முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆள்கூற்று: 40°11′00″N 44°31′00″E / 40.183333°N 44.516667°E / 40.183333; 44.516667

யெரெவான்
Երևան
அரராத் மலைத்தொடர் பின்னணியுடன் யெரெவான்
அரராத் மலைத்தொடர் பின்னணியுடன் யெரெவான்
யெரெவான்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் யெரெவான்
சின்னம்
நாடு ஆர்மீனியா
தோற்றம்782 கி.மு.
அரசு
 • மேயர்கரென் கரபெத்யான் (Karen Karapetyan)
பரப்பளவு
 • நகரம்300
ஏற்றம்989.4
மக்கள்தொகை (2009)
 • நகரம்1
 • அடர்த்தி4,896
 • பெருநகர்1
நேர வலயம்ஒ.ச.நே.+4 (ஒசநே+4)
 • கோடை (பசேநே)ஒ.ச.நே.+5 (ஒசநே+5)
தொலைபேசி குறியீடு+374 10
இணையதளம்www.yerevan.am
Sources: Yerevan city area [1][2][3] Sources: City population [4]

யெரெவான் (Yerevan, ஆர்மீனியம்: Երևան, உச்சரிப்பு:jɛɾɛˈvɑn) ஆர்மீனியாவின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். ஹ்ராஸ்டன் (Hrazdan) நதிக் கரையில் அமைந்துள்ள இந்நகரமே ஆர்மீனியாவின் நிர்வாக, கலை, கலாசார மற்றும் தொழிற்துறை மையமாகும். இது 1918 முதல் தலைநகரமாக விளங்குகின்றது.

யெரெவானின் வரலாறு கிமு எட்டாம் நூற்றாண்டு வரை பழமையானதாகும். முதலாம் ஆர்கிஸ்தி மன்னனால் கி.மு. 782 இல் அரராத் சமவெளியின் மேற்குக் கரையில் எரெபுனி கோட்டை (Erebuni Fortress) அமைக்கப்பட்டது இந்நகரின் தோற்றம் ஆகும்[5]. முதலாம் உலகப்போரின் பின்னர் ஆர்மீனிய இன அழிப்பில் தப்பிய ஆயிரக்கணக்கான ஆர்மீனியர்கள் இவ்விடத்தில் குடியேறியதை அடுத்து, ஆர்மீனியாவின் தலைநகராக இது மாறியது. ஆர்மீனியா சோவியத் ஒன்றியத்தின் ஓர் அங்கத்துவ நாடானதிலிருந்து இந்நகரம் துரித வளர்ச்சியடைந்தது.

2009 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி யெரெவானின் மக்கள்தொகை 1,121,900 ஆகக் காணப்பட்டது[6].

யுனெஸ்கோவினால், 2012 ஆம் ஆண்டின் உலகப் புத்தகத் தலைநகரமாக யெரெவான் அறிவிக்கப்பட்டது[7].

வரலாறுதொகு

யெரெவான் நகரம் கிமு 800 முதல் உலகில் மக்கள் தொடர்ந்து வசித்து வரும் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகும். ஆர்மீனியாவின் 13வது தலைநகராக 1918 முதல் யெரெவான் உள்ளது. யெரெவான் அருகே வரலாற்றுப் புகழ் பெற்ற அரராத் மலை உள்ளது. யெரெவான் நகரத்தின் அருகே உள்ள மலை மீது கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட ததேவ் கிறிஸ்தவ மடாலயம் மிகவும் குறிப்பிடத்தக்கது.

யெரெவான் நகரம் துவக்கத்தில் ரோமானியர்கள், பார்த்தியப் பேரரசு கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அரேபியர்கள், மங்கோலியர்கள், துருக்கியர்கள், பாரசீகர்கள், ரஷ்யர்கள் என்று மாறி மாறி இதைத் தன்வசமாக்கிக் கொண்டார்கள். 1582-ல் துருக்கியர்கள் வசமானது. பின்னர் மீண்டும் ரஷ்யர்கள் கைக்குச் சென்றது.

1920-ல் இது அர்மீனியக் குடியரசின் தலைநகரானது. யெரெவான் பிங்க் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள எரிமலைப் பாறைகள் பிங்க் வண்ணத்தில் காணப்படுகின்றன. யெரெவானில் உள்ள பல கட்டடங்கள் இந்தப் பாறை கற்களால்தான் கட்டப்பட்டுள்ளன. அர்மீனியாவின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் யெரெவானில்தான் வசிக்கிறார்கள். பண்டைய காலத்தில் எரெபுனி என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த நகரம், பிறகு எரிவான் என்றும் தற்போது யெரெவான் என்றும் அழைக்கப்படுகிறது.

கிமு. 782ல் எழுப்பப்பட்ட ஒரு பெரும் கோட்டை, இந்த நகரின் அடையாளமாகவும் சரித்திரச் சின்னமாகவும் விளங்குகிறது. முதலாம் உலகப் போருக்குப் பின் 1915ல், ஒட்டாமன் பேரரசு, துருக்கியிலுள்ள ஆர்மீனியர்களை இனப்படுகொலை செய்தது. இனப் படுகொலையின்போது தப்பிய ஆயிரக்கணக்கான அர்மீனியர்கள் யெரெவான் நகரத்தில் குடியேறினார்கள். யெரெவான் நகரக் கோட்டை ஆர்மீனியர்களுக்கு பாதுகாப்பு வழங்கியது. யெரெவான் அர்மீனியாவின் தலைநகராக மாறியதற்கு இதுவும் முக்கியக் காரணம்.

பின்னர் யெரெவான் நகரம் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக விளங்கியது. சோவியத் யூனியன் கலைந்தபோது தனி நாடானது. அர்மீனியாவின் நிர்வாகம், கலாச்சார மையமாக எரெவான் விளங்குகிறது.[8]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யெரெவான்&oldid=2550896" இருந்து மீள்விக்கப்பட்டது