2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி (திரைப்படம்)

2001: ஏ ஸ்பேஸ் ஒடிஸி (2001: A Space Odyssey) ( பொருள்; 2001: ஒரு விண்வெளிப் பயணம்) என்பது 1968 ஆண்டைய காவிய அறிவியல் புனைகதைத் திரைப்படம் ஆகும். இப்படத்தை இஸ்டான்லி குப்ரிக்கு தயாரித்து இயக்கியுள்ளார். ஆர்தர் சி. கிளார்க்கின் ‘தி சென்ட்டினெல்’ என்ற சிறுகதைதான் ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’ படத்துக்குத் தொடக்கப்புள்ளி. அந்தக் கதையை குப்ரிக்கும் கிளார்க்கும் சேர்ந்து புதின வடிவில் விரிவாக்க ஆரம்பித்து, அதன் அடிப்படையிலேயே படத்தை உருவாக்கி, படம் வெளியானதையடுத்து, புதினமும் வெளியிடப்பட்டது. இந்தப்படமானது புரிந்துகொள்ள மிகவும் கடினமானதாக இருந்த்தாக கருதப்பட்டாலும், இந்தப் படத்தில் விளக்கங்கள் ஏதும் அளிக்கப்படவில்லை. மாறாக, பார்வையாளர்களை அவர்களுக்கு விருப்பமான விளக்கங்களைக் கொடுத்துக்கொள்ள இயக்குநர் தூண்டினார்.

ஏ ஸ்பேஸ் ஒடிசி
2001: A Space Odyssey
A painted image of a space station suspended in space, in the background the Earth is visible. Above the image appears "An epic drama of adventure and exploration" in blue block letters against a white background. Below the image in a black band, the title "2001: a space odyssey" appears in yellow block letters.
இயக்கம்ஸ்டான்லி குப்ரிக்
தயாரிப்புஸ்டான்லி குப்ரிக்
கதை
நடிப்பு
  • கீர் துல்லியா
  • கேரி லாக்வுட்
ஒளிப்பதிவுஜெஃப்ரி அஸ்வொர்த்
படத்தொகுப்புரே லியோய்ஜோ
கலையகம்ஸ்டான்லி குப்ரிக் புரொடக்சன்ஸ்
விநியோகம்மெட்ரோ கோல்ட்வைன் மேயர்
வெளியீடுஏப்ரல் 2, 1968 (1968-04-02)(Uptown Theater)
ஏப்ரல் 3, 1968 (United States)
மே 15, 1968 (United Kingdom)
ஓட்டம்
  • 161 நிமிடங்கள் (premiere)[1]
  • 142 நிமிடங்கள் (theatrical)[2]
நாடு
  • ஐக்கிய இராச்சியம்[3]
  • ஐக்கிய மாநிலங்கள்[3]
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$10.5–12 மில்லியன்[4][5]
மொத்த வருவாய்$138–190 மில்லியன்[6][7]

2001: எ ஸ்பேஸ் ஒடிசி திரைப்பத்தை அமெரிக்க ஸ்டுடியோவான மெட்ரோ கோல்ட்வைன் மேயர் நிதியுதவி செய்து, விநியோகித்தது,[8][9] என்றாலும், படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முற்றிலுமாக இங்கிலாந்தில் படமாக்கப்பட்டு, படத்தொகுப்பும் செய்யப்பட்டது. இந்தப்பணிகளுக்கு இங்கிலாந்தின் எம்ஜிஎம்- பிரிட்டிஷ் ஸ்டுடியோஸ் மற்றும் ஷெப்பர்ட்டன் ஸ்டுடியோஸ் ஆகியவற்றில் உள்ள வசதிகள் பயன்படுத்தப்பட்டன. இந்தத் திரைப்படம் வெளியானபோது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, என்றாலும் 1968 ஆம் ஆண்டின் மிகக் கூடுதலான வசூலை ஈட்டிய வட அமெரிக்க திரைப்படம் என்ற பெயரைப் பெற்றது. மேலும் இது நான்கு அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி திரைப்படமானது இதுவரை எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மகத்தான மற்றும் மிகவும் செல்வாக்கைச் செலுத்தும் திரைப்படங்களில் ஒன்றாக பரவலாக இக்காலத்தில் கருதப்படுகிறது.[10][11]

கதைச்சுருக்கம் தொகு

படத்தின் கதைத் துவக்கமானது நாற்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக துவங்குகிறது. கதையின் துவக்கத்தில் ஆப்பிரிக்காவில் ஒரு சிறிய தண்ணீர் குட்டையை தங்கள் ஆதிக்கத்தில் கொண்டுவர இரண்டு மனிதக் குரங்குக் கூட்டங்கள் போட்டியிடுகின்றன. இச்சூழலில் அங்கு கரிய நிறத்திலான ஒரு செவ்வகக் கல்லோன்று காணப்படுகின்றது. அந்தக் கல்லைச் சுற்றி சில குரங்குகள் வருகின்றன. அப்போது அக்கல்லால் அக்கூட்டத்தில் உள்ள ஒரு குரங்குகானது ஒரு மாற்றத்தை அடைகிறது. மாற்றம் பெற்ற அக்குரங்கானது அங்கு இருந்த ஒரு எலும்பை ஆயுதமாகப் பயன்படுத்தி தன் எதிரிக் கூட்டத்தில் இருந்த குரங்கொன்றைக் கொன்று தண்ணீர் குட்டையை தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருகின்றது. இதைத் தொடர்ந்து கதையானது நாற்பது இலட்சம் ஆண்டுகள் தாண்டி 2001 ஆண்டுக்கு வந்து சேருகிறது. குரங்குகள் கண்டதைப் போன்ற ஒரு கல் நிலவில் புதைக்கப்பட்டிருக்கிறது. நிலவுக்கு வரும் விண்வெளி வீரர்கள் அக்கல்லை ஆராய்கின்றனர். அப்போது அந்த வீரர்களில் சிலரை ஹால் என்னும் கணினி கொன்றுவிடுகிறது. அதைக் கொல்லும் பிரதான பாத்திரமான டேவிட் போமேன் காலவெளியூடான பயணத்தை மேற்கொள்கிறார் என்று கதை பயணிக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Agel 1970, ப. 169.
  2. Agel 1970, ப. 170.
  3. 3.0 3.1 "2001: A Space Odyssey (1968)". explore.bfi.org.uk. British Film Institute. Archived from the original on மார்ச்சு 20, 2015. பார்க்கப்பட்ட நாள் June 21, 2014.
  4. Miller, Frank. "Behind the Camera on 2001: A SPACE ODYSSEY". tcm.com. Turner Classic Movies. பார்க்கப்பட்ட நாள் December 24, 2014.
  5. "2001: A Space Odyssey (1968)". Box Office Mojo. Amazon. பார்க்கப்பட்ட நாள் March 20, 2012.
  6. Kolker 2006, ப. 16.
  7. Miller, Frank. "The Critics' Corner on 2001: A SPACE ODYSSEY". tcm.com. Turner Classic Movies. பார்க்கப்பட்ட நாள் December 24, 2014.
  8. James Chapman; Nicholas J. Cull (February 5, 2013). Projecting Tomorrow: Science Fiction and Popular Cinema. I.B.Tauris. பக். 97–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-78076-410-8. https://books.google.com/books?id=0jEIHfOErcsC&pg=PA97. 
  9. McAleer, Neil (April 1, 2013). Sir Arthur C. Clarke: Odyssey of a Visionary: A Biography. RosettaBooks. பக். 140–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-9848118-0-9. https://books.google.com/books?id=pU8qAAAAQBAJ&pg=PT140. 
  10. Dennis Overbye (May 10, 2018). "‘2001: A Space Odyssey’ Is Still the ‘Ultimate Trip’ - The rerelease of Stanley Kubrick’s masterpiece encourages us to reflect again on where we’re coming from and where we’re going.". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2018/05/10/science/2001-a-space-odyssey-kubrick.html. பார்த்த நாள்: May 10, 2018. 
  11. "The Moving Arts Film Journal | TMA's 100 Greatest Films of All Time | web site". Archived from the original on January 6, 2011. பார்க்கப்பட்ட நாள் February 3, 2011.