1050 அலுமினியம் உலோகக் கலவை

அலுமினியத்தை அடிப்படையாகக் கொண்ட கலப்புலோகம்

1050 அலுமினியம் உலோகக் கலவை (1050 aluminium alloy) என்பது அலுமினியத்தை அடிப்படையாகக் கொண்டு வணிக ரீதியாக தூய்மை செய்யப்பட்ட (1000 அல்லது 1xxx தொடர்) கலப்புலோகமாகும். பிதுக்கி வார்த்தல் அல்லது உருட்டல் மூலம் தயாரிக்கப்படும் இவ்வகை கலப்புலோகம் வார்ப்புருக்களில் பயன்படுத்தப்படுவதில்லை. பொதுவாக மின் மற்றும் இரசாயன தொழில்களில் 1050 அலுமினியக் கலப்புலோகம் பயன்படுத்தப்படுகிறது. அதிக மின் கடத்துத்திறன், அரிப்பு எதிர்ப்பு மற்றும் சிறப்பான வேலைத்திறன் போன்றவை இதன் சிறப்புகளாகும். மற்ற உலோகக்கலவைகளை விட அதிக வெப்ப கடத்துத்திறன் கொண்டது என்பதால் 1050 கலப்புலோகம் சில சமயங்களில் வெப்பநீர்த் தொட்டிகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கலப்புலோகத்தில் கணிசமாக கலந்துள்ள உலோகங்களுடன் ஒப்பிடும்போது இது குறைந்த வலிமையைக் கொண்டுள்ளது. குளிர்வித்தல் செய்வதன் மூலம் இதை வலுப்படுத்த முடியும், ஆனால் வெப்பமூட்டல் மூலம் வலுப்படுத்த இயலாது. [1]

Al99.5, 3.0255 மற்றும் A91050 ஆகியவை இதன் மாற்றுப் பெயர்களாகும். பின்வரும் தரங்கள் இதை விவரிக்கின்றன. [2]

  • ஏ.எசு.டி.எம். பி 491: அலுமினியம் மற்றும் அலுமினியம்-உலோகக் கலவை ஆகியவற்றிற்கான தரநிலை விவரக்குறிப்பு பொது நோக்கத்திற்கான பயன்பாடுகளுக்காக பிதுக்கி வெளியேற்றப்பட்ட வட்டக் குழாய்கள் தயாரிப்பு
  • ஐ.எசு.ஓ 6361: அலுமினியம் மற்றும் அலுமினியம் உலோகக் கலவை தாள்கள், கீற்றுகள் மற்றும் தட்டுகள் தயாரிப்பு

வேதி இயைபு தொகு

1050 அலுமினியம் உலோகக் கலவையில் கலந்துள்ள உலோகங்களின் இயைபு பின்வருமாறு:

மேற்கோள்கள் தொகு

  1. Marks' Standard handbook for Mechanical Engineers, 8th Ed., McGraw Hill, p. 6-50
  2. 1050 (Al99.5, 3.0255, A91050) Aluminum. Retrieved on 2014-12-02.