ஹென்றி ஃபோன்டா
ஹென்றி ஜெய்னஸ் ஃபோன்டா (மே 16, 1905 – ஆகத்து 12, 1982) ஐம்பது ஆண்டுகள் திரைவாழ்க்கை கொண்ட ஒரு பிரபல திரைப்பட நடிகராவார்.[2] இவர் ஒரு பிராட்வே நடிகராகத் தன் திரைவாழ்க்கையைத் தொடங்கினார். தி ஆக்ஸ்போ இன்சிடன்ட், மிஸ்டர் ராபர்ட்ஸ், 12 ஆங்க்ரி மென், செர்ஜியோ லியோனின் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் தி வெஸ்ட், யுவர்ஸ், மைன் அன்ட் அவர்ஸ் மற்றும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்ற ஆன் கோல்டன் பான்ட் போன்றவை அவர் நடித்த படங்களுள் சிலவாகும். மகள் ஜேன் ஃபோன்டா, மகன் பீட்டர் ஃபோன்டா, பேத்தி பிரிட்ஜட் ஃபோன்டா மற்றும் பேரன் டிராய் கேரிட்டி உள்ளிட்டோரும் நடிகர்களாவர். 1999ல் அமெரிக்க திரைப்பட நிறுவனம் (ஏ.எப்.ஐ) இவரை 6 ஆவது சிறந்த நடிகராக அறிவித்தது.
ஹென்றி ஃபோன்டா | |
---|---|
1937ல் சிலிம் என்ற படத்தில் | |
பிறப்பு | ஹென்றி ஜெய்னஸ் ஃபோன்டா மே 16, 1905 கிரான்ட் தீவு, நெப்ராஸ்கா, அமெரிக்கா |
இறப்பு | ஆகத்து 12, 1982 லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்கா | (அகவை 77)
இறப்பிற்கான காரணம் | இருதய நோய் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மின்னசோட்டா பல்கலைக்கழகம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1928–1982 |
அரசியல் கட்சி | ஜனநாயகக்கட்சி |
வாழ்க்கைத் துணை | மார்கரெட் சுல்லவன் (தி. 1931; ம.மு. 1933) பிரான்சஸ் செய்மோர் புரோக்கா (தி. 1936; d. 1950) சுசன் பிலாங்கார்ட் (தி. 1950; ம.மு. 1956) அப்டரா பிரான்செட்டி (தி. 1957; ம.மு. 1961) சிர்லீ ஃபோன்டா (தி. 1965; இற. 1982) |
பிள்ளைகள் | 3; ஜேன் ஃபோன்டா மற்றும் பீட்டர் ஃபோன்டா உள்பட |
உறவினர்கள் | பிரிட்ஜட் ஃபோன்டா (பேத்தி) டிராய் கேரிட்டி (பேரன்) |
இராணுவப் பணி | |
சார்பு | அமெரிக்கா |
சேவை/ | அமெரிக்கக் கடற்படை |
சேவைக்காலம் | 1942–1946[1] |
தரம் | லெப்டினன்ட் |
படைப்பிரிவு |
|
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர் |
விருதுகள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "LTJG Henry Jaynes Fonda". TogetherWeServed. 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-05-22.
- ↑ Obituary Variety, August 18, 1982.