1ஆம் உலக சாரணப் பேரணித் திரட்டு (1st World Scout Jamboree) 1920 இல் இடம்பெற்ற முதலாவது உலக சாரணப் பேரணித் திரட்டு ஆகும். இது இங்கிலாந்து நாட்டின் ஒலிம்பியாவில்[1] இடம்பெற்றது. இதில் 8,000 சாரணர்கள் கலந்துகொண்டனர். 30 சூலை 1920 தொடக்கம் 8 ஆகஸ்ட் 1920 வரை இது இடம்பெற்றது. இங்குப் பேடன் பவல் உலகப் பிரதமச் சாரணராகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.[2] இதற்கென எந்தச் சின்னமும் வெளியிடப்படவில்லை.[3]
1ஆம் உலக சாரணப் பேரணித் திரட்டு |
---|
அமைவிடம் | ஒலிம்பியா,இலண்டன் |
---|
நாடு | ஐக்கிய இராச்சியம் |
---|
Date | 30 சூலை 1920 தொடக்கம் 8 ஆகஸ்ட் 1920 வரை |
---|
Attendance | 8,000 சாரணர்கள் |
---|
|
Scouting portal |