ஹைடத்தோடு
பொதுவாகஹைடத்தோடு என்பது சுரப்பு திசுக்களின் வகை, இது பொதுவாக ஆஞ்ஜியோஸ்பெர்மஸில் காணப்படுகிறது, இதன் இலையின் மேற்பரப்பு அல்லது இலை விளிம்புகளில் உள்ள துளைகள் வழியாக தண்ணீரை மெதுவாக வெளியேற்றுகின்றது. ரைனன்குலஸ் ஃப்யூட்யூட்டான்கள் போன்ற நீரில் மூழ்கி வாழும் தாவரங்களின் இலைகளில் ஹைடத்தோடு காணப்படுகின்றன[1] மேலும் காம்பானுலா ரோட்டுண்டிபோலியா போன்ற உலா் புதா் தாவரங்களின் இலைகளிலும் ஹைடத்தோடு காணப்படுகின்றன.[2] ஹைடத்தோடுகள் வாஸ்குலர் தொகுப்பு வழியாக வாஸ்குலர் அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. ஹைடத்தோடுகள் பொதுவாக நீர் கீரை, நீர் பதுமராகம், ரோஜா, பாட்சம் மற்றும் பல வகையான செடிகளில் காணப்படுகின்றன
ஹைடத்தோடுகள் இடைவெளிகளோடு கூடிய உயிருள்ள செல்களால் நிரப்பப்பட்டு காணப்படுகின்றன . இச் செல்கள் குளோரோபிளாஸ்ட்களை பெற்றோ அல்லது குளோரோபிளாஸ்ட்கள் அற்றோ மாற்றியமைக்கப்பட்டு கற்றை முனையில் காணப்படுகின்றது. இந்த செல்கள் (எப்பிதிம் செல்கள் என்று அழைக்கப்படுகின்றன) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை-புறப்பரப்பு அறைகளில் திறக்கப்படுகின்றன. இவை, வெளிப்படையான நீரோட்ட ஸ்டோமா அல்லது திறந்த துளை வழியாக வெளிப்புறத்தோடு தொடர்புகொள்கின்றன. நீரின் ஸ்டோமா ஒரு சாதாரண ஸ்டோமாவை போல காணப்படுகின்றது, ஆனால் பொதுவாக இது பெரியதாகவும், இயக்கத்தின் சக்தியை இழந்தும் காணப்படுகின்றது.
ஹைடத்தோடுகள் நீா் கசிதல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளன, இதில் நேர்மறையாக சைலம் அழுத்தால் திரவநீா் (வேர் அழுத்தம் காரணமாக) துகள்கள் வெளியேற்றப்படுகின்றன.[3] சில ஹைடத்தோடு சுரப்பிகளில் உள்ள சைட்டோடாக்ஸிக் கனிம அயனிகளின் செறிவு குறைப்பதற்காக உப்புத்தன்மையை தீவிரமாக உறிஞ்சி சுரக்கும் சுரப்பிகளைக் கொண்டிருக்கின்றன. இது இலைகளின் மேற்பரப்பில் வெள்ளை தூள்கள் நிறைந்த பொருளை உருவாக்கும்.
ஹைடத்தோடுகளின் இரண்டு வகைகள் உள்ளன:
- செயலற்ற ஹைடத்தோடு செல்கள், இலை நரம்புகளில் உள்ள எப்பிடொிமிஸ் செல்களால் உருவாகின்றன. (மெல்லிய சுவருடைய பாரன்கைமாவின் ஒரு பகுதி).
- செயல் ஹைடத்தோடு செல்கள், எப்பிடெமிஸ் செல்கள் தீவிரமாக நீரை இழக்கும் போது உருவாகின்றன.
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Mortlock, C. (1952). "The structure and development of the hydathodes of Ranunculus fluitans Lam.". New Phytologist 51: 129–138. doi:10.1111/j.1469-8137.1952.tb06121.x.
- ↑ Stevens, C.J.; Wilson, J; McAllister, H.A. (2012). "Biological Flora of the British Isles: Campanula rotundifolia". Journal of Ecology 100: 821–839. doi:10.1111/j.1365-2745.2012.01963.x. https://archive.org/details/sim_journal-of-ecology_2012-05_100_3/page/821.
- ↑ Taiz, Lincoln; Zeiger, Eduardo (2010). Plant Physiology (5th (International) ed.). Sinauer Associates, Inc. pp. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780878935659.