(89959) 2002 என்டி7

சிறுகோள்

(89959) 2002 என்டி7 ((89959) 2002 NT7) என்பது ஒரு புவியருகு விண்பொருள் ஆகும். இது 1.2 மைல்கள்[1] (2 கிமீ) அகலம் உடையது. நாசாவின் புவியருகு விண்பொருட்கள் கண்கானிப்பு திட்டத்தில் முதன் முதலில் கவனிக்கப்பட்ட விண்பொருள். இது பலெர்மோ தீங்கு அறியும் அளவுகோலில் நேர்மறை மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. 1 பிப்ரவரி 2019 அன்று இது புவியை தாக்குமெனக் கணிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகள், இப்புவியருகு விண்பொருள் புவியைத் தாக்கும் வாய்ப்பு மிகக்குறைவு எனவும், மில்லியனில் ஒரு பங்கு வாய்ப்பு தான் உள்ளது எனவும் கூறுகின்றது.[1]

தொடக்கத்தில் இதன் பலெர்மோ தீங்கு அறியும் அளவுகோலில் மதிப்பு 0.06 [2] ஆக இருந்தது. ஆனால் ஜூலை 25, 2002 அன்று செய்த ஆய்வின் படி பலெர்மோ தீங்கு அறியும் அளவுகோலில் மதிப்பு -0.25 ஆகக் குறைந்துள்ளது.

ஆகஸ்ட் 1, 2002 அன்று 2002 என்டி7, அபாய அட்டவணையிலிருந்து நீக்கப்பட்டது.[3]

அண்மையில் செய்த ஆய்வில் ஜனவரி 13, 2019 அன்று இந்தச் சிறுகோள் நம்மை 0.4078 வானியல் அலகு (61,010,000 கிமீ; 37,910,000 மைல்) தூரத்தில் பாதுகாப்பாகக் கடந்து செல்லுமென அறியப்பட்டுள்ளது.[4]

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 Asteroid 2002 NT7 Under Watch, But Probably Not Coming Our Way பரணிடப்பட்டது 2006-04-05 at the வந்தவழி இயந்திரம் (25 July 2002)
  2. "Space rock 'on collision course'". BBC News. 24 சூலை 2002. 2007-12-28 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Date/Time Removed". NASA/JPL Near-Earth Object Program Office. 2002-06-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-05-06 அன்று பார்க்கப்பட்டது. பரணிடப்பட்டது 2002-06-02 at the வந்தவழி இயந்திரம்
  4. "JPL Close-Approach Data: 89959 (2002 NT7)". 2011-09-12. 2011-11-04 அன்று பார்க்கப்பட்டது.

இதனையும் காண்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=(89959)_2002_என்டி7&oldid=3576267" இருந்து மீள்விக்கப்பட்டது