1 உலக வர்த்தக மையம்

ஒன்று உலக வர்த்தக மையம் ( 1 World Trade Center அல்லது 1 WTC; தற்போதைய கட்டிடம் துவக்க கட்டிடவேலைகளின்போது விடுதலைக் கோபுரம் எனப்பட்டது) நியூயார்க் நகரத்தில் கீழ் மன்ஹாட்டனில் அமைந்துள்ள இரு கட்டிடங்களாகும். இது பெரும்பாலும் மேற்கு அரைக்கோளத்திலேயே மிகவும் உயரமான வானளாவியான புதிய உலக வர்த்தக மையத்தின் முதன்மைக் கட்டிடத்தை குறிக்கிறது.[12] முதலிலிருந்த உலக வர்த்தக மையத்தின் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களில் அழிபட்ட வடக்கு இரட்டைக்கோபுரத்தின் பெயரைக் கொண்ட, 94-மாடி உயரமுள்ள ,[13][5] இந்த வானளாவி, 16-ஏக்கர் (6.5 ha) பரப்பளவுள்ள உலக வர்த்தக மைய வளாகத்தின் வடமேற்கு முனையில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் மேற்கில் மேற்குத் தெருவும் வடக்கில் வெஸ்ஸி தெருவும் தெற்கில் ஃபுல்ட்டன் தெருவும் கிழக்கில் வாசிங்டன் தெருவும் அமைந்துள்ளன. இந்தக் கட்டிடத்தின் அடித்தள வேலைகள் ஏப்ரல் 27, 2006இல் துவங்கின.[14] மார்ச்சு 30, 2009 அன்று நியூயார்க் மற்றும் நியூசெர்சி துறைமுக ஆணையம் இக்கட்டிடம் வழக்குச்சொல்லான விடுதலைக் கோபுரம் என்பதற்கு மாற்றாக இதன் சட்டப்படியானப் பெயரான ஒன்று உலக வர்த்தக மையம் என்றே அழைக்கப்படும் என்று உறுதி செய்தது.[1] இந்தக் கட்டிடத்தின் உயரம் 104 மாடிகளுக்கு இணையாக உள்ளது; இருப்பினும் உண்மையில் 94 மாடிகளே உள்ளன.[15]

1 உலக வர்த்தக மையம்
OneWorldTradeCenter.jpg
1 உலக வர்த்தக மையம், மேற்கு அரைக்கோளத்திலேயே மிக உயரமான வானளாவி - சூலை 2013.
மாற்றுப் பெயர்கள்
 • 1 WTC
 • விடுதலைக் கோபுரம் (2009க்கு முன்னர்)[1]
பொதுவான தகவல்கள்
நிலைமைமுழுமையானது
வகைஅலுவலகம், கவனிப்பு, தொடர்பியல்
கட்டிடக்கலைப் பாணிநவீன கட்டிடக்கலை
இடம்285 ஃபுல்ட்டன் தெரு, மன்ஹாட்டன் நியூ யோர்க் மாநிலம், 10007
அமெரிக்க ஐக்கிய நாடு
ஆள்கூற்று40°42′46.8″N 74°0′48.6″W / 40.713000°N 74.013500°W / 40.713000; -74.013500ஆள்கூறுகள்: 40°42′46.8″N 74°0′48.6″W / 40.713000°N 74.013500°W / 40.713000; -74.013500
கட்டுமான ஆரம்பம்ஏப்ரல் 27, 2006
ஆரம்பம்நவம்பர் 3, 2014[2]
செலவுஐஅ$3.9 பில்லியன் (ஏப்ரல் 2012 மதிப்பீடு)[3][4]
உயரம்
கட்டிடக்கலை1,776 ft (541.3 m) [5][6]
Tip1,792 ft (546.2 m) [5]
கூரை1,368 ft (417.0 m)[7]
உச்சித் தளம்1,268 ft (386.5 m) [5]
Observatory1,254 ft (382.2 m)[5]
நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை104 (+5 புவிகீழ் தளங்கள்)[5][8][note 1] மேல்தளம் தரையிலிருந்து 104வதாக கணக்கிடப்படுகிறது.
தளப்பரப்பு3,501,274 sq ft (325,279 m2)[5]
உயர்த்திகள்71[5]
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்டேவிட் சைல்ட்சு (இசுக்கிமோர், ஓவிங்சு & மெர்ரில்)
டேனியல் லிபெசுகைன்டு (2002)[9]
மேம்பாட்டாளர்நியூயார்க் மற்றும் நியூசெர்சி துறைமுக ஆணையம்[5]
அமைப்புப் பொறியாளர்டபுள்யூஎஸ்பி கேன்டர் செய்னுக்
முதன்மை ஒப்பந்தகாரர்டிசுமன் கட்டுமானம்
மேற்கோள்கள்
[5][10]

இந்தக் கோபுரத்தின் இரும்புக்கூடு ஆகத்து 30, 2012 அன்று முழுமையானது.[16][17] மே 10, 2013 இக்கட்டிடத்தின் இறுதி அங்கமான தூபி நிறுவப்பட்டது; இந்நிலையில் ஒன்று உலக வர்த்தக மையம் உலகின் நான்காவது உயரமான வானளாவியாக அமைந்தது. இந்தத் தூபியின் மூலமாக ஐக்கிய நாடுகள் விடுதலை அறிவித்த ஆண்டை நினைவுறுத்தும் வண்ணம் 1,776 அடிகள் (541 m) உயரத்தை அடைந்தது. [18][19][20] ஏப்ரல் 30, 2012 அன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரத்தைக் கடந்து நியூயார்க் நகரத்தின் மிக உயரமானக் கட்டிடமானது.[21][22] ஒன்று உலக வர்த்தக மையம் அமைந்துள்ள புதிய உலக வர்த்தக மைய வளாகம் நவம்பர் 3, 2014 அன்று திறக்கப்பட்டது.[2][5] இந்தப் புதிய வளாகத்தில் துவக்கத்தில் மூன்று வானளாவிகள் கட்டப்படும்.[23][24][25] இந்தக் கட்டுமானம் செப்டம்பர் 11, 2001 அழிபாடுகளை நினைவுகொள்ளும் வண்ணமாகவும் மீளமைக்கும் வண்ணமுமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.[26][27]

குறிப்புகள்தொகு

 1. மேற்தளம் 104வதாக கணக்கிடப்படுகிறது.

மேற்சான்றுகள்தொகு

 1. 1.0 1.1 Westfeldt, Amy (March 26, 2009). "Freedom Tower has a new preferred name". Associated Press. Silverstein Properties. Archived from the original on மே 31, 2009. https://www.webcitation.org/5hBhzvIg8?url=http://www.wtc.com/news/freedom-tower-has-a-new-preferred-name. பார்த்த நாள்: March 30, 2009. 
 2. 2.0 2.1 Josh Dawsey (October 23, 2014). "One World Trade to Open Nov. 3, But Ceremony is TBD". The Wall Street Journal. October 23, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 3. Brennan, Morgan (April 30, 2012). "1 World Trade Center Officially New York's New Tallest Building". Forbes. http://www.forbes.com/sites/morganbrennan/2012/04/30/1-world-trade-center-officially-new-yorks-new-tallest-building/. பார்த்த நாள்: July 26, 2013. 
 4. "Tower Rises, And So Does Its Price Tag". The Wall Street Journal. January 30, 2012. Retrieved February 2, 2012.
 5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 "One World Trade Center – The Skyscraper Center". Council on Tall Buildings and Urban Habitat. April 14, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 6. "One World Trade Center". Emporis.com. January 14, 2012 அன்று பார்க்கப்பட்டது.
 7. "One World Trade Center to retake title of NYC's tallest building". Fox News Channel. Associated Press. April 29, 2012. May 1, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Office Leasing". One World Trade Center. November 3, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 9. "1 World Trade Center" பரணிடப்பட்டது 2013-11-05 at the வந்தவழி இயந்திரம். WTC.com. Retrieved December 17, 2012.
 10. 1 உலக வர்த்தக மையம் at SkyscraperPage. Retrieved January 17, 2012.
 11. Stanglin, Doug (May 10, 2013). "Spire permanently installed on WTC tower". USA Today. http://www.usatoday.com/story/news/nation/2013/05/10/world-trade-center-spire/2149449/. பார்த்த நாள்: May 10, 2013. 
 12. Katia Hetter (November 12, 2013). "It's official: One World Trade Center to be tallest U.S. skyscraper". CNN. http://www.cnn.com/2013/11/12/travel/one-world-trade-center-tallest-us-building/index.html?hpt=hp_t2. பார்த்த நாள்: February 9, 2014. 
 13. "ONE WORLD TRADE CENTER: OFFICE LEASING". Unknown parameter |accessdat= ignored (|access-date= suggested) (உதவி)
 14. "Building of N.Y. Freedom Tower begins". USA Today. Associated Press. April 28, 2006. http://www.usatoday.com/news/nation/2006-04-27-ny-development_x.htm. பார்த்த நாள்: February 1, 2009. 
 15. "1 World Trade Center Opening Highlights Rebirth, Renewal". ABC News. November 4, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 16. "One World Trade Center construction updates". Lower Manhattan.info. February 14, 2014. டிசம்பர் 19, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. February 24, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 17. Higgs, Larry (August 30, 2012). "One World Trade Center steel skeleton completed". Asbury Park Press. http://www.app.com/article/20120830/NJNEWS/308300075/One-World-Trade-Center-steel-skeleton-completed?nclick_check=1. பார்த்த நாள்: August 30, 2012. 
 18. "Crews finish installing World Trade Center spire". CNN. May 10, 2013. http://www.cnn.com/2013/05/10/us/new-york-world-trade-center-spire/index.html?hpt=hp_abar_wknd. பார்த்த நாள்: July 17, 2013. 
 19. "Tallest buildings in NY". Skyscraperpage.com. June 23, 2012 அன்று பார்க்கப்பட்டது.
 20. "Tallest buildings under construction in the world". Skyscraperpage.com. June 23, 2012 அன்று பார்க்கப்பட்டது.
 21. "One World Trade Center On Top As Tallest Building In New York City". International Business Times. April 30, 2012. Retrieved February 6, 2013.
 22. "It's official: 1 WTC is New York's new tallest building". Daily News (New York). April 30, 2012. Archived from the original on மே 3, 2012. https://web.archive.org/web/20120503023258/http://www.nydailynews.com/life-style/real-estate/official-1-wtc-york-tallest-building-article-1.1069925?localLinksEnabled=false. பார்த்த நாள்: April 30, 2012. 
 23. "Design Overview". 9/11 Memorial. 3 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
 24. Handwerker, Haim (November 20, 2007). "The politics of remembering Ground Zero – Haaretz – Israel News". Haaretz. பிப்ரவரி 20, 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. நவம்பர் 5, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 25. Herzenberg, Michael (September 7, 2011). "Mayor, WTC Developer Say Trade Center Site Has New Lease On Life". NY1. Archived from the original on செப்டம்பர் 21, 2011. https://web.archive.org/web/20110921173815/http://www.ny1.com/content/top_stories/146573/mayor--wtc-developer-say-trade-center-site-has-new-lease-on-life. பார்த்த நாள்: September 8, 2011. 
 26. Walsh, Edward (September 15, 2001). "Bush Encourages N.Y. Rescuers" (PDF). தி வாசிங்டன் போஸ்ட்: pp. A10. http://old.911digitalarchive.org/crr/documents/1126.pdf. பார்த்த நாள்: July 31, 2010. [தொடர்பிழந்த இணைப்பு]
 27. "Address to a Joint Session of Congress and the American People". The White House. September 20, 2001.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1_உலக_வர்த்தக_மையம்&oldid=3352795" இருந்து மீள்விக்கப்பட்டது