ஹென்றி மூர்

ஹென்றி மூர் (30 ஜூலை 1898 - 31 ஓகஸ்ட் 1986)[1] ஒரு நன்கு அறியப்பட்ட ஆங்கிலக் கலைஞர். சிற்பி, வரைவாளர். இவர் ஆங்கிலக் கலை வரலாற்றின் மிக முக்கியமான சிற்பியாகவும், 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குமிக்க, முக்கியமான கலைஞர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.[2] [3] இவரது சிற்பவேலைகள் உலகளாவிய ரீதியில் கண்காட்சிக்கு உட்படுத்தப் பட்டுள்ளன.[4]

Henry Moore, Kunsthalle Würth, 74523 Schwäbish Hall
Henry Moore - Kunst in Schwäbisch Hall
Henry Moore - Kunst in Schwäbisch Hall
Henry Moore - Kunst in Schwäbisch Hall
Henry Moore - Kunst in Schwäbisch Hall

குடும்பம்

தொகு

இவர் ரேமண்ட் ஸ்பென்சர் மூர், மேரி பேக்கர் தம்பதிகளின் ஏழு குழந்தைகளில் ஏழாவது குழந்தை. இவரது தந்தை ரேமண்ட் ஸ்பென்சர் மூர் ஒரு சுரங்கத் தொழிலாளி. 1929 இல் இவர் கலை நிபுணரான இரீனா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இரீனா உருசிய-போலந்து பெற்றோரின் மகள். 1907 மார்ச் 26 இல் பிறந்தவர். இரீனாவின் தந்தை உருசியப் புரட்சியின் போது காணாமல் போனார். தாயார் பாரிஸ் நாட்டுக்குத் தப்பியோடினார். திருமணத்துக்குப் பிறகு இரீனாவும், ஹென்றியும் இலண்டனுக்குச் சென்றனர். இரீனா பலமுறை கருச்சிதைவினால் பாதிக்கப் பட்டார். மார்ச் 7, 1946 இல் பெண்குழந்தை மேரியைப் பெற்றெடுத்தார். இக்குழந்தை சில வருடங்களின் முன் இறந்த இவரது தாயின் பெயர் கொண்டே அழைக்கப் பட்டது

கல்வி

தொகு

இவரது தந்தை தன்னைப் போல தனது குழந்தைகள் சுரங்கத்தினுள் வேலை செய்யும் நிலை வந்து விடக்கூடாது என நினைத்து நன்கு படிக்க வைத்தார். ஹென்றி மூர் தனது பதினோராவது வயதிலேயே தான் ஒரு சிற்பியாக வர வேண்டும் என்று விரும்பினார். இவரது பாடசாலையின் கலைப்பிரிவு ஆசிரியர்களின் பெரும் ஆதரவுடன் இவர் இளமையிலேயே களிமண்ணில் உருவங்கள் செய்யவும், மரங்களில் கலைப்பொருட்கள் செய்யவும் தொடங்கியிருந்தார். இவை உடலை வருத்திச் செய்யும் வேலைகள் எனக் கருதி இவரது பெற்றோர் இவரது இந்தப் பாதையை ஆதரிக்கவில்லை.

இவர் 1915- 1916 இல் Castleford இல் கற்பித்தல்பணியைக் கற்று முடித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியரானார். 1917 இல் தனது 18வது வயதில் இராணுவசேவையில் இணைந்து கொண்டார். அங்கிருந்தவர்களில் இவரே இளையவராக இருந்தார். 1919 இல் ஒரு கலைக்கல்லூரியில் தனது கலைக்கல்வியைப் படிக்க முடிவு செய்தார். இவர் இராணுவத்தில் இருந்த போது செய்த சேவையின் காரணமாக படிப்பதற்கான உதவித் தொகையைப் பெற்று 1921 - 1924 இல் லண்டனில் உள்ள Royal College of Art இல் தனது கலைக்கல்வியைத் தொடர்ந்தார். 1932-1939 இல் Chelsea School of Art க்கு மாறி அங்கு சிற்பக்கலை வகுப்பினர்க்கு தலைமை சிற்ப விரிவுரையாளரானார்.[5]

சர்வதேச அங்கீகாரம்

தொகு

மகளின் பிறப்பையடுத்து ஹென்றி மூர் ஒரு தொடராக அம்மாவும் குழந்தையுமான சிற்பங்களை உருவாக்கினார். அதே வருடத்தில் இவர் முதற்தடவையாக அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு New Yorker Museum of Modern Art இனால் ஒரு பெரும் கண்காட்சி வைக்கப்பட்டு கௌரவிக்கப் பட்டார். 1948இல் Venice Biennale இன் சர்வதேச சிற்பப் பரிசை ஐப் பெற்றார். [6][7]

நிரந்தரக் கண்காட்சிகள்

தொகு

இவரது சிற்பங்களும் வரைபடங்களும் உலகம் முழுவதும் உள்ள பல கலை அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகளின் குறிப்பிடத்தக்க தொகுப்புக்கள் பின்வரும் கலைச்சேகரிப்புகளில் உள்ளன.

  • Henry Moore Foundation (Externer Link), Much Hadham, Hampshire, UK
  • Henry Moore Institute, Leeds, UK
  • Tate Gallery, London, UK[8]
  • Art Gallery of Ontario, Toronto, Kanada[9]
  • Yorkshire Sculpture Park, in der Nähe von Leeds, UK
  • Louisiana Museum of Modern Art, am Öresund nördlich von Kopenhagen

விருதுகள்

தொகு
  • 1948 சர்வதேச சிற்பப் பரிசு - வெனிஸ்

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Art Directory Henry Moore
  2. The Art Story, Henry MooreBritish| Sculptor
  3. Art Directory Henry Moore
  4. baskultur, Henry Moore in Bilbao
  5. Art Directory, Henry Moore
  6. www.zvab.com, Die archetypische Welt Henry Moores. Mit einem Abbildungsverzeichnis. Mit Anmerkungen und Bibliographie
  7. Hentry Moore[தொடர்பிழந்த இணைப்பு]
  8. The Guardian, In praise of… Henry Moore
  9. "AGO, The Henry Moore Sculpture Centre". Archived from the original on 2017-05-12. பார்க்கப்பட்ட நாள் 2018-05-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்றி_மூர்&oldid=4106672" இலிருந்து மீள்விக்கப்பட்டது