1% விதி (இணையப் பண்பாடு)

1% விதி அல்லது 90–9–1 கொள்கை (89:10:1 விகிதம் எனவும் சிலவேளை குறிக்கப்படுகிறது)[1] என்பது ஒரு கற்பிதக் கொள்கையினை பிரதிபலிக்கின்றது. அதன்படி கணினி இணைப்பில் பங்கேற்பதைவிட, அதிகமானோர் மெய்நிகர் சமூகத்தில் பதுங்கியித்தல் என்பதாகும். இவ்வழக்கு இணையச் சுழலில் சமமற்ற பங்களிப்பினையும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றது.

வட்ட விளக்கப்படம் பதுங்கியிருப்போர், பங்களிப்போர், உருவாக்குவோர் ஆகியவர்களின் விகிதப்படிகளைக் காட்டுகின்றது


வரையறை தொகு

1% விதி இணையத்தில் உள்ளடக்கங்களை உருவாக்கும் ஏறக்குறைய 1% பயனர்களைவிட அதைப்பார்ப்போரின் எண்ணிக்கை கூடுதலாகவுள்ளது எனக் கூறுகின்றது. இப்பதம் பென் மக்கொனெல் மற்றும் ஜக்கி கூபா[2] ஆகியோரால் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்னரும் இக்கருத்து பாவிக்கப்பட்டாலும்[3] இப்பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. உதாரணத்திற்கு: ஜிகாத்தியர்களின் பொதுவிடம் பற்றிய 2005 கற்கை 87% பயணர்கள் எப்போதுமே பதிவிடாமலும், 13% பயணர்கள் ஒருமுறை பதிவிட்டும், 5% பயணர்கள் 50 அல்லது அதற்கு மேலும் பதிவிட்டிருக்க 1% பயணர்கள் மாத்திரம் 500 மேல் பதிவிட்டிருந்தனர்.[4]

90–9–1 கொள்கை 1% பயணர்கள் உள்ளடக்கத்தை உருவாக்க, 9% பயணர்கள் அதை தொகுக்க, 90% பயணர்கள் அதை பங்களிப்புச் செய்யாமல் பார்க்கிறார்கள் என்கின்றது.

உசாத்துணை தொகு

  1. What is the 1% rule? by Charles Arthur, The Guardian, Thursday 20 July 2006
  2. McConnell, Ben; Huba, Jackie (May 3, 2006). "The 1% Rule: Charting citizen participation". Church of the Customer Blog. Archived from the original on 2010-05-11. பார்க்கப்பட்ட நாள் 2010-07-10.
  3. Horowitz, Bradley (February 16, 2006). "Creators, Synthesizers, and Consumers". Elatable. Blogger. பார்க்கப்பட்ட நாள் 2010-07-10.
  4. Awan, A. N. (2007b) 'Virtual Jihadist media: Function, legitimacy, and radicalising efficacy', in European Journal of Cultural Studies, vol. 10(3), pp. 389–408.

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=1%25_விதி_(இணையப்_பண்பாடு)&oldid=3592212" இலிருந்து மீள்விக்கப்பட்டது