2015 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம்

நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2015- 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிப்ரவரி 28, 2015 அன்று தாக்கல் செய்தார்[1].

முக்கிய அம்சங்கள்

தொகு
  • 2015-16ஆம் ஆண்டுக்கான பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 % ஆக இருக்கும்.
  • வளர்ச்சியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8-8.5% இருக்கும்.
  • மார்ச்சு வரையான பணவீக்கம் 5% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • வருமான பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8& இருக்கும்.
  • வரியில்லாத வருமானம் ரூ2.21 டிரிலியன் ஆக இருக்கும்.
  • நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை குறைப்பதன் மூலம் 2015-16ஆம் ஆண்டில் அரசுக்கு ரூ 410 பில்லியன் வருமானம் வரும்.
  • 2016-17ஆம் ஆண்டில் அரசு நிறுவன பங்குகளை குறைத்து ரூ 55,000 கோடி வருமானம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பொதுத்துறை வங்கிகளின் நிருவாகத்தை மேம்படுத்த தன்னிச்சையான அதிகாரம் கொண்ட வங்கி ஆணையம் அமைக்கப்படும்.
  • தற்போது 43 நாடுகளுக்கு மட்டும் உள்ள வந்ததும் பெறும் நுழைவாணை 150 நாடுகளுக்கு உயர்த்தப்படும்.
  • ரூ 349.99 பில்லியன் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கப்படும்.
  • சந்தையின் மொத்த கடன் வாங்கும் திறன் ரூ 6 திரிலியன் என கணிக்கப்பட்டுள்ளது.
  • சந்தையின் நிகர கடன் வாங்கும் திறன் ரூ 4.56 திரிலியன் என கணிக்கப்பட்டுள்ளது.
  • செல்வ வரி நீக்கப்படுகிறது.
  • அதற்கு பதிலாக 2% மேல்வரி பெரும்பணக்காரர்களுக்கு விதிக்கப்படும்.
  • நிறுவனங்களுக்கான வரி 30% என்பதிலிருந்து 25%மாக அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் குறைக்கப்படும்.
  • புதிய வரிகள் மூலம் நிகர தொகை ரூ 150.68 பில்லியன் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • 22 பொருட்களுக்கு ஆயத்தீர்வு வரி குறைக்கப்படும்.
  • காப்பீடு வரம்பை தாண்டிய 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ செலவுகளுக்கு ரூ 30.000 கழிவு உண்டு.
  • மாற்றுத்திறனாளிகள் ரூ 25.000 வரை கழிவு பெறலாம்
  • இரும்புக்கும் எ கிற்கும் மான இறக்குமதி வரி 10%லிருந் 15% ஆக உயர்த்தப்படுகிறது
  • தேசிய உள்கட்டமைப்பு நிதி அமைக்கப்படும்
  • சாலை, தொடருந்து, பாசனம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக வரி இல்லா கடன்பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும்
  • 4,000 மெகா வாட் திறனுடைய 5 மின்திட்டங்கள் முன்மொழியப்படும்
  • கூடங்குளத்தில் இரண்டாவது அலகு அணு மின் உலை செயல்படுத்தப்படும்
  • திட்டமிட்ட செலவுகள் ரூ 4.65 திரிலியன் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • திட்டமிடாச் செலவுகள் ரூ 13.12 திரிலியன் என கணிக்கப்பட்டுள்ளது.
  • பாதுகாப்பு படைகளுக்கு ரூ 2.46 திரிலியன் ஒதுக்கப்படும்
  • நலத்துறைக்கு ரூ 331.5 பில்லியன் ஒதுக்கப்படும்
  • அரசுத்துறை வங்கிகளுக்கு ரூ 79.4 பில்லியன் முதலீடு செய்யப்படும்
  • தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 % ஆக இருக்கும் இதில் மாற்றமில்லை
  • இந்தியா தங்க நாணயங்களை வெளியிடும் இது தங்க இறக்குமதியை குறைக்கும்
  • உணவுக்கான மானியம் ரூ 1.24 திரில்லியனாக கணிக்கப்பட்டுள்ளது
  • உர மானியம் ரூ 729.69 பில்லியனாக கணிக்கப்பட்டுள்ளது.
  • எரிபொருள் மானியம் ரூ 300 பில்லியனாக கணிக்கப்பட்டுள்ளது.
  • சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளது
  • சிகரெட், பீடி வரி உயர்த்தப்பட்டுள்ளது
  • நெகிழி சாக்குகளின் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் கருத்துகள்

தொகு

மாநில முதல்வர்களின் கருத்துகள்

தொகு

பத்திரிகைகளின் விமர்சனங்கள்

தொகு
  • Positive signals for business - தி இந்து நாளிதழின் தலையங்கம் [2].

பொருளாதார நிபுணர்களின் விமர்சனக் கட்டுரைகள்

தொகு

அரசியல் தலைவர்களின் விமர்சனக் கட்டுரைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "As it happened: Union Budget 2015". தி இந்து. 28 பிப்ரவரி 2015. http://www.thehindu.com/business/budget/live-union-budget-2015/article6944394.ece?homepage=true&utm_source=MostPopular&utm_medium=Homepage&utm_campaign=WidgetPromo. பார்த்த நாள்: 28 பிப்ரவரி 2015. 
  2. "Positive signals for business". தி இந்து. 2 மார்ச் 2015. http://www.thehindu.com/opinion/editorial/positive-signals-for-business/article6948763.ece?homepage=true. பார்த்த நாள்: 2 மார்ச் 2015. 

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு