ஹெர்குலஸ் (விண்மீன் தொகுதி)

(ஹெர்குலஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹெர்குலஸ்(Hercules) விண்வெளியில் அதிகத் தோற்றப் பரப்பை அடைத்துள்ள பெரிய வட்டார விண்மீன் கூட்டங்களுள் ஒன்று. இது பெரிய வட்டாரமாக இருப்பினும் இதில் அதிக முதன்மை பெற்ற விண்மீன்கள் ஏதும் இல்லை. கிரேக்க நாட்டின் தொன்மவியல் மாவீரனாகத் திகழ்ந்த ஹெர்குலசைப் பெருமைப்படுத்தும் விதமாக இவ் வட்டாரத்திற்கு அவன் பெயர் சூட்டியுள்ளனர். 2 ஆம் நூற்றாண்டின் வானியலாளரான தாலமி பட்டியலிட்ட 48 விண்மீன் கூட்டங்களுள் ஹெர்குலசும் ஒன்றாகும். மேலும தற்போது அறியப்பட்டுள்ள 88 விண்மீன் கூட்டங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இது ஐந்தாவது மிகப் பெரிய விண்மீன் கூட்டமாகும். இவற்றில் 150 விண்மீன்களை இனமறிந்துள்ளனர். பெரும்பாலானவை வெறும் கண்களுக்குப் புலப்பட்டுத் தெரிகின்றன. ஹெர்குலஸ் விண்மீன் வட்டாரம் பூட்டெஸ் (Bootes ) வட்டாரத்திலுள்ள ஆர்க்டூரசுக்கும் வேகா வட்டாரத்திற்கும் இடையில் அமைந்திருக்கின்றது.

Hercules
எர்குலசு
விண்மீன் கூட்டம்
Hercules
எர்குலசு இல் உள்ள விண்மீன்கள்
சுருக்கம்Her
GenitiveHerculis
ஒலிப்பு/ˈhɜːrk[invalid input: 'jʉ']lz/,
genitive /ˈhɜːrk[invalid input: 'jʉ']l[invalid input: 'ɨ']s/
அடையாளக் குறியீடுHeracles
வல எழுச்சி கோணம்17 h
நடுவரை விலக்கம்+30°
கால்வட்டம்NQ3
பரப்பளவு1225 sq. deg. (5th)
முக்கிய விண்மீன்கள்14, 22
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு
106
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள்14
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள்2
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள்9
ஒளிமிகுந்த விண்மீன்β Her (Kornephoros) (2.78m)
மிக அருகிலுள்ள விண்மீண்Gliese 661
(20.62 ly, 6.32 pc)
Messier objects2
எரிகல் பொழிவுTau Herculids
அருகிலுள்ள
விண்மீன் கூட்டங்கள்
Draco
Boötes
Corona Borealis
Serpens Caput
Ophiuchus
Aquila
Sagitta
Vulpecula
Lyra
Visible at latitudes between +90° and −50°.
July மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.

தொன்மம்

தொகு

தெற்கில் ஆல்பா ஹெர்குலஸ் ஹெர்குலசின் தலை எனவும், வடக்கில் பீட்டா ஹெர்குலஸ் விண்மீன்கள் பாதங்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. மைசினேயின் அரசனான யுரைஸ்தியஸ், ஹெர்குலசை அழைத்து அவனிடம் 12 அடிமைகளைக் கொடுத்து டிராகானைக் கொல்லுமாறு கட்டளையிடுகின்றான். இந்த டிராகன் அடுத்துள்ள திராகோ வட்டாரத்தால் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஹெர்குலஸ் வட்டாரத்தில் ஹெர்குலசு தனது வலது முழங்காலை மடக்கி தரையில் வைத்து அமர்ந்து கொண்டு இடது பாதத்தை டிராகானின் தலை மீது வைத்திருப்பது போலக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.

தோற்றம்

தொகு
 
Traditional view of the Hercules constellation highlighting the quadrangle which forms the Keystone asterism.

இவ்வட்டாரத்தில் ஆல்பா ஹெர்குலசை விடப் பீட்டா ஹெர்குலஸ் தோற்றப் பிரகாசம் மிக்க விண்மீனாகும். ராஸ்அல்கீத்தி என்ற ஆல்பா ஹெர்குலஸ் 218 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிவப்பு நிறப் பெருவிண்மீனாக உள்ளது. ராஸ்அல்கீத்தி என்றால் அரேபிய மொழியில் மண்டியிட்டவன் தலை என்று பொருள் தருகின்றது.

ஹெர்குலஸ் விண்மீன் கூட்டத்தின் பரப்பு தொடர்ந்து விரிந்து சுருங்குவதால் இது ஒரு மாறொளிர் விண்மீனாக விளங்குகின்றது. அதனால் இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 3.1 முதல் 3.9 வரை மாற்றத்திற்கு உட்படுகின்றது. இது ஒரு எம்5 வகை விண்மீனாகும். இது ஒரியனில் உள்ள பெடல்ஜியூசை விடப் பெரியது. ஆல்பா ஹெர்குலசிலிருந்து 4.6 வினாடி கோண விலக்கத்தில் மஞ்சள் நிறத் துணை விண்மீன் ஒன்று 5.4 என்ற தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் ஹெர்குலசை 111 ஆண்டுகளுக்கு ஒருமுறைச் சுற்றி வருகிறது. இத் துணை விண்மீனே ஒரு நிறமாலை வகை இரட்டை விண்மீனாகக் காட்சியளிக்கின்றது. இதன் சுற்றுக் காலம் 52 நாட்கள் என்றும், துணை மற்றும் துணைக்குத் துணை விண்மீன்கள் விரிவடையும் வளிம மண்டலங்களைக் கொண்டுள்ளன என்றும் அறிந்துள்ளனர்.[1]

விண்மீன்கள்

தொகு
 
An alternative way to connect the stars of the constellation Hercules, suggested by H.A. Rey. Here, Hercules is shown with his head at the top.

ஹெர்குலசின் விட்டம் சூரியனின் விட்டத்தைப் போல 800 மடங்காக உள்ளது. கொரினிபோரஸ் (koreneforos) என்ற பீட்டா ஹெர்குலஸ் 102 ஒளி ஆண்டுகள் தொலைவில் தோற்ற ஒளிப்பொலிவெண் 2.77 உடன் நிறமாலையால் ஜி.8 வகை விண்மீனாக உள்ளது.[1] எப்சிலான் ஹெர்குலஸ் 85 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.92 தோற்ற ஒளிப்பொலிவெண்னுடன் A0 வகை விண்மீனாகவும் மியூ ஹெர்குலஸ் 27 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.42 தோற்ற ஒளிப்பொலிவெண்னுடன் ஜி5 வகை விண்மீனாகவும் காமாஹெர்குலஸ் 140 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.75 தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் A9 வகை விண்மீனாகவும் உள்ளன. ரோ ஹெர்குலஸ் ஒரு தோற்ற இரட்டை விண்மீனாகும். நெடிய இடைத் தொலைவுடன் தோற்றத்திற்கு அருகருகே இருப்பது போலத் தோன்றுவதால் இது உண்மையான இரட்டை விண்மீனில்லை. இவற்றைத் தொலை நோக்கியால் பகுத்துணர முடியும். இவற்றின் ஒளிப்பொலிவெண்கள் முறையே 4.6 , 5.4 ஆகும். [1]

ஹெர்குலஸ் வட்டாரத்தின் சிறப்பு அப்பகுதியில் காணப்படும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களாகும். இவற்றுள் எம்.13 மற்றும் எம்.92 என்று பதிவு செய்யப்பட்ட விண்ணுருப்புகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எம்13 வடக்கு வானில் தோற்றத்தில் அரை நிலவுப் பரப்பில் காணப்படுகின்றது. 23,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதில் சுமார் 5 லட்சம் விண்மீன்கள் உள்ளன. அண்டகக் கொத்து விண்மீன்கள் போலன்றி இதில் பல வெப்பமிக்க பெரு விண்மீன்கள் உள்ளன. எனினும் பிரகாசமிக்க விண்மீன்கள் குளிர்ந்த சிவப்பு நிறப் பெரு விண்மீன்களாக இருக்கின்றன. வெப்ப மிக்க நீல நிற விண்மீன்கள் இதில் மிக அரிதாகக் காணப்படுகின்றன. ஒரு சில விண்மீன்கள் நம்முடைய சூரியன் போல இருக்கின்றன. கோளாகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் பொதுவாக அதிகத் தொலைவிலும் மிக அதிக எண்ணிக்கையில் மாறொளிர் விண்மீன்களைக் கொண்டிருக்கும். எம்.13 ல், 15 குறுகிய அலைவு கால சிபிட்ஸ் வகை மாறொளிர் விண்மீன்களை அறிந்துள்ளனர்.

ஆழ் வான் பொருட்கள்

தொகு

கோளாகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் 130 – 300 ஒளி ஆண்டுகள் நெடுக்கைக்குட்பட்ட வெளியில் அடர்த்தியாகச் செரிவுற்றிருக்கும் விண்மீன்கள் உள்ளன. மிகவும் கவனத்தைக் கவருவது என்னவெனில் இதில் தூசிப் படலங்களோ, கரு வடிவங்களோ அல்லது படர்ந்து சூழ்ந்து காணப்படும் நெபுலாக்களோ சிறிதும் காணப்படவில்லை. மேலும் கோளாகக் கொத்து விண்மீன் கூட்டங்கள் நிலைப்புத்தன்மை மிக்க கட்டமைப்புகளாக உள்ளன. அவை எப்படி உருவாயின என்பது சரியாகத் தெரியாவிட்டாலும் பல டிரில்லியன் (10 ^ 12 ) ஆண்டுகளுக்கு அவை அடிப்படைமாற்றங்கள் ஏதுமின்றித் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம்.

அயோட்டா மற்றும் ஈட்டா ஹெர்குலசுக்கு மிகச் சரியாக இடையில் எம்.92 அமைந்துள்ளது.[1] இது எம்.13 ஐ விடவும் அதிகத் தொலைவில் (24000 ஒளி ஆண்டுகள்) இருக்கின்றது. இதில் பல வெப்ப மிக்க பெரு விண்மீன்கள் இருப்பினும் எம்.13 ஐ விடக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன.

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Ridpath & Tirion 2001, ப. 154-156.

வெளியிணைப்புகள்

தொகு