2006 வாரணாசி குண்டுவெடிப்புகள்

7 மார்ச் 2006 அன்று இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்துக்களின் புனித தலமான வாரணாசியில் உள்ள அனுமார் கோயில் மற்றும் வாரணாசி கண்டோன்மெண்ட் இரயில் நிலையத்தில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தினர் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகளில் 28 இந்துக்கள் உயிரிழந்தனர் மற்றும் 101 பேர் படுகாயம் அடைந்தனர்.[1] இந்த குண்டு வெடிப்புகளுக்கு லஷ்கர்-ஏ-தொய்பா பொறுப்பு ஏற்றது.[2]

2006 வாரணாசி குண்டு வெடிப்புகள்
நிகழ்விடம்வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா
நாள்7 மார்ச் 2006
18:20 இந்திய சீர் நேரம் (UTC+05:30)
இலக்குஅனுமார் கோயில் மற்றும் வாரணாசி கண்டோன்மெண்ட் இரயில் நிலையம்
தாக்குதல் வகைவெடி குண்டுகள்
இறப்பு(கள்)28
காயமடைந்தவர்101
Perpetrator(s)லஷ்கர்-ஏ-தொய்பா
வாரணாசியில் குண்டு வெடிப்புகள் நடந்த இடங்களின் வரைபடம்

வழக்கும் தண்டனையும்

தொகு

வாரணாசி தொடர் குண்டு வெடிப்புகளை விசாரித்த காவல் துறை, லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தின் வங்காளதேசம் நாட்டின் வலியுல்லா கானை பிராயக்ராஜில் வைத்து கைது செய்து காசியாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 7 சூன் 2022 அன்று நீதிமன்றம் வலியுல்லா கானுக்கு பல்வேறு குற்றப் பிரிவுகளில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.[3][4]

மேற்கோள்கள்

தொகு