ஹேம் நாக் பாபுஜி
இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்
ஹேம் நாக் பாபுஜி (Hem Nag Babuji, மறைவு: 6, பெப்ரவரி, 2023) என்பவர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் ஆவார். இவர் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
ஹேம் நாக் புரொடக்சன்ஸ் என தன் பெயரிலேயே தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பட படங்களை தயாரித்துள்ளார், சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.[1] இவர் தனது திரைப்ப நிறுவனத்தில் காளி, கர்ஜனை, சுயம்வரம் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார்.[2] பல படங்களுக்கு நிதியாளராகவும், விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.
இறப்பு
தொகுஹேம் நாக் பாபுஜி மூப்பின் காரணமாக 6, பெப்ரவரி, 2023 அன்று சென்னையில் இறந்தார்.
தயாரித்த திரைப்படங்கள்
தொகு- காளி (1980)
- கர்ஜனை (1981)
- முரட்டு கரங்கள் (1986)
குறிப்புகள்
தொகு- ↑ "திரைப்பட தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி இன்று காலமானார்..!" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-02-07. பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
- ↑ "ரஜினி நடித்த 'காளி', 'கர்ஜனை' படங்களின் தயாரிப்பாளர் காலமானார்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.