ஹேவாவிதாரண மகா வித்தியாலயம்

ஹேவாவிதாரண மகா வித்தியாலயம் (Hewavitharana Maha Vidyalaya, சிங்களம்: හේවාවිතාරණ මහා විද්‍යාලය) என்பது இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் ராஜகிரிய என்னும் கொழும்பு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசுக் கலவன் பாடசாலை ஆகும். இப்பாடசாலை இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. ஆரம்பப் பிரிவில் தரம் 1 முதல் 5 வரையும், மேல்நிலைப் பிரிவில் தரம் 6 முதல் 13 வரை மாணவர்கள் பயில்கின்றனர். இது ஒரு பௌத்த மதப் பாடசாலையாகும்.

ஹேவாவிதாரண மகா வித்தியாலயம்
அமைவிடம்
கொழும்பு
இலங்கை இலங்கை
அமைவிடம்6°54′41″N 79°53′35″E / 6.91139°N 79.89306°E / 6.91139; 79.89306
தகவல்
வகைஅரசுப் பள்ளி
குறிக்கோள்எச்சரிக்கையைவிட முன்மாதிரி மேலானது
අවවාදයට වඩා ආදර්ශය උතුම්
தரங்கள்1–13
மாணவர்கள்2000 வரை
நிறம்நீலம் மற்றும் தங்க
        
இணையம்

விளையாட்டு தொகு

இப்பாடசாலையில் முக்கியமாக தடகள விளையாட்டுக்கள், துடுப்பாட்டம், கைப்பந்து ஆகிய விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன.

கல்லூரி விளையாட்டு அணிகளின் நிறங்கள்:

  • நீலம்     
  • சிவப்பு     
  • மஞ்சள்     
  • பசுமை