2012 குவகாத்தி பாலியல் வழக்கு

case 1

9 ஜூலை 2012 அன்று, இந்தியா, அசாமின் தலைநகரான குவகாத்தியில் [1] ஒரு இளம்பெண்ணை மதுக்கடைக்கு வெளியே ஏறத்தாழ 30 ஆண்கள் கூட்டமாக பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது,பின்னர் அவர்களில் பலர் நிகழ்படத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர் . நியூஸ் லைவ் எனும் உள்ளூர் தொலைக்காட்சி பத்திரிகையாளர் அந்தக் கும்பலைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு 20 ஜூலை 2012 அன்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணைகள் நடந்து வருகின்றன. [2]

2012 குவகாத்தி பாலியல் வழக்கு
நாள் சூலை 9, 2012 (2012-07-09)

சம்பவம்

தொகு

9 ஜூலை 2012 அன்று, இரண்டு பெண்கள் ஒரு மதுக்கடையில் இருந்து வெளியேறி, வெளியே நின்ற ஆண்கள் குழுவிற்கு எதிராக உடல் ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டனர். அருகிலிருந்த நியூஸ் லைவ் பத்திரிகையாளர் கௌரவ் ஜோதி நியோக் தனது அலுவலகத்தினை தொடர்பு கொண்டு அங்கு நடைபெறும் சண்டையை படமாக்க ஒளிப்படக் கருவி மற்றும் குழுவினரை வருமாறு கேட்டுக் கொண்டார். [3] அந்த பெண் பிரிந்து சென்று உதவி கேட்க முயன்ற போதிலும், அவர் கும்பலுக்குள் இரண்டு முறை இழுத்துச் செல்லப்பட்டு மேலும் தாக்குதலுக்கு உள்ளானார். இறுதியில், சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, உள்ளூர் நாளிதழான அஜிர் அசோமின் மற்றொரு பத்திரிகையாளர் முகுல் கலிதா தலையிட்டு அந்தப் பெண்களை மீட்டார். [4] காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததும், சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்தனர். நிகழ்பட காட்சிகளிலிருந்து அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அமர்ஜோதி கலிதா முதன்மை குற்றவாளியாக உள்ளார். [5]

எதிர்வினைகள்

தொகு

இந்த பாலியல் வழக்கு தேசிய மற்றும் உள்ளூர் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.நியூஸ் லைவ் எனும் தொலைக்காட்சியில் இந்த நிகழ்படப் பதிவுகள் வெளியாகியது, மேலும் யூடியூப்பில் அந்த காட்சிகள் வைரல் ஆனது.மேலும், நகரத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் மனித உரிமைகள் குறித்தும் பல விவாதங்கள் நடைபெற்றன. [6] 20 ஜூலை 2012 க்குள், குற்றம் சாட்டப்பட்ட 22 பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். [7] முக்கிய குற்றவாளியான அமர்ஜோதி கலிதா ஜூலை 23 அன்று வாரணாசியில் உத்தரபிரதேச காவல்துறையிடம் சரணடைந்தார். [8] மறுநாள், அசாம் காவல் துறையினர் வாரணாசிக்கு கலிதாவை கைது செய்யச் சென்றனர். இந்த பாலியல் வழக்கில் அடையாளம் காணப்பட்ட 17 பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. [9] அல்கா லம்பா, தேசிய மகளிர் ஆணையத்தின் (என்சிடபிள்யூ) பிரதிநிதி, பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரிக்க கவுகாத்திக்கு அனுப்பப்பட்டார். ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது தற்செயலாக பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காக பல விமர்சனங்களுக்கு உள்ளானார். [10] பாதிக்கப்பட்டவர் இளவர் என்பதால் தேசிய பெண்கள் உரிமை ஆணையம் இந்த வழக்கை தேசிய குழந்தை பாதுகாப்பு மையத்திடம் ஒப்படைத்ததனர். இந்தச் செயலை குழந்தை உரிமை நிபுணர்களும் விமர்சித்தனர். [11]

தீர்ப்பு

தொகு

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அமர்ஜோதி கலிதா உட்பட 11 குற்றவாளிகள் 7 டிசம்பர் 2012 அன்று குற்றவாளிகள் எனவும் [12] [13] மற்றும் நான்கு பேர் நிரபராதிகள் எனவும் அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டனர். குற்றவியல் முதன்மை மன்ற நீதிபதியான எஸ். பி. மோயித்ரா , மரஜோதி காலிதா என்பவரை முக்கிய குற்றவாளியாக அறிவித்தது மற்ற 10 பேரையும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளான 143 - சட்டவிரோத கூட்டம், 341- தவறான கட்டுப்பாடு, 294 -அருவருப்பான செயல், 323 - தானாக முன்வந்து காயப்படுத்தியது மற்றும் 354 - பெண் மீதான தாக்குதல் ஆகிய பிரிவுகளில் குற்றவாளியாக அறிவித்தது.

நியூஸ் லைவ் பத்திரிகையாளர் கவுரவ் ஜோதி நியோக் ஹாபிசுதீன், திகந்த பாசுமடரி மற்றும் ஜிதுமோனி தேகா ஆகியோர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.

சான்றுகள்

தொகு
  1. "TV reporter who-filmed girls molestation in Guwahati arrested". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 July 2012 இம் மூலத்தில் இருந்து 2013-10-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131011083355/http://articles.timesofindia.indiatimes.com/2012-07-20/guwahati/32763134_1_atanu-bhuyan-tv-reporter-news-live-channel. பார்த்த நாள்: 21 July 2012. 
  2. "Guwahati molestation: TV journalist arrested". Hindustan Times. 20 July 2012 இம் மூலத்தில் இருந்து 21 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120721124156/http://www.hindustantimes.com/India-news/Guwahati/Guwahati-molestation-TV-journalist-arrested/Article1-892644.aspx. பார்த்த நாள்: 21 July 2012.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-21. பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.
  3. Sahni, Diksha (24 July 2012). "Big Catch in Guwahati Molestation Case". Wall Street Journal. https://blogs.wsj.com/indiarealtime/2012/07/24/big-catch-in-guwahati-molestation-case/?mod=google_news_blog. பார்த்த நாள்: 24 July 2012. 
  4. Deka, Kaushik (13 July 2012). "Irony adds to insult and anger! Accused in molestation case plays police officer on crime show, yet to be arrested". India Today. http://indiatoday.intoday.in/story/assam-girl-molestation-case/1/208117.html. பார்த்த நாள்: 24 July 2012. 
  5. Choudhury, Ratnadip. "Manufactured Shame". Tehelka இம் மூலத்தில் இருந்து 22 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120722191536/http://www.tehelka.com/story_main53.asp?filename=Ne280712MANUFACTURED.asp. பார்த்த நாள்: 21 July 2012. 
  6. "Guwahati case: The questions about the fateful night of July 10". http://www.dnaindia.com/analysis/column_guwahati-case-the-questions-about-the-fateful-night-of-july-10_1715901. 
  7. "Guwahati molestation case: SSP transferred; another accused held" இம் மூலத்தில் இருந்து 18 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120718192833/http://www.hindustantimes.com/India-news/Guwahati/Guwahati-molestation-SSP-transferred-8-accused-held/Article1-890065.aspx.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-18. பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.
  8. "Uttar Pradesh Kalita, main accused in Guwahati molestation case, surrenders". 23 July 2012 இம் மூலத்தில் இருந்து 26 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120726022320/http://www.hindustantimes.com/India-news/UttarPradesh/Kalita-main-accused-in-Guwahati-molestation-case-surrenders/Article1-894264.aspx.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-26. பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.
  9. "Guwahati molestation: Assam police go to Varanasi to take custody of Kalita". 24 July 2012. http://www.dnaindia.com/india/report_guwahati-molestation-assam-police-go-to-varanasi-to-take-custody-of-kalita_1719144. 
  10. "Guwahati molestation: NCW representative draws flak". 16 July 2012 இம் மூலத்தில் இருந்து 19 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120719174539/http://www.hindustantimes.com/India-news/Guwahati/Guwahati-molestation-NCW-representative-draws-flak/Article1-889990.aspx.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-19. பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.
  11. "NCPCR should have handled Guwahati molestation case: Experts". 20 July 2012. http://www.dnaindia.com/india/report_ncpcr-should-have-handled-guwahati-molestation-case-experts_1717733. 
  12. "11 convicted, four acquitted in Guwahati molestation case". The Hindu. http://www.thehindu.com/news/states/other-states/11-convicted-four-acquitted-in-guwahati-molestation-case/article4174500.ece. பார்த்த நாள்: 8 December 2012. 
  13. "11 convicted in Guwahati abuse case, scribe let off". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 8 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121208043740/http://www.hindustantimes.com/India-news/Guwahati/Guwahati-molestation-case-Amarjyoti-Kalita-convicted-journalist-walks-free/Article1-969757.aspx. பார்த்த நாள்: 8 December 2012.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-08. பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.