1962 மெக்சிகோ நகர கதிர்வீச்சு விபத்து

1962 மெக்சிகோ நகர கதிர்வீச்சு விபத்து (1962 Mexico City radiation accident) 1962 ஆம் ஆண்டு மார்ச்சு-ஆகத்து மாத காலப்பகுதியில் நிகழ்ந்தது. ஒரு பத்து வயது சிறுவன் வீட்டிற்கு பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த தொழில்துறை கதிர்வீச்சு மூலப்பொருளை எடுத்துச் சென்றபோது இவ்விபத்து நிகழ்ந்தது.[1] சரியான பாதுகாப்புக் கட்டுப்பாட்டில் இல்லாததால் கொண்டு செல்லப்பட்ட தொழிற்துறை கதிர்வீச்சு கோபால்ட்-60 குளிகையிலிருந்து வெளிப்பட்ட கதிவீச்சால் நான்கு பேர் இறந்தனர். பல நாட்கள் சிறுவன் அக்குளிகையை தனது சட்டைப் பையில் வைத்திருந்தான். பின்னர் அதை மெக்சிகோ நகரத்தில் உள்ள தனது வீட்டின் சமையலறை அலமாறியில் வைத்துவிட்டான்.

கோபால்ட்t-60 குளிகை

மார்ச்சு மாதம் 21 அன்று குளிகையைப் பெற்ற பின்னர், சிறுவன் 38 நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் மாதம் 29 அன்று இறந்தார். அடுத்ததாக சூலை மாதம் 10 ஆம் தேதி சிறுவனின் தாயார் இறந்தார். தொடர்ந்து ஆகத்து மாதம் 18 அன்று சிறுவனின் இரண்டு வயது தங்கையும் அக்டோபர் மாதம் 15 அன்று சிறுவனின் பாட்டியும் இறந்தார்கள். சிறுவனின் தந்தையும் கணிசமான அளவு கதிர்வீச்சைப் பெற்றார் என்றாலும் அவர் உயிர் தப்பினார்.[2][3][4] வேறு ஐந்து நபர்களும் கணிசமான அளவு கதிர்வீச்சைப் பெற்றிருந்தனர்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. International Journal of Radiation Biology, 1998, vol. 73, no. 4, p.437 Online: http://www.reocities.com/CapeCanaveral/Hangar/8929/Seminars/2009_05_RadiationAccidents.pdf பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம்
  2. Johnston, Wm. Robert. "Mexico City orphaned source, 1962". Database of radiological incidents and related events – Johnston's Archive. பார்க்கப்பட்ட நாள் 25 December 2016.
  3. Ortiz, P.; Oresegun, M.; Wheatley, J. (2002). "Lessons from major radiation accidents". Safety 21-1. 
  4. Smith, H. (1983). "Dose-effect relationships for early response to total body irradiation". Journal of the Society for Radiological Protection 3:5–10 (3): 5–10. doi:10.1088/0260-2814/3/3/001. Bibcode: 1983JSRP....3....5S. 
  5. Planning the Medical Response to Radiological Accidents p. 16.