2013 மகபூப்நகர் பேருந்து விபத்து

2013 மகபூப்நகர் பேருந்து விபத்து (2013 Mahabubnagar bus accident) 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நடந்த ஒரு விபத்தாகும். பெங்களுரிலிருந்து ஐதராபாத் செல்லும் வழியில் ஒரு தனியார் வோல்வோ பேருந்து காரை கடந்து செல்லும்போது சிறு பாலத்தில் மோதி தீப்பிடித்தது. இவ்விபத்தில் 45 பேர் உயிரிழந்தனர். ஏழு பேர் காயமடைந்தனர்[1] [2][3]. இந்திய நாட்டின் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மகபூப்நகர் மாவட்டத்தில் இருக்கும் பாலெம் கிராமத்தில் அதிகாலை 5.30 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்தது. 02.06.2014 தேதிக்குப் பின்னர் இக்கிராமம் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது[4][5][6].

மகபூப்நகர் பேருந்து விபத்து
Mahabubnagar bus accident
இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தின் அமைவிடம்

விபத்து

தொகு

உள்ளூர் சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனமான யப்பார் டிராவல்சுக்கு சொந்தமான பேருந்து அக்டோபர் 29 அன்று பெங்களூரில் இருந்து 11 மணியளவில் புறப்பட்டுச் சென்றது, இப்பேருந்தில் 49 பயணிகள் இருந்தனர்[7]. பேருந்து ஓட்டுநர் முன்னால் செல்லும் ஒரு காரை முந்திச்செல்ல முயற்சித்தபோது அங்கிருந்த பாலத்தில் மோதியதால் விபத்து நிகழ்ந்தது. டீசல் எரிபொருள் தொட்டி சேதமடைந்ததால் தீப்பிடித்தது. ஒட்டுநர், துப்புரவாளர், மற்றும் ஐந்து பயணிகள் முதலானோர் பேருந்திலிருந்து தப்பிக்க முயன்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "45 charred in Bangalore-Hyderabad bus fire". Express News Service. HYDERABAD: The New Indian Express. 2013-10-31. http://newindianexpress.com/states/andhra_pradesh/45-charred-in-Bangalore-Hyderabad-bus-fire/2013/10/31/article1865561.ece. பார்த்த நாள்: 2013-10-31. 
  2. "Bus accident in India killed 44 people". CNN IBN. 30 October 2013. Archived from the original on 31 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 30 October 2013.
  3. "At least 44 people die in bus crash". NDTV. 30 October 2013. பார்க்கப்பட்ட நாள் 30 October 2013.
  4. "40 feared killed as bus hits oil tanker, catches fire in Andhra Pradesh". The Times of India. Archived from the original on 2013-11-01. பார்க்கப்பட்ட நாள் 30 October 2013.
  5. "Andhra Pradesh bus tragedy: Bus hits oil tanker in Mahabubnagar, 40 charred to death". India Today. பார்க்கப்பட்ட நாள் 30 October 2013.
  6. "42 die in India bus accident". BBC News. 30 October 2013. பார்க்கப்பட்ட நாள் 30 October 2013.
  7. "Hyderabad bound Bus catches Fire at Mahabubnagar killing 40". பார்க்கப்பட்ட நாள் 30 October 2013.