ஹைட்ரோஃபோனிக்ஸ்

விளக்கம்

          ஹைட்ரோபோனிக்ஸ் என்பது மண்ணைப் பயன்படுத்தாமல் வேறு சில ஊடகங்கள், நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்தி தாவரங்களை சிறிய பரப்பளவில் வளர்ப்பது ஆகும். தாவரத்தை வளர்ப்பதற்கு நிலம் தேவைப்படாது. சிமெண்ட் தரை போட்ட அறையில் கூட வளர்க்கலாம்.

படிநிலைகள்

     முக்கியமான Nutrient Film Technique முறையிலான ஹைட்ரோபோனிக்ஸ் சாகுபடியைப் பார்க்கலாம்.

° முதலில் வளர்ப்பு இடத்தைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

° PVC குழாய்களை படத்தில் காட்டியவாறு சாய்வாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

° குழாயில் குறிப்பிட்ட இடைவெளியில் துளையிட்டு அதில் சிறிய பிளாஸ்டிக் தொட்டிகளை இடம்பெறச் செய்யவும்.

° துளைகள் கொண்ட பிளாஸ்டிக் தொட்டியில் (netted pot)  ROCKWOOL என்ற ஊடகத்தை நிரப்பவும்.

° ஊடகத்தை நிரப்பிய பின்னர் விதைகளைத் தூவ வேண்டும்.

° அடுத்த கட்டமாக தாவரத்திற்கு ஏற்ற அளவு, நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்களை (fertilizers) பாசன நீருடன் கலந்து PVC குழாய்கள் வழியாக செலுத்தவும்.

° விதை முளைத்து, வேர்கள் பிளாஸ்டிக் தொட்டியின் துளைகள் வழியே வெளிச்சென்று தேவையான நீரையும் ஊட்டச்சத்தையும் எடுத்துக் கொள்ளும்.

° இவ்வூட்டச்சத்து கலந்த நீரானது (pH 6.0- 6.5), சாய்வாக அமைக்கப்பட்ட PVC குழாய்கள் மூலம் மறுசுழற்சி அடைந்து கொண்டே இருக்கும்.

° பம்ப் மூலம் மறுசுழற்சி அடைந்து தேவையான காற்றோட்டம் வேர்ப் பகுதிக்கு கிடைக்கும்.

° சரியான நேரத்தில் தாவரத்தை அறுவடை செய்யலாம்.

வளர்க்கக் கூடிய தாவரங்கள்

     விரைவில் வளரக் கூடிய கீரை வகைகளை இம்முறையில் வளர்க்கலாம். சல்லி வேருடைய தாவரங்களை வளர்க்கலாம். எ.கா. ஸ்ட்ராபெர்ரி, லெட்யூஸ், புதினா, கொத்தமல்லி மற்றும் கீரை வகைகள்.

நன்மைகள்

■ களர்நிலத்தைப் பற்றிய கவலை இல்லை

■ குறைந்த இடமே போதுமானது

■ தரமான விரைவான மகசூல் கிடைக்கும்

■ பூச்சி மற்றும் நோய்த் தாக்கல் மிக குறைவு

■ நகரப் பகுதிகளில் நடைமுறைப் படுத்தினால் நல்ல லாபம் கிடைக்கும்

பின்னடைவு

● முதலீடு மிக அதிகம்

● ஊட்டச்சத்து கலந்த நீரின் pH மற்றும் ECஐ கவனத்தில் கொள்ள வேண்டும்

● பம்ப் மின்சாரத்தை சார்ந்தது

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹைட்ரோஃபோனிக்ஸ்&oldid=3849611" இலிருந்து மீள்விக்கப்பட்டது