1100 அலுமினியம் உலோகக் கலவை

அலுமினியக் கலப்புலோகம்

1100 அலுமினியம் உலோகக் கலவை (1100 aluminium alloy) என்பது அலுமினியத்தை அடிப்படையாகக் கொண்டு வணிக ரீதியாக தூய்மை செய்யப்பட்ட (1000 அல்லது 1xxx தொடர்) கலப்புலோகமாகும். குறைந்தபட்சம் 99% அலுமினியம் இக்கலப்புலோகத்தில் சேர்க்கப்படுகிறது. 1000 எண் தொடரில் அதிக அளவில் கலக்கப்படும் உலோகக் கலவையாக இது சிறப்பு பெற்றுள்ளது. இந்தத் தொடரில் இயந்திர ரீதியாக வலுவான கலப்புலோகமும் இதுவேயாகும். உலோகத்துண்டுகளைப் பிணைப்பதற்கு உதவும் பிணைப்பாணியாகவும் 1100 அலுமினியம் உலோகக் கலவை பயன்படுகிறது.

அதே நேரத்தில், உயர் மின் கடத்துத்திறன், வெப்ப கடத்துத்திறன், அரிப்பு எதிர்ப்பு மற்றும் வேலைத்திறன் போன்ற செயல்பாடுகளை, ஒப்பீட்டளவில் மற்ற தொடர் உலோகக் கலவைகளுடன் ஒப்பிடும்போது இது இலேசானதாகவும் நன்மைகளையும் வைத்திருக்கிறது. குளிர்வித்தல் செய்வதன் மூலம் இதைக் கடினப்படுத்தலாம், ஆனால் வெப்ப சிகிச்சை மூலம் இயலாது. [1]

Al99.0Cu, A91100 ஆகியவை இதனுடைய மாற்றுப் பெயர்களில் அடங்கும். 1100 மற்றும் இதன் பல்வேறு தரங்கள் ஐ.எசு.ஓ தரநிலைகளான 6361 மற்றும் ஏ.எசு.டி.எம் தரநிலைகள் பி209, பி210, பி211, பி221, பி483, பி491 மற்றும் பி547 போன்றயவற்றுக்கு நிகராக உள்ளன. [2]

வேதி இயைபு

தொகு

1100 அலுமினியக் கலப்புலோகத்தின் இயைபு பின்வருமாறு:[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Marks' Standard Handbook for Mechanical Engineers, 8th Ed., McGraw Hill, p. 6-75
  2. 2.0 2.1 1100 (Al99.0Cu, A91100) Aluminum. Retrieved on 2014-12-02.