1987 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1987 (1987 Indian vice presidential election), என்பது 1987ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தலாகும். குடியரசுத் தலைவராக ரா. வெங்கட்ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது துணைக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். எனவே இப்பதவிக்கு சங்கர் தயாள் சர்மா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தேர்தலின் இறுதி நாளான 21 ஆகத்து 1987 அன்று அறிவிக்கப்பட்டார்.[1] இந்தத் தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தால், தேர்தல் செப்டம்பர் 7, 1987 அன்று நடந்திருக்கும்.
| |||||||||||||||||
| |||||||||||||||||
|
அட்டவணை
தொகுதேர்தல் அட்டவணை ஆகத்து 4, 1952 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.[2]
வ. எண். | வாக்கெடுப்பு நிகழ்வு | தேதி | |
---|---|---|---|
1. | வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி | 18 ஆகஸ்ட் 1987 | |
2. | வேட்புமனு பரிசீலனைக்கான தேதி | 19 ஆகஸ்ட் 1987 | |
3. | வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி | 21 ஆகஸ்ட் 1987 | |
4. | வாக்கெடுப்பு தேதி | 7 செப்டம்பர் 1987 | |
5. | வாக்கு எண்ணும் தேதி | 7 செப்டம்பர் 1987 |
முடிவு
தொகுஇத்தேர்தலில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையினைச் சார்ந்த உறுப்பினர்கள் 790 பேரைக் கொண்ட வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் 26 பேரின் வேட்புமனுவை பரிசீலனைக்குப் பிறகு தள்ளுபடி செய்து, சங்கர் தயாள் சர்மாவின் வேட்புமனு மட்டுமே செல்லுபடியாகும் எனக் கருதி தேர்தல் அதிகாரி அறிவித்தார். ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் போட்டியிலிருந்ததால், சங்கர் தயாள் சர்மா 25 ஏப்ரல் 1952 அன்று துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இவர் 9 செப்டம்பர் 1987 அன்று பதவியேற்றார்.[2]