உலகப் புத்தகத் தலைநகரம்

உலகப் புத்தகத் தலைநகரம் (World Book Capital) என்பது, நூல்கள் மற்றும் வாசித்தல் துறைகளில் ஒரு நகரத்தின் செயற்பாடுகளின் தரம் மற்றும் முன்னேற்றத்தை அங்கீகரிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தினால் (யுனெஸ்கோ) அந்நகரத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயராகும்.

இது ஓர் ஆண்டின் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளான ஏப்ரல் 23 முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 22 வரையான காலப்பகுதியைக் கொண்டதாகும்.

உலகப் புத்தகத் தலைநகரங்கள்

தொகு

பின்வரும் நகரங்கள் உலகப் புத்தகத் தலைநகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன:

வருடம் நகரம் நாடு
2001 மத்ரித்   எசுப்பானியா
2002 அலெக்சாந்திரியா   எகிப்து
2003 புது தில்லி   இந்தியா
2004 ஆண்ட்வெர்ப்[1]   பெல்ஜியம்
2005 மொண்ட்ரியால்[2]   கனடா
2006 துரின்[3]   இத்தாலி
2007 பொகோட்டா[4]   கொலம்பியா
2008 ஆம்ஸ்டர்டம்[5]   நெதர்லாந்து
2009 பெய்ரூத்[6]   லெபனான்
2010 லியுப்லியானா[7]   சுலோவீனியா
2011 புவெனஸ் ஐரிஸ்[8]   அர்கெந்தீனா
2012 யெரெவான்[9]   ஆர்மீனியா
2013 பேங்காக்[10]   தாய்லாந்து
2014 Port Harcourt[11]   நைஜீரியா
2015 இஞ்சியோன்[12]   தென் கொரியா
2016 விராத்ஸ்சாஃப்[13]   போலந்து
2017 கொனாக்ரி[14]   கினியா

மேற்கோள்கள்

தொகு

வெளி இணப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகப்_புத்தகத்_தலைநகரம்&oldid=3235662" இலிருந்து மீள்விக்கப்பட்டது