2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

2006 ஆசிய விளையாட்டுப் போட்டி
2006 ஆசிய விளையாட்டுப் போட்டி
2006 ஆசிய விளையாட்டுப் போட்டி
Slogan: "The Games of Your Life"
நடத்திய நகரம்தோகா, கத்தார்
பங்கெடுத்த நாடுகள்45
பங்கெடுத்த வீரர்கள்13,000
நிகழ்வுகள்39 விளையாட்டுக்கள்
துவக்க விழாடிசம்பர் 1 (விவரம்)
நிறைவு விழாடிசம்பர் 15 (விபரம்)
திறந்து வைத்தவர்சேக் அமத் பின் கலீபா அல் தானி
வீரர்கள் உறுதிமொழிமுபாரக் ஈத் பிலால்
நடுவர்கள் உறுதிமொழிஅப்த் அல்லா அல்-புலூசி
பந்தம் கொழுத்தியவர்சேக் முகம்மது பின் அமத் அல்-தானி
முதன்மை அரங்கம்கலீபா அனைத்துலக விளையாட்டரங்கம்

2006 ஆசிய விளையாட்டுப் போட்டி என்பது, 2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கத்தாரில் உள்ள தோகாவில் இடம்பெற்ற ஒலிம்பிய விளையாட்டுப் பாணியிலான 15 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகும். இது "15 ஆசியாட்" என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் இப்போட்டிகள் நிகழ்ந்த முதல் நகரம் என்ற பெருமையும், 1974 ஆம் ஆண்டில் தெகரானில் இடம்பெற்றதை அடுத்து, மேற்காசியாவில் இப்போட்டிகளை நடத்திய இரண்டாவது நகரம் என்ற பெருமையும் தோகாவுக்கு உண்டு.

இப் போட்டியிலேயே முதல் முறையாக ஆசிய ஒலிம்பிய அவையைச் சார்ந்த 45 உறுப்பு நாடுகள் பங்குபற்றின. அத்துடன் இப் போட்டியிலேயே ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், ஆசிய விளையாட்டுப் போட்டியொன்றைப் பார்க்கக்கூடிய வகையில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இவ்வொளிபரப்பு யூரோசுப்போட்டினால் செய்யப்பட்டது.[1]

சான்றுகள்

தொகு
  1. "The Asian Games Live On Eurosport". Sportbusiness.com. Archived from the original on 2011-05-26. பார்க்கப்பட்ட நாள் 2011-05-02.