இந்திய தண்டனைச் சட்டம்
இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) இந்தியாவின் முக்கிய குற்றவியல் சட்டத்தொகுப்பு ஆகும். இது குற்றவியல் சட்டத்தின் அனைத்து வகையான அம்சங்களையும் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டது. இது 1860 ல் வரையப்பட்டு 1862 ல் பிரித்தானிய ஆட்சியின் போது காலனித்துவ இந்தியாவில் அமலுக்கு வந்தது. இது பல முறை திருத்தம் செய்யப்பட்டு, இப்போது மற்ற குற்றவியல் விதிமுறைகளையும் தன்னுள்ளே கொண்டு விரிவடைந்துள்ளது.
சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய தண்டனைச் சட்டம் பாக்கிஸ்தான் (இப்போது பாக்கிஸ்தான் தண்டனைச் சட்டம் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் வங்காளத்தால் ஏற்கப்பட்டு தங்களது நாட்டின் தண்டனைச் சட்டமாக விளங்கி வருகிறது. இது பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புரூணை போன்ற நாடுகளால் தழுவப்பட்டு , அந்த நாடுகளின் தண்டனைச் சட்டமாக இருந்துவருகிறது.
வரலாறு
தொகுஇந்திய தண்டனைச் சட்டத்தின் வரைவு லார்ட் மெக்காலேய் தலைமையில் இயங்கிய முதல் சட்ட ஆணையத்தால் தயாராக்கப்பட்டது. இது இங்கிலாந்து சட்டத்திலிருந்து அவ்வூரின் தனித்தன்மைகளை விடுத்தபின் வந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. பிரெஞ்சு தண்டனைச் சட்டம் மற்றும் லூசியானாவின் லிவிங்ஸ்டன் சட்டத்திலிருந்து ஆலோசனைகள் எடுக்கப்பட்டு இது வரையப்பட்டது. இவ்வரைவு சர் பர்னஸ் பீகாக், கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, மற்றும் சக நீதிபதிகளால் மிக கவனமாக திருத்தப்பட்டு அக்டோபர் 6,1860 அன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டம் 1837 ஆம் ஆண்டு சபையில் இந்திய கவர்னர் ஜெனரலிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அது இந்திய சட்டவரையறை புத்தகத்தில் இடம் பெற 1860ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டி இருந்தது.
இது அக்காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டங்களில் சிறந்ததாக கருதப்பட்டது. இது முக்கிய திருத்தங்கள் இல்லாமல் பல சட்ட வரம்புகளில் 150 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. மெக்காலேயின் காலத்தில் இல்லாத தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட நவீன குற்றங்கள் கூட இச்சட்டத்தின் கீழ் எளிதாக இடம்பெறுகிறது.
குற்றங்களின் வகைப்பாடு
தொகுஇந்திய தண்டனைச் சட்டம், 1860, கீழ்க்கண்ட குற்றங்களை உள்ளடக்கியுள்ளது.அவை பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:
அத்தியாயம் | பகுதி | குற்ற வகை | |
---|---|---|---|
அத்தியாயம் 1 | பகுதி 1 முதல் 5 | அறிமுகம் | |
அத்தியாயம் 2 | பகுதி 6 முதல் 52 | பொது விளக்கங்கள் | |
அத்தியாயம் 3 | பகுதி 53 முதல் 75 | தண்டனைகள் | |
அத்தியாயம் 4 | பகுதி 76 முதல் 106 | தனியார் பாதுகாப்பு உரிமைகளின் பொது விதிவிலக்குகள் | |
அத்தியாயம் 5 | பகுதி 107 முதல் 120 | உடந்தை | |
அத்தியாயம் 5எ | பகுதி 120எ முதல் 120பி | குற்றவியல் சதி | |
அத்தியாயம் 6 | பகுதி 121 முதல் 130 | அரசுக்கு எதிரான குற்றங்கள் | |
அத்தியாயம் 7 | பகுதி 131 முதல் 140 | இராணுவம் கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள் | |
அத்தியாயம் 8 | பகுதி 141 முதல் 160 | பொதுமக்களின் அமைதிக்கு எதிரான குற்றங்கள் | |
அத்தியாயம்9 | பகுதி 161 முதல் 171 | அரசாங்க ஊழியர்கள் தொடர்பான குற்றங்கள் | |
அத்தியாயம் 10 | பகுதி 172 முதல் 190 | அரசாங்க ஊழியர்களின் சட்டப்பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள் | |
அத்தியாயம் 11 | பகுதி 191 முதல் 229 | பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள் | |
அத்தியாயம் 12 | பகுதி 230 முதல் 263 | நாணயம் மற்றும் அரசு அஞ்சல்தலைகள் தொடர்பான குற்றங்கள் | |
அத்தியாயம் 13 | பகுதி 264 முதல் 267 | எடை மற்றும் அளவுகள் தொடர்பான குற்றங்கள் | |
அத்தியாயம் 14 | பகுதி 268 முதல் 294 | பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரிகம் மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள் | |
அத்தியாயம் 15 | பகுதி 295 முதல் 298 | மதம் தொடர்பான குற்றங்கள் | |
அத்தியாயம் 16 | பகுதி 299 முதல் 377 | மனித உடல் பாதிக்கும் குற்றங்கள் பற்றி
1. கொலை, குற்றத்துக்குரிய படுகொலை (பிரிவு 299 முதல் 311) உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச்செய்கின்ற குற்றங்கள் பற்றி 2. கருச்சிதைவு தொடர்பான குற்றங்கள்(பிரிவு 312 முதல் 318) 3. காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338) 4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை (பிரிவு 339 348 போன்ற) 5. குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358) 6. கடத்தல்,அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் செய்ய வலியுறுத்தல்(பிரிவு 359 முதல் 374) 7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள்(பிரிவு 375 முதல் 376) 8. செயற்கை குற்றங்கள் என்ற (பிரிவு 377) || | |
அத்தியாயம் 17 | பகுதி 378 முதல் 462 | சொத்து தொடர்பான குற்றங்கள் பற்றி
1. திருட்டு (பிரிவு 378 முதல் 382) 2. பலாத்காரம் (பிரிவு 383 முதல் 389) 3. திருட்டு மற்றும் கொள்ளை என்ற (பிரிவு 390 முதல் 402) 4. சொத்து குற்றவியல் மோசடி செய்ததற்காக (பிரிவு 403 முதல் 404) 5. குற்றவியல் நம்பிக்கை துரோகம் (பிரிவு 405 409) 6. திருடிய சொத்து பெறுகிறார் (பிரிவு 410 முதல் 414) 7. ஏமாற்றுதல் (பிரிவு 415 முதல் 420) 8. மோசடி செயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல் (பிரிவு 421 முதல் 424) 9. குறும்புகள் (பிரிவு 425 முதல் 440) 10. குற்ற மீறல் பற்றிய (பிரிவு 441 முதல் 462) || | |
அத்தியாயம் 18 | பகுதி 463 முதல் 489 | ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்றங்கள் பற்றி
1. சொத்து un (பிரிவு 478 முதல் 489) 2. நாணய குறிப்புகள் மற்றும் வங்கி அறிக்கை (பிரிவு 489எ வேண்டும் 489இ) || | |
அத்தியாயம் 19 | பகுதி 490 முதல் 492 | சேவை ஒப்பந்தங்கள் குறித்த சட்ட மீறல்கள் | |
அத்தியாயம் 20 | பகுதி 493 முதல் 498 | திருமணத்திற்கு எதிரான குற்றங்கள் | |
அத்தியாயம் 20எ | பகுதி 498எ | கணவன் அல்லது கணவனின் உறவினரால் துன்புறுத்தல் | |
அத்தியாயம் 21 | பகுதி 499 முதல் 502 | அவதூறு வழக்குகள் | |
அத்தியாயம் 22 | பகுதி 503 முதல் 510 | சட்ட விரோத மிரட்டல், அவமதிப்பு குறித்து | |
அத்தியாயம் 23 | பகுதி 511 | குற்றம் செய்ய முயல்வது |
சீர்திருத்தங்கள்
தொகு1. பிரிவு 377 இந்தியாவில் பாலியல் சிறுபான்மையினரின் நியாயமான உரிமைகள் எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்பகுதி எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டை கையாள்வதில் மிக பெரிய தடையாக இருந்து வந்தது. ஆனால் ஜூலை 2,2009 அன்று தில்லி உயர் நீதிமன்றம் இப்பகுதியில் ஒரு முற்போக்கான விளக்கம் கொடுத்தது.இந்த பிரிவில் இரண்டு ஆண்கள் இடையே பரஸ்பர ஒப்புதலுள்ள பாலியல் உடலுறவு சட்டம் தண்டிக்க பயன்படுத்த முடியாது என்றது. ஆனால் 2013 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை தள்ளி வைத்ததுடன், இச்சட்டத்தை திருத்துவதும், திரும்பப்பெறுவதும் இந்திய அரசின் பொறுப்பு, நீதித்துறையின் பொறுப்பல்ல என்று அறிவித்தது.
2. பிரிவு 309 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்களை தண்டனை வழங்குகிறது. மாறாக பொருத்தமான ஆலோசனை வழங்குவதே சிறந்தது என்பதே பலரின் கருத்து.
3.பிரிவு 497ன் கீழ் மற்றொரு நபர்கள் மனைவியுடன் ஒப்புதலுள்ள உடலுறவு வைத்துக்கொள்ளும் ஆண்களை தண்டிக்கிறது.
வெளி இணைப்புகள்
தொகுஇந்திய தண்டனைச் சட்டம்(ஆங்கிலத்தில்)
- இந்திய தண்டனைச் சட்டம் பரணிடப்பட்டது 2009-04-19 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)