1974 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

ஏழாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (VII Asian Games) செப்டெம்பர் 1 1974 முதல் செப்டெம்பர் 16 1974 வரை ஈரான் தெஹ்ரான் நகரில் நடைபெற்றது. இதில் 25 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 3100 வீரர்கள் பங்கேற்றனர். ஏழாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 16 விளையாட்டுகள் இடம்பெற்றன.

7வது ஆசிய விளையாட்டு போட்டிகள்
குறிக்கோள்எப்போதும் முன்னோக்கி
நிகழ்ச்சிகள்16 விளையாட்டுகளில் 200 போட்டிகள்
Main venueஅர்யமெஹர் மைதானம்
பாங்காங்க் 1970 பாங்காங்க் 1978  >

வரலாறு

தொகு

1962ஆம் ஆண்டு தொடங்கி, விளையாட்டுகள் பல நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டன. முதலாவதாக, புரவலன் நாடான இந்தோனேஷியா, அரசியல் மற்றும் மதப் பிரச்சினைகளால் இஸ்ரேல் மற்றும் சீனக் குடியரசு (தைவான்) விளையாட்டில் பங்கேற்க அனுமதி மறுத்தது. இதன் விளைவாக, ஐ.ஒ.சி.(IOC) விளையாட்டுப் போட்டிகளுக்கான அதன் ஸ்பான்சர்ஷிப்பை நீக்கியது மற்றும் ஐ.ஒ.சி. உறுப்பினர்களில் ஒருவராக இந்தோனேசியாவை நிறுத்தியது.[1] ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC),[2] தடகள கூட்டமைப்புகளின் சர்வதேச சங்கம் (IAAF) மற்றும் சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பு (IWF) ஆகியவையும் விளையாட்டுகளுக்கான தங்கள் அங்கீகாரத்தை நீக்கின.[3][4]

 
ஈரானிய 20 ரியால் நாணயத்தின் பின்புறம் - 1974 ஆசிய விளையாட்டுகளின் நினைவுச்சின்னம்

1970 இல், தேசிய பாதுகாப்பு மற்றும் நிதி நெருக்கடியின் காரணமாக தென் கொரியா விளையாட்டுகளை நடத்தும் திட்டத்தை கைவிட்டது; இருப்பினும், தென் கொரியாவில் இருந்து மாற்றப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மீண்டும் பாங்காக்கில் விளையாட்டுகளை நடத்துவதற்கு முந்தைய தாய்லாந்து கட்டாயப்படுத்தியது.[5] விளையாட்டு போட்டிகளுக்கு முன்னதாக, ஜப்பானிடம் போட்டிகளை நடத்தும்படி கேட்கப்பட்டது. ஆனால் ஒசாகாவில் நடந்த "எக்ஸ்போ '70" காரணமாக இந்த நிகழ்ச்சி நிராகரிக்கப்பட்டது.[6] ] பின்னர், 1974இல்,தெஹ்ரானில் நடைபெற்ற இந்த விளையாட்டுகள் உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது.[7]


 
7வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான நினைவு தங்கப் பதக்கம்; தெஹ்ரான் 1974

1974 ஆம் ஆண்டு தெஹ்ரானில் நடந்த இந்த விளையாட்டுகளில் ஓட்டப்பந்தய பிரிவைச் சேர்ந்த தடகள ஓடுதல் போட்டி மிகவும் பிரபலமான துறைகளில் ஒன்றாகும். ஆண்கள் பிரிவில், அந்த நேரத்தில் இந்த தடகள பிரிவில் பிரபலமான நபர்களாக கருதப்படும் மேனௌகர் ஷம்சிரி, ரெலா என்டெரி ஆகியோர் 110 மீட்டர் தடைகள், 100 மீட்டர் மற்றும் 800 மீட்டர், 400 மீட்டர் போட்டிகளில் கலந்து கொண்டனர். மேலும், 800 மீட்டர் தடை தாண்டுதல் சாம்பியன், 3000 மீட்டர் தடை ஓட்டத்தில் சாம்பியனான அஹ்மத் குடர்சி பங்கேற்றார்.

மொத்தப் பதக்கங்கள்

தொகு
  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 200
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 198
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 203
  • மொத்தப் பதக்கங்கள் - 601

நாடுகள் பெற்ற பதக்கங்கள்

தொகு

பதக்கப் பட்டியலில் இடம் பிடித்த முதல் எட்டு நாடுகளின் விவரம்:

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   சப்பான் 75 49 51 175
2   ஈரான் 36 28 17 81
3   சீனா 32 46 27 105
4   தென் கொரியா 16 26 15 57
5   இந்தோனேசியா 15 14 17 46
6   இசுரேல் 7 4 8 19
7   இந்தியா 4 12 12 28
8   தாய்லாந்து 4 2 8 14
மொத்தம் 200 198 203 601

சான்றுகள்

தொகு
  1. "Track: Asian Games Dropped By Olympics". Daytona Beach. 1962-08-23. https://news.google.com/newspapers?id=q3cjAAAAIBAJ&sjid=ZMoEAAAAIBAJ&pg=738,3903294&dq=1962+asian+games&hl=en. 
  2. "第4届 1962年雅加达亚运会". data.sports.163.com. Archived from the original on 2011-07-03. பார்க்கப்பட்ட நாள் 2010-08-14.
  3. "Penalty Dealt to Indonesia". Spokane Daily Chronicles. 1962-09-13. https://news.google.com/newspapers?id=kMESAAAAIBAJ&sjid=RvcDAAAAIBAJ&pg=4386,3223549&dq=1962+asian+games+iaaf&hl=en. 
  4. "Warning". The Age. 1962-08-30. https://news.google.com/newspapers?id=al8RAAAAIBAJ&sjid=jJYDAAAAIBAJ&pg=1306,4815390&dq=1962+asian+games+weightlifting&hl=en. 
  5. "第六届 1970年曼谷亚运会". Data.sports.163.com. Archived from the original on 2011-07-03. பார்க்கப்பட்ட நாள் 2010-07-22.
  6. "Thailand's Sporting Spirit". Pattaya Mail Sports. பார்க்கப்பட்ட நாள் 2010-07-22.
  7. "第六届 1970年曼谷亚运会". data.sports.163. Archived from the original on 2011-07-03. பார்க்கப்பட்ட நாள் 2010-10-09.

வெளியிணைப்புகள்

தொகு