ஹீராபாய் டாட்டா

இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர்

ஹீராபாய் டாட்டா (Herabai Tata) (1879-1941) இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலரும் வாக்குரிமை பெற பெண்கள் சங்கத்தை நிறுவியவரும் ஆவார். 1895இல் திருமணமான இவரது கணவர் அர்தேசிர் பெசோன்ஜி டாட்டா முற்போக்கானவர். மேலும், தனது மனைவி மற்றும் மகளின் கல்விக்கு ஆதரவளித்தார். இவருடைய பள்ளிக்கல்விக்கு உதவ ஆசிரியர்களை நியமித்தார். 1909ஆம் ஆண்டில், பார்சியாக இருந்த இவர்,பிரம்மஞானத்தில் தனது ஆர்வத்தை வளர்த்தார். சில வருடங்களுக்குள் அன்னி பெசன்ட்டை சந்தித்தார். அதே நேரத்தில், 1911ஆம் ஆண்டில், இவர் இந்திய பாரம்பரியம் கொண்ட பிரிட்டன் வாக்குரிமை பெற்ற சோபியா துலீப் சிங் என்பவரைச் சந்தித்தார். அவர் வாக்குரிமை பெற போராடுபவராக இவரைத் தூண்டினார். மகளிர் இந்திய சங்கத்தின் நிறுவனர் உறுப்பினரும், பொதுச் செயலாளருமான இவர், 1917 இல் மாண்டேகு-செம்ஸ்போர்டு குழு முன் உரிமைக்காக மனு செய்த பெண்களில் ஒருவரானார்.

ஹீராபாய் டாட்டா
இரண்டு பெண்கள் புடவை அணிந்திருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படம்
தனது மகள் மிதன் டாட்டாவுடன் ஹீராபாய், 1919
பிறப்பு1879
மும்பை, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு1941
மற்ற பெயர்கள்ஹீராபாய் அ. டாட்டா, ஹீராபாய் அர்தேசி டாட்டா
பணிபெண்கள் உரிமை ஆர்வலர், வாக்குரிமை பெற பெண்கள் சங்கத்தை நிறுவியவர்
செயற்பாட்டுக்
காலம்
1911-1920s

முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் பெண்களின் வாக்குரிமையைச் சேர்க்கத் தவறியபோது, இவரும் பிற பெண்ணியவாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்து, வாக்குகளின் அவசியம் குறித்து கட்டுரைகளை வெளியிடத் தொடங்கினர். மாண்டேகு -செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கான தேர்தல் விதிமுறைகளை உருவாக்க சவுத்பாரோ குழுவிற்கு ஆணியிடப்பட்டது. இவர் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு ஒரு கட்டுரை எழுதினார், சில நகராட்சிகள் ஏற்கனவே பெண்களுக்கு வாக்களிக்க அனுமதித்ததால், உரிமையை நீட்டிப்பது நியாயமானது என்று வாதிட்டார். ஆயினும்கூட, சவுத்பரோ குழு பெண்களுக்கான உரிமையை சேர்ப்பதை நிராகரித்தது. மேலும் இவர்களின் பரிந்துரைகளை இலண்டனின் பொது கூட்டுசபையின் தேர்வுக்கு அனுப்பியது. கூட்டுக்குழுவிற்கு வாக்குரிமைக்கு ஆதரவாக வழக்கை முன்வைக்க இங்கிலாந்துக்குச் செல்ல மும்பை வாக்குரிமை குழுவால் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

ஹீராபாய், பிரித்தானிய பேரரசின் ஆட்சிக் காலத்தில் 1879இல் மும்பையில் பிறந்தார். தனது பதினாறாவது வயதில் பார்சி இனத்தைச் சேர்ந்த ஒரு துணி ஆலை ஊழிழியரான அர்தேசிர் பெசோன்ஜி டாட்டா என்பவரை மணந்தார்.[1]|group="Notes"}}[2][3] 2 மார்ச் 1898 அன்று இவர்களுக்கு மிதன் என்ற மகள் பிறந்தார்.[4] இவர்கள் பின்னர் நாக்பூருக்கு அருகிலுள்ள புல்கானுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு அர்தேசிர் ஒரு துணிக் கூடத்தில் உதவி நெசவாளராகப் பணிபுரிந்தார்.[3] அர்தேசி பெண்களின் கல்வி குறித்த தனது சிந்தனைகளில் முற்போக்கானவராக இருந்தார். தனது மனைவியின் கல்வியை மேலும் அதிகரிக்க விரும்புவதில் ஆசிரியர்களை நியமித்தார்.[5] அகமதாபாத்தில் உள்ள ஒரு ஆலையில் பனியில் சேர்ந்த பிறகு, குடும்பம் 1913 வரை அங்கேயே இருந்தது. பின்னர், இவர்கள் மும்பைக்கு இடம் பெயர்ந்தனர். அங்கு அர்தேசிர் ஒரு பெரிய துணி ஆலையின் மேலாளராக ஆனார்.[4][2]

செயற்பாடு தொகு

ஆரம்பகால செயல்பாடுகள் தொகு

1909ஆம் ஆண்டில், ஹீராபாய் பிரம்மஞானத்தில் ஆர்வம் காட்டினார். மேலும், சென்னையின் அடையாற்றிலும், வாரணாசியிலும் நடந்த மாநாடுகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். 1912இல் நடந்த வாரணாசி மாநாட்டில் இவர் அன்னி பெசன்ட்டை சந்தித்தார்.[6] [7] 1911ஆம் ஆண்டில், காஷ்மீரில் தனது மகளுடன் விடுமுறையில் இருந்தபோது, இவர் பிரிட்டன் வாக்குரிமை பெற்ற சோபியா துலீப் சிங்கை சந்தித்தார். இவரது ஆர்வத்தால் கவரப்பட்டு, பின்னர் அவர் அனுப்பிய இலக்கியங்களைப் படித்த பிறகு, ஹீராபாய் பெண்கள் உரிமைக்கான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். [6] [8]

குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹீராபாய்_டாட்டா&oldid=3276860" இலிருந்து மீள்விக்கப்பட்டது