20-ஆம் நூற்றாண்டு தமிழ் மருத்துவ நூல்கள்

20-ஆம் நூற்றாண்டில் தமிழில் வெளியான மருத்துவம் பற்றிய நூல்களின் பட்டியல் கீழே உள்ளது. இவை ஐரோப்பியர் இந்தியாவுக்கு வந்த பின்னர் மேலை நாட்டு மருத்துவத்தைப் பின்பற்றி எழுதப்பட்ட நூல்கள்[1]. ஒரு சில நூல்களில் மிகச் சிறிதளவு ஆயுர்வேத, சித்த முறை பற்றிய செய்திகளும் அடங்கியுள்ளன.

மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிறீனுக்குப் பிறகு பலர் தமிழில் மருத்துவ அறிவியல் நூல்களை 1950 இற்கு முன்னர் எழுதியுள்ளனர். அவர்களில் கீழ்க்காண்பவர்களை முனைவர் சு. நரேந்திரன் அடையாளம் காண்கிறார்[1] எசு.எசு. முனுசாமியார், பி.எசு. ஈசுவரம், மருத்துவர் கே.எசு. துரைசாமி பண்டிதர், எம். ஏகாம்பரநாதன், மணிசங்கர் கோவிந்தராசு, மருத்துவர் பிலிப் எசு. நெல்சன், கே. வெங்கடேசர், மருத்துவர் சவுரிராயன் ஏசுதாசன், மருத்துவர் பாரசுட்டர் பேற்றன், தி. இராசரத்தினர், சுவாமி சுத்தானந்த பாரதி, ஆ. அருள் தங்கையா போன்றோர்கள்.

  1. எஸ்.எஸ். முனுசாமி முதலியார், தேக தத்துவ சாஸ்திரம் (1901)
  2. பி.எஸ். ஈஸ்வரம் பிள்ளை, மெட்டீரியா மெடிக்கா (1911)
  3. கே. எஸ். துரைசாமி பண்டிதர், சுகாதார ஜீவரக்ஷாமிர்தம் (1915)
  4. எஸ். மூர்த்தி கம்பெனி, ஆரோக்கிய போதினி முதல் புத்தகம் (முதலில் தெலுங்கில் பின்னர் தமிழில்)
  5. சாமுவேல் (இரங்கூனில் இருந்து) மானிட மர்ம சாஸ்திரம் என்னும் சிசு உற்பத்தி சிந்தாமணி (1920)
  6. மணிசங்கர் கோவிந்தராஜூ, காம சாஸ்திரம், (1920)
  7. மருத்துவர் பிலிப் எஸ். நெல்சன், மருத்துவர் ஏ. சி. செல்மனின் ஆரோக்கியமும் நீடித்த ஆயுசும் என்னும் ஆங்கில நூலில் மொழி பெயர்ப்பு (1924)
  8. கே. வெங்கடேசய்யர், சுகாதார வாரம் (1925)
  9. கே. ஏ. ராஜா, கண்ணோய் (1927)
  10. சிவ. ராமலிங்கம் பிள்ளை, சுகவழி (1928)
  11. டாகடர் சவுரிராயன் ஏசுதாசு, சுகாதார விளக்க 10 கற்பனைகள் (கையேடு) (1929)
  12. எஸ். கஸ்தூரிரங்க அய்யங்கார், கண்வலி (1929)
  13. கே. ஏ. ராஜா, ஈ என்னும் கொலைகாரன் (1929)
  14. பூரண ஜீவியம் (பால்வினை நோய் குறித்த நூல்) (1930)
  15. மருத்துவர் சவுரிராயன் ஏசுதாசன், மருத்துவர் பாரஸ்டர் பேற்றன், கிராம சுகாதாரம் (1931)
  16. சரீர பரிசோதனை (மூன்றாம் பாகம்) (1931)
  17. தி. இராஜரத்தின முதலியார், இங்கிலீஷ் தமிழ் வைத்திய சிகாமணி மெடிக்கல் பிராட்கிஷனர் (392 பக்கம்) (1936)
  18. ஆ. அருள் தங்கையா, நாட்டுபுறத்து மருத்துவர் (மருத்துவர் ஹெட்ஸ்லரின் நூலின் தமிழாக்கம்)(1938)
  19. ஆர். எம்.ருக்மணி, உங்கள் குழந்தை, மக்களின் வளர்ப்பும் உளநூலும் (1947)
  20. மருத்துவர் திரிபுரசுந்தரி, தாய்மை (1948)
  21. ஜே.பி. மாணிக்கம், இளைஞர் விக்கியான சாஸ்திரம் - மூன்றாம் புத்தகம்
  22. பெ. தூரன், பாரம்பரியம் (1949)
  23. மருத்துவர் அ. சின்னத்தம்பி, அயனாந்த தேச நோய்கள் (1949), இலங்கை
  24. மருத்துவர் ஒ. சோமசுந்தரம், மருத்துவர் ட். ஜெயராமகிருஷ்ணன், மனநோயும் இன்றைய மருத்துவமும் (1951), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  25. மருத்துவர் அ. கதிரேசன், நீரிழிவு - க்ஷயரோகம் (1954) தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்
  26. மருத்துவர் எஸ். என். ராமசாமி, புற்றுநோய் (1957), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  27. மருத்துவர் எஸ். என். ராமசாமி, சுகப் பிரசவம் (1958), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  28. மருத்துவர் என். வானமாமலை, மருத்துவர் எ.எஸ். தோத்தாத்ரி, உடலியல் மருத்துவ வரலாறு (1962),நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  29. மருத்துவர் அ. கதிரேசன், என்புருக்கி நோய் (1965), தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்
  30. மருத்துவர் மணிமேகலை (மொழிபெயர்ப்பு) மகப்பேறும் மாதர் நோயும் (1966), தமிழ்நாடு அரசு பாடநூல் #நிறுவனம்
  31. மருத்துவர் அ. கதிரேசன், செல்லிலிருந்து சோதனைக் குழாய் வரை, (1966) ஹிக்கின் பாதம்ஸ், சென்னை தமிழ்நாடு.
  32. மருத்துவர் அ. கதிரேசன், புற்றுநோய், (1967) தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்
  33. மருத்துவர் அ. கதிரேசன், க்ஷய நோயும் தடுப்பு முறைகளும் (1968), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  34. மருத்துவர் அ. கதிரேசன், உங்கள் குழந்தை (1968), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  35. சா. ராஜதுரை, மருத்துவக் கலை அன்றும் இன்றும் (1969)
  36. மருத்துவர் அ. சின்னத்தம்பி, மகப்பேறு மருத்துவம் (1969), இலங்கை
  37. மருத்துவர் அ. கதிரேசன், மாரடைப்பு நோய் தீர்வும் தடுப்பு முறைகளும் (1970), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  38. மருத்துவர் தி. திருஞானம், குழந்தை வளர்ப்பும் முறைகளும் (1971), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  39. மருத்துவர் அ. சின்னத்தம்பி, பிரயோக உடற்றொழிலியல் (மொழிபெயர்ப்பு) (1971), இலங்கை
  40. மருத்துவர் ஜி. வெங்கடசாமி, டி. சரோஜினி, எஸ்.கே. துரைராஜ், ஆர், சேது (மொழிபெயர்ப்பு) உடலியங்கியல் பகுதி 1-4, தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் (1971-2)
  41. மருத்துவர் அ. கதிரேசன், மூளையை நம்பலாமா? (1972), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  42. மருத்துவர் அ. சின்னத்தம்பி, நலம் பேணல் விஞ்ஞானம் (1972), இலங்கை
  43. ஏ. எம். சாலிகி (சா ராஜதுரை - மொழிபெயர்ப்பு), துணை செவிலி மருத்துவப் பெண்கள் பாடப்புத்தகம் (1972)
  44. மருத்துவர் ஜி.வெங்கடசாமி, மருத்துவர் லலிதா காமேஸ்வரன், மருத்துவர் அ. கதிரேசன், தொழில்வழி நோய்கள் (தொகுப்பு நூல்)(1975), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  45. மருத்துவர் அ. கதிரேசன், மார்பு நோய்கள் (1976), தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்
  46. மருத்துவர் ஜி.வெங்கடசாமி, மருத்துவர் லலிதா காமேஸ்வரன், மருத்துவர் அ. கதிரேசன், வைட்டமின்கள் (தொகுப்பு நூல்)(1975), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
    1. மருத்துவர் அ. கதிரேசன், உங்கள் இருதயம், (1975), என்.சி.பி.எச், சென்னை
  47. மருத்துவர் ஜி.வெங்கடசாமி, மருத்துவர் லலிதா காமேஸ்வரன், மருத்துவர் அ. கதிரேசன், வயிற்றுப் போக்கும் வயிற்றுக் கடுப்பும் (தொகுப்பு நூல்)(1976), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  48. மருத்துவர் ஜி.வெங்கடசாமி, மருத்துவர் லலிதா காமேஸ்வரன், மருத்துவர் அ. கதிரேசன், ஹார்மோன்கள் (தொகுப்பு நூல்)(1976), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  49. மருத்துவர் எஸ்.எம். மணிவண்ணன், மருத்துவத் தாதியரும் உடற்கூற்றியலும் உடலியங்கியலும், (1977), தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்
  50. மருத்துவர் ஜி.வெங்கடசாமி, மருத்துவர் லலிதா காமேஸ்வரன், மருத்துவர் அ. கதிரேசன், இரத்த வாந்தியும் சளியில் இரத்தமும்(தொகுப்பு நூல்)(1977), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  51. மருத்துவர் ஜி.வெங்கடசாமி, மருத்துவர் லலிதா காமேஸ்வரன், மருத்துவர் அ. கதிரேசன், பூச்சிகளால் பரவும் நோய்களும் தடுப்பு முறைகளும் (தொகுப்பு நூல்)(1977), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  52. மருத்துவர் தி.வெங்கடகிருஷ்ண அய்யங்கார், உணவும் ஊட்டமும் (1978)தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்
  53. மருத்துவர் ஏ.ச். தம்பையா, தோல் வியாதிகள்,(1978)தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்
  54. மருத்துவர் என். அரங்கபாஷ்யம், து. ஞானப்பிரகாசம், இரைப்பை, குடல், மலக்குடல் (1978),தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்
  55. சுகிகரன் ரங்கசாமி, உடல் பருமன் (1978)
  56. மருத்துவர் பி. சந்திரா, குழந்தைப் பருவ நோய்களும் குழந்தைகள் பாதுகாப்பும் (1979), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  57. மருத்துவர் பி. சந்திரா, குழந்தை வளர்ப்பு (1979), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  58. கல்வி கோபாககிருஷ்ணன், என் கதை -காது (1980)
  59. மருத்துவர் அ. சின்னத்தம்பி, அறுவை வைத்திய நலம்பேண்டல் (1980), இலங்கை
  60. கல்வி கோபாககிருஷ்ணன், தொற்றுநோய்களும் தடுப்பு முறைகளும் (1980), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  61. மருத்துவர் அ. கதிரேசன், மனித உடற்கூறு இயலும் உடல் இயங்கு இயலும் (1980), மீர், முன்னேற்றப்பதிப்பகம்
  62. ஆபத்துக்கு முதலுதவி (1981)
  63. மருத்துவர் கலவை மு. முபாரக் அலி, முதலுதவி (1982) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  64. மருத்துவர் கே. என். ராஜன், தொழி சார்பு நுரரயீரல் நோய்கள் (1982), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  65. கல்வி கோபாககிருஷ்ணன், சத்துணவுத் திட்டம் (1982), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  66. மருத்துவர் சுப. சதாசிவம், விஞ்ஞான நோக்கில் நோய் நீக்கும் மூலிகைகள் (1983), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  67. மருத்துவர் அ. கதிரேசன், அனைவருக்குமான உடல் இயங்கு இயல் (1983) மீர், முன்னேற்றப்பதிப்பகம்
  68. மருத்துவர் அ. கதிரேசன், காது, மூக்கு தொண்டை (1985), முன்னேற்றப்பதிப்பகம்
  69. மருத்துவர் சு. நரேந்திரன், நோயை வெல்வோம் (1985), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  70. மருத்துவர் அ. கதிரேசன், செவிலியருக்கான கையேடு (1987), மீர் பதிப்பகம், மாசுக்கோ
  71. சந்திரா ஆசீர்வாதம், லீலாவது லூத்தர், மக்கள் மருத்துவம் (1988)
  72. எஸ். தேவராஜன், சுகாதாரப் பணியாளர் பாட புத்தகம் (1988)
  73. மருத்துவர் அ. கதிரேசன், காசநோய் (பட்டப்படிப்பு மருத்துவ மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல்); தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பாடநூல்கள் வரிசை
  74. மருத்துவர். சு. நரேந்திரன், பொது அறுவை மருத்துவம் (பட்டப்படிப்பு மருத்துவ மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல்); தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பாடநூல்கள் வரிசை; (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)
  75. மருத்துவர் லெ. சிவராமன், அறுவை சிகிச்சை நோய்நாடல் (பட்டப்படிப்பு மருத்துவ மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல்); தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பாடநூல்கள் வரிசை; (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)
  76. மருத்துவர் மு. துளசிமணி, மருந்தியல், பட்டப்படிப்பு மருத்துவ மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல்); தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பாடநூல்கள் வரிசை
  77. மருத்துவர் எம். முத்து, உடற்கூறு (கையும் நெஞ்சுப் பகுதியும்); பட்டப்படிப்பு மருத்துவ மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல்); தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பாடநூல்கள் வரிசை
  78. மருத்துவர் ந. கிருட்டினமூர்த்தி, உடற்கூறு (வயிறும், கால் உறுப்புகளும்) பட்டப்படிப்பு மருத்துவ மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல்); தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பாடநூல்கள் வரிசை
  79. மருத்துவர் ஞா. இராஜராஜேசுவரி, மருத்துவர் அ. ஜெகதீசன், குழந்தை நல மருத்துவம் (இரண்டு தொகுதிகள்)
  80. மருத்துவர் அ. கதிரேசன், காலரா கட்டுப்படுத்தலும் வழிமுறைகளும் (மொழிபெயர்ப்பு), (1995) உலக சுகாதாரக் கழகம்
  81. மருத்துவர் அ. கதிரேசன், காசநோய் மருத்துவம் (மொழிபெயர்ப்பு), (1995),உலக சுகாதாரக் கழகம்
  82. மருத்துவர் அ. கதிரேசன், தொற்றுநோய்கள், (1999), பாவை பதிப்பகம், சென்னை
  83. பேராசிரியர் எஸ்.எம். பாலாஜி, உதடு அண்ணப்பிளவு-நவீன சிகிச்சை முறைகள் (2001). மருத்துவர் #எஸ்.எம். பாலாஜி பப்ளிகேஷன்ஸ். pp. 220.
  84. செ. ஆனைமுகன், மகப்பேறும் மகளிர் மருத்துவமும் (2003).

இவை தவிர,

  1. மணிமேகலைப் பிரசுரம் 40 நூல்களும்,
  2. சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் 11 நூல்களும்,
  3. வானதி பதிக்கம் 12 நூல்களும்,
  4. பூம்புகார் பதிப்பகம் 8 நூல்களும்,
  5. கற்பகம் புத்தகநிலையம் 12 நூல்களும் மருத்துவத்தைப் பற்றி வெளியிட்டிருக்கின்றன[1]

களஞ்சியங்கள்

தொகு
  1. தமிழ்க் கலைக்களஞ்சியம் (1954-1968) பத்துத் தொகுதிகளில் மொத்தம் 228 கட்டுரகள் மருத்துவத்தைப் பற்றி உள்ளன[1].
  2. தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட குழந்தைகள் கலைக்களஞ்சியத்தில் 60 கட்டுரைகள் மருத்துவத்தைப் பற்றி உள்ளன.
  3. மருத்துவக் களஞ்சியம் மொத்தம் 12 தொகுதிகள் (1994 முதல் 2003 வரை)
  4. தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் கலைக்களஞ்சியத்தில் (19 தொகுதிகள்) மொத்தம் 1694 கட்டுரைகள் மருத்துவம் சார்ந்தது.

அகராதிகள்

தொகு
  1. டி.வி. சாம்பசிவம் பிள்ளையின், Tamil English Dictionary of Medicine, Chemistry and Allied Sciences Based on Indian Medical Science (1931), சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்
  2. மணவை முஸ்தாபா, மருத்துவ அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி (1994)
  3. அ.கி.மூர்த்தி, அறிவியல் அகராதி (மருத்துவச் சொற்களும் உள்ளன) (1994)
  4. மருத்துவர் சாமி சண்முகம் மருத்துவக் கலைச் சொற்கள் (1996) - 17,000 சொற்கள்
  5. ச. சம்பத்குமார், மருத்துவ அறிவியல் அகராதி (2000) 786 பக்கங்கள் கொண்ட அகராதி
  6. முனைவர் நே. ஜோசப், மருத்துவக் கலைச்சொற்கள்" (2002), 8000 சொற்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம்

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 சு. நரேந்திரன் (பதிப்பாசிரியர்:இராதா செல்லப்பன்) (2008). மருத்துவத் தமிழ் வரலாறும் வளர்ச்சியும் (நூல்:பல்கலைத் தமிழ்-அறிவியல் தமிழ்). திருச்சிராப்பள்ளி: பாரதிதாசன் பல்கலைக்கழகம். p. 252.