1679 ஆர்மீனிய நிலநடுக்கம்
1679 ஆர்மீனிய நிலநடுக்கம் (1679 Armenia earthquake), யெரவன் நிலநடுக்கம் அல்லது கார்னி நிலநடுக்கம் 1679 ஆம் ஆண்டில் சூன் 4 அன்று ஆர்மீனியாவின் யெரெவன் பகுதியிலும், பின்னர் சஃபாவிட் ஈரானின் ஒரு பகுதியிலும் நிகழ்ந்தது.[2]
நிலநடுக்க அளவு | 6.4 Ms[1] |
---|---|
நிலநடுக்க மையம் | 40°12′N 44°42′E / 40.2°N 44.7°E [1] |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | யெரெவான் மாகாணம், சபாவிது ஈரான் |
அதிகபட்ச செறிவு | IX (Violent)–X (Extreme) [1] |
உயிரிழப்புகள் | 7,600 இறப்புகள்[1] |
நிலநடுக்கத்தின் விளைவாக ஏராளமான கட்டடங்கள் அழிந்தன. யெரெவனில் மிகவும் குறிப்பிடத்தக்க கட்டமைப்புகள் சேதமடைந்தன. யெரெவன் கோட்டை முற்றிலுமாக அழிக்கப்பட்டது, அவ்வாறு அழிந்தவைகளில் பின்வரும் தேவாலயங்களும் இருந்தன: போகோஸ்-பெட்ரோஸ், கட்டோகிகே, சோராவர் மற்றும் கெத்செமனே சேப்பல்.
அருகிலுள்ள கனகர் கிராமம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. கார்னியின் பண்டைய ஹெலனிஸ்டிக் கோயிலும் சரிந்தது. அழிந்து போயின என்று கூறப்பட்டுள்ள பல தேவாலயங்கள் மற்றும் மடங்கள் ஹாவுட்ஸ் தார், புனித சார்கிஸ் மடாலயம், ஹோவ்ஹான்னாவாங்க், கெக்காட், மற்றும் கோர் விரப் ஆகியவை ஆகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Utsu, T. R. (2002), "A List of Deadly Earthquakes in the World: 1500–2000", International Handbook of Earthquake & Engineering Seismology, Part A, Volume 81A (First ed.), Academic Press, p. 69, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0124406520
- ↑ "Երևանի պատմությունը". armenianhouse.org. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
- ↑ Murad Hasratyan (1995). "The medieval earthquakes of the Armenian Plateau and the historic towns of Ayrarat and Shirak (Dvin, Ani, Erevan)". Annali di Geofisica (Italian National Institute of Geophysics) 38 (5–6): 721. http://www.annalsofgeophysics.eu/index.php/annals/article/viewFile/4083/4150.