2013 இலங்கை முசுலிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்

2013 இலங்கை முசுலிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் எனப்படுபவை இலங்கை முசுலீம்கள் மீது சிங்கள பெளத்த பேரினவாதிகளும் பேரினவாத பிக்குமார்களும் நடத்திய, நடத்திவரும் தாக்குதல்கள் ஆகும். 2013 இல் முசுலீம்களுக்கு எதிரான தாக்குதல்கள் உக்கிரமாகி வருகின்றன.[1] பல்வேறு பள்ளிவாசல்களும், முசுலீம்களின் வணிக நிறுவனங்களும் தாக்கப்பட்டுள்ளதுடன் முசுலீம்களின் அலால் உணவு முறையை சட்டத்துக்குப் புறம்பானதாக ஆக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு தனிநபர் தாக்குதல்களும், பல்வேறு துன்புறுத்தல் நிகழ்வுகளும் இடம்பெறுள்ளன. முசுலீம்கள் தொடர்பான அவதூறுகள் பரப்புரை செய்யப்பட்டு வருகின்றன.

பொறுப்பானவர்கள் தொகு

பௌத்த சக்திப் படை அல்லது பெளத்த சேன என அறியப்படும் சிங்கள பெளத்த பேரினவாத அமைப்பும் ஜாதிக எல உறுமய (தேசிய மரபுக் கட்சி) என்ற அரசுடன் இணந்த பிக்குமார்கள் கட்சியும் இத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன.[2] பல்வேறு தாக்குதல்கள் பெளத்த பிக்குமார் தலைமையில் அல்லது பங்களுடன் நடந்துள்ளன. இத் தாக்குதல்களுக்கு இலங்கையில் ராசபக்ச அரச ஆதரவு உள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.[1]

நிகழ்வுகள் காலக்கோடு தொகு

  • மார்ச்சு 28 - பிக்குமார்களின் தலைமையில் நூற்றுக்கணக்காணோர் ஒரு பெரிய முசுலீம் வணிக நிறுவனத்தைத் தாக்கினர். பலர் காயம் அடைந்தனர்.[3]
  • பெப்ரவரி - முசுலீம்களின் நான்கு வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டன.
  • பெப்ரவரி - மாத்தறை பள்ளிவாசல் தாக்குதல்.
  • சனவரி - பிக்குமார்கள் இறைச்சிகள் வெட்டப்படும் இடத்தை தாக்கினர்.
  • சனவரி - பல்வெறு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 The hardline Buddhists targeting Sri Lanka's Muslims
  2. இலங்கை: பௌத்த பேரினவாதிகள் முஸ்லீம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டலை தூண்டுகின்றனர்
  3. Sri Lanka crowd attacks Muslim warehouse in Colombo