ஹேம சந்திர ராய்சவுத்ரி

இந்திய வரலாற்றாளர்

ஹேம சந்திர ராய்சௌத்ரி (Hem Chandra Raychaudhuri) (8 ஏப்ரல் 1892 - 4 மே 1957 [1] ) ஒரு இந்திய வரலாற்றாசிரியர் ஆவார். இவர், பண்டைய இந்தியா பற்றிய ஆய்வுகளுக்காக அறியப்பட்டவர்.

ஹேமசந்திர ராய்சவுத்ரி
Hemchandra Raychaudhuri
பிறப்பு8 ஏப்ரல் 1892
பொனபாலிய, பரிசால் மாவட்டம், வங்காள மாகாணம் (தற்போது ஜலகட்டி மாவட்டம், வங்காளதேசம் )
இறப்பு4 மே 1957
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
பணிவரலாற்றாசிரியர்

தொழில் வாழ்க்கை

தொகு

இவர், கொல்கத்தாவின் பங்கபாசி கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். வங்காள கல்விச் சேவையில் சேர்ந்த உடனேயே, கொல்கத்தாவின் மாநிலப் பல்கலைக்கழகதில் (1914–16) பணியமர்த்தப்பட்டார். 1916 இல் இவர் சிட்டகொங் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். 1917 ஆம் ஆண்டில் அசுதோசு முகர்சி இவருக்கு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாறு மற்றும் கலாச்சாரத் துறையில் விரிவுரையாளராக பணியாற்ற ஒரு வாய்ப்பை வழங்கினார். 1921 ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றார். 1928இல் இவர் தாக்கா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் வாசகராக பணியாற்றினார். 1936 ஆம் ஆண்டில் டி. ஆர். பண்டார்கருக்குப் பிறகு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் கார்மைக்கேல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1952 இல் ஓய்வு பெற்றார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Raychaudhuri, Hemchandra (1972). Political History of Ancient India: From the Accession of Parikshit to the Extinction of the Gupta Dynasty, Calcutta: University of Calcutta, 7th edition, pp. iv-vi
  2. M. M. Rahman, ed. (2006). Encyclopedia of Historiography. Anmol Publications. p. 357. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-261-2305-6.

மேலும் வாசிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேம_சந்திர_ராய்சவுத்ரி&oldid=4139895" இலிருந்து மீள்விக்கப்பட்டது