19-ஆம் நூற்றாண்டு தமிழ் மருத்துவ நூல்கள்
19-ஆம் நூற்றாண்டில் வெளியான தமிழில் வெளியான மருத்துவம் பற்றிய நூல்களின் பட்டியல் கீழே உள்ளது. இவை ஐரோப்பியர் இந்தியாவுக்கு வந்த பின்னர் மேலை நாட்டு மருத்துவத்தை பின்பற்றி எழுதப்பட்ட நூல்கள்[1]. ஒரு சில நூல்களில் மிகச் சிறிதளவு ஆயுர்வேத, சித்த முறை பற்றிய செய்திகளும் அடங்கியுள்ளன.
- பூமி சாஸ்திரம் (1832) - 250 பக்கங்களைக் கொண்ட முதல் தமிழ் மருத்துவ நூல் இரேனியசு என்பவர் எழுதினார். இந்நூல் பின்னர் பாடநூலாகவும் பயன்பட்டது[1]
- சுகாதார விளக்கம் (1894)
- மருத்துவ மாணாக்கியர்களுக்கும் சென்னை வைத்திய் வித்தியாசாலையில் கீழ்வகுப்பு மாணாக்கர்கட்கும் உபயோகமான கைப்புத்தகம் (1895)
- நோயில்லா வாழ்வு (1895)
- சுகாதார விளக்கம் (1896)
- சுகவழிச் சுருக்கம் (1896)
- சுகாதார விளக்கமும் வினாவும் (1898)
- சுகாதார விளக்கமும் வினாவிடையும் (1898)
- சுகாதார விளக்கம் (1899)
- ம. ஜகன்னாதரின் சரீர வினா-விடை (1866)
- கிரேயின் அங்காதி பாதம் (1872)
- மானிட ரகசியம் என்னும் சரீர சாஸ்திரம் (1900)
- சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் 4640 பக்கங்களில் தன் மாணவர்களின் உதவியுடன் மேலை நாட்டு மருத்துவத்தையும் அறிவியலையும் மொழிபெயர்த்தார்.
- கல்வின் கட்டரின் அங்காதிபாதம் சுகரணவாதம் உற்பாவனம் நூல் 204 பக்கம் (1852, 1857)
- மேன் செல்லின் பிரசவ வைத்தியம் பக்கம் 258 (1857)
- துருவிதரின் இரண வைத்தியம், பக்கம் 504, (1867)
- கிரேயின் மனுஷ அங்காதி பாதம், பகக்ம் 838 (1872)
- கூப்பரின் வைத்தியாகரம், பக்கம் 917 (1872)
- மனுஷ சுகரண கலைச்சொற்கள், பக்கம் 134 (1872)
- அருஞ்சொல் அகராதி, பக்கம் (??) (1875)
- வெல்சின் கெமிஸ்தம் - பக்கம் 516 (1875)
- டால்தனின் மனுஷ சுகரணம் - பக்கம் 590, (1883)
- வா நிங்கின் சிகிச்சா வாகடம் - பக்கம் 574 (1888)
- (மேலே உள்ள நூல்கள் யாவும் சாமுவேல் ஃபிஷ்கிறீன் அவர்களின் மேற்பார்வையில் மொழிபெயர்க்கப்பட்டு திருத்தப்பெற்றவை. தனெல். பி. சப்மன் 3 நூலும், ய. டன்வதர் ஒரு நூலும், பவுல் ஒரு நூலும், மொழிபெயர்த்தனர். சாமுவேல் ஃபிஷ்கிறீனின் மாணவர்களும் சேர்ந்து மொழி பெயர்த்தனர்)
- மா. ஜெகந்நாதநாயுடு, பதார்த்தகுணரத்நாகரம் (1867)
- மா. ஜெகந்நாதநாயுடு, பைஷ ஜகல்பம் (1879)
- மா. ஜெகந்நாதநாயுடு, இங்கிலீஷ் வைதியசங்கிரகம் (1906)
- மா. ஜெகந்நாதநாயுடு, பிரசவ வைத்தியம் (காலம்??)
- டாக்டர் தனுஷ்கோடி ராஜா, சுகாதார, துப்புரவிற்கான நூல் (1869). இது 1000 படிகள் அடிக்கப்பட்டது. இது அரசின் அறிவுரைப்படி தெலுங்கு மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது
- ஏ. ஜா. உவேரிங் துரை, மருத்துவர் இல்லாத ஊர் மக்களுக்கு மருந்தியல் நூல் (1843)