் மாவட்டம், மேரிலன்ட்
இறப்பு(1913-03-10)மார்ச்சு 10, 1913
ஆபர்ன், நியூ யோர்க்
பெற்றோர்பென் & ஹாரியெட் கிரீன் ராஸ்
வாழ்க்கைத்
துணை
ஜான் டப்மன், நெல்சன் டேவீஸ்

இளமைப் பருவம், கல்வி

தொகு

இவர் ஹாரியட் கிரீன், பென் ரோஸ் என்ற தம்பதியர்க்கு மகளாகப் பிறந்தார். இவரது பெற்றோர் மேரி பாட்டிசன் என்வருக்கு அடிமைகளாக இருந்தன. இளவயதிலேயே இவரை, மேரி பாட்டிசனின் இரண்டாவது கணவர் அடிமையாக நடத்தினார். இவரது தாத்தா, ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அடிமையாக வந்தவர். பின்னர், இவரது பெற்றோரும் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டனர். இவருக்கு ஒன்பது சகோதரர்கள் இருந்தனர். டப்மேனை ஒரு பெண்ணுக்கு விற்றாள் பெற்றோரின் முதலாளி. குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டது. குழந்தை அழுதால் ட்ப்மேன் துன்புறுத்தப்பட்டார். ஜேம்ஸ் குக் என்ற தோட்டக்காரரின் வீட்டிலு, வேலை செய்தார். உடல்நிலை குன்றியதால், வேலையைவிட்டு நீக்கப்பட்டார். பிற்காலத்தில், கடினமான வேலைகளையும் செய்யத் துவங்கினார். மாடுகளை மேய்த்தல், உழுதல், மரத்துண்டுகளை நகர்த்தல் உள்ளிட்ட பணிகளும் அடங்கும்.

குடும்பமும் திருமணமும்

தொகு
 
thump

அவரது தந்தைக்கு அதிக வயதானதும், வேலையில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டது. இருப்பினும், தன் முதலாளி குடும்பத்திற்கு சிறிய சிறிய வேலைகளைச் செய்து கொடுத்தார். தன் தாய்க்கு ஓய்வு வழங்கப்படுமா என்பதை அறிய நினைத்தார் டப்மன். ஒரு வழக்கறிஞரை சந்தித்து, அவரை வேண்ட, அவர் ஆவணங்களைச் சோதித்தார். அவரது தாயாருக்கும் 45 வயதில் ஓய்வு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். ஆயினும், முதலாளி குடும்பத்தினர் ஓய்வளிக்காமல் வேலை வாங்கினர். இந்த பிரச்சனையை சட்டரீதியாக சந்திப்பதற்கான போதிய பலம் டப்மனித்தில் இல்லை. பின்னர், இருபது வயதை நெருங்கியபோது, ஜான் டப்மன் என்ற கருப்பரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் செய்தாலும், ஏற்கனவே எழுதப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இவர்களது குழந்தைகளும் அடிமைகளாகவே இருக்க வேண்டும். திருமணத்திற்கு பின்னர், அரமிண்டா என்ற பெயரை ஹாரியட் என மாற்றிக் கொண்டார்.

அடிமைமுறையில் இருந்து தப்பித்தல்

தொகு

சில ஆண்டுகளுக்குப் பின்னர், உடல்நலம் குன்றியதால் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், இவரை வேறொருவருக்கு விற்கும் எண்ணத்திலேயே இருந்தார் இவரது முதலாளி. விற்கப்படக் கூடாது, முதலாளியின் மனம் மாற வேண்டும் என இறைவனை வேண்டினார். இவரை இவரது முதலாளி வேறொருவருக்கு விற்றார். விற்கப்பட்டது கண்டு மனம் வருந்தினார். பின்னர், முதலாளி இறக்க வேண்டும் என இறைவனை வேண்டினார். நினைத்ததுபோலவே, அடுத்த சில நாட்களில் முதலாளி இறந்தார். இவருக்கு போராடும் எண்ணம் தோன்றியது. விடுதலை அல்லது சாவு என்று சொல்லிக்கொண்டார். டப்மேனும், அவரது சகோதரர்களும் அடிமைமுறையில் இருந்து தப்பித்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 குறைகள் சாதனைக்குத் தடையல்ல; கமலநாதன்; வானதி பதிப்பகம்; பக்கம் 284-289


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேரியட்_டப்மேன்&oldid=2919078" இலிருந்து மீள்விக்கப்பட்டது