1871 திசம்பர் 12 கதிரவ மறைப்பு

முழுமையான கதிரவ மறைப்பு ஒன்று 1871 திசம்பர் 12 இல் நிகழ்ந்தது. புவிக்கும் கதிரவனுக்கும் இடையே நிலா வரும் போது கதிரவ மறைப்பு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடம்பெறுகிறது. நிலாவின் தோற்ற விட்டம் கதிரவனுடையதை விட அதிகமாக இருக்கும் போது முழுமையான மறைப்பு ஏற்படுகிறது. இதன்போது, கதிரவனின் நேர்க் கதிர்கள் அனைத்தும் புவிக்கு வருவது தடுக்கப்பட்டு புவி இரவாகிறது. முழுமையான மறைப்பு புவியின் மேற்பரப்பு முழுவதும் ஒரு குறுகிய பாதையில் நிகழ்கிறது, பகுதி சூரிய மறைப்பு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தை சுற்றியுள்ள பகுதியில் தெரியும்.

திசம்பர் 12, 1871-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு
Map
மறைப்பின் வகை
இயல்புமுழு மறைப்பு
காம்மா0.1836
அளவு1.0465
அதியுயர் மறைப்பு
காலம்263 வி (4 நி 23 வி)
ஆள் கூறுகள்12°42′S 119°24′E / 12.7°S 119.4°E / -12.7; 119.4
பட்டையின் அதியுயர் அகலம்157 km (98 mi)
நேரங்கள் (UTC)
பெரும் மறைப்பு4:03:38
மேற்கோள்கள்
சாரோசு130 (44 of 73)
அட்டவணை # (SE5000)9215

அவதானிப்புகள்

தொகு
   

தொடர்பான மறைப்புகள்

தொகு

சாரோசு 130

தொகு

சாரோசு தொடர் 130 என்பது 18 ஆண்டுகள், 11 நாட்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் 73 கதிரவ மறைப்புகளின் நிகழ்வுகளாகும். சாரோசு தொடர் 1096 ஆகத்து 20 இல் பகுதி மறைப்பாக ஆரம்பமானது. முழுமையான கதிரவ மறைப்பாக 1475 ஏப்ரல் 5 இல் ஆரம்பித்தது. முழுமையான மறைப்புகள் 2232 சூலை 18 வரை தொடரும். இத்தொடரில் வலயக் கதிரவ மறைப்பு எதுவும் இடம்பெறாது. இத்தொடர் 73-ஆவது நிகக்ழ்வில் பகுதி மறைப்பாக 2394 அக்டோபர் 25 இல் முடிவடையும். இத்தொடரில் மிக நீண்ட முழுமையான மறைப்பு 1619 சூலை 11 இல் 6 நிமிடங்கள் 41 செக்கன்கள் நீடித்தது. இந்தத் தொடரில் உள்ள அனைத்து கதிரவ மறைப்புகளும் நிலாவின் சந்திரனின் இறங்கு கணுவில் நிகழ்கின்றன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 34
  2. "Saros Series catalog of solar eclipses". NASA.

உசாத்துணைகள்

தொகு