ஹியூகோ விருது

அறிபுனை இலக்கியத்துக்கான விருது

ஹியூகோ விருதுகள், ஒவ்வோராண்டும் அறிவியல் புனைவு மற்றும் கனவுருப்புனைவுப் படைப்புகளுக்கு வழங்கப்பெறும் விருதுகளாகும்; இவை விருது வழங்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் வெளியிடப்பட்ட படைப்புகளுக்கு தரப்படுகின்றன. இவ்விருதுகள் "ஹியூகோ கெர்ன்ஸ்பாக்" என்பவரைப் பெயர் மூலமாகக் கொண்டு வழங்கப்படுகின்றன; இவர் "அமேசிங் ஸ்டோரிஸ்" எனப்படும் முன்னோடி அறிவியல் புனைவு பத்திரிகையின் தோற்றுவிப்பாளர் ஆவார். இவ்விருதுகள், 1992-ஆம் ஆண்டுவரை "அறிவியல் புனைவு சாதனை விருதுகள்" என்று அலுவல்பூர்வமாக அழைக்கப்பட்டு வந்தன. இவை உலக அறிவியல் புனைவு சமூகத்தால் அமைக்கப்பட்டு, "உலக அறிவியல் புனைவு கூட்டரங்கத்தில்" ஒவ்வோராண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விருதுகள் முதன்முதலில் 1953-ஆம் ஆண்டு நடைபெற்ற 11-வது உலக அறிவியல் புனைவு கூட்டரங்கில் வழங்கப்பெற்றன. தற்போது இவ்விருதுகள் 12-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழங்கப்படுகின்றன; எழுத்து மற்றும் நாடக வடிவுகள் இதில் அடங்கும்.

ஹியூகோ விருது
1991 ஹியூகோ விருது ஏவூர்திக் கோப்பை
விளக்கம்முந்தைய ஆண்டின் சிறந்த அறிவியல்புனைவு மற்றும் கனவுருப்புனைவு படைப்புகள்
வழங்குபவர்உலக அறிவியல் புனைவு சமூகம்
முதலில் வழங்கப்பட்டது1953
இணையதளம்thehugoawards.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹியூகோ_விருது&oldid=2121988" இலிருந்து மீள்விக்கப்பட்டது