ஹோக்கிங் கதிர்வீச்சு

ஹாக்கிங் கதிர்வீச்சு என்பது, கருங்குழிகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கு இடப்பட்டுள்ள பெயர் ஆகும். இப்பெயர் இக்கதிர்வீச்சுப் பற்றி முதலில் கணித்தறிந்த ஸ்டீபன் ஹாக்கிங் என்பவரது பெயரைத்தழுவியது.[1] கருங்குழிகளிலிருந்து ஒளி உட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருங்குழிகளிலிருந்து துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றனவென்றும், அதன்மூலம் கருங்குழிகள் காலப்போக்கில் இல்லாமல் போய்விடலாம் என்றும், இவரது ஆராய்ச்சிகள் காட்டின.

இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும். ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்புகள், கருங்குழி (black holes)களுக்கும், வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகளில் உள்ளடங்கியுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோக்கிங்_கதிர்வீச்சு&oldid=2743246" இலிருந்து மீள்விக்கப்பட்டது