2015 பாகாப் படுகொலை
2015 பாகாப் படுகொலை (2015 Baga massacre) நைசீரியாவின் போர்னோ மாநிலத்தில் பாகா நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் சனவரி 3,2015 முதல் சனவரி 7 வரை போகோ அராம் நடத்திய, சில அறிக்கைகளின்படி இன்னமும் நடத்துகின்ற, திரள் கொலைகளும் தாக்குதல்களும் ஆகும். சனவரி 3 அன்று இந்த நகரில் சாட், நைஜர், மற்றும் நைஜீரியாத் துருப்புக்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த பன்னாட்டு கூட்டு செயல் படைப்பிரிவு தலைமையகத்தை போகோ அராம் தாக்கினர்; தொடர்ந்து ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களை போகோ அராம் போராளிகள் கடத்திச் சென்றனர்; இவர்கள் சனவரி 7 அன்று திரளாகக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகின்றது.
2015 பாகாப் படுகொலை | |
---|---|
நைஜீரியாவில் பாகாவின் அமைவிடம் | |
இடம் | பாகா, போர்னோ மாநிலம், நைஜீரியா |
ஆள்கூறுகள் | 13°7′7.7″N 13°51′23.7″E / 13.118806°N 13.856583°E |
நாள் | 3 - 7 சனவரி 2015 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | உள்ளூர் மக்கள், நகரிலுள்ள நைசீரியப் படைத் தளம் |
தாக்குதல் வகை | திரள் கொலைகள், கட்டுப்பாடற்ற கொலைகள், பெட்றோல் குண்டுவீச்சு, மற்றவை |
இறப்பு(கள்) | குறைந்தது 100, 2,000க்கும் மேலாக "கணக்கில் இல்லாது" |
தாக்கியோர் | போகோ அராம் |
இறந்தவர்கள் எண்ணிக்கை "கூடுதலாக" இருக்குமென்று கூறப்பட்டாலும் உண்மையான மதிப்பீடு கிட்டவில்லை; தப்பி ஓடிய உள்ளூர் அதிகாரிகளும் மக்களும் "2,000க்கும்" கூடுதலான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது "காணப்படவில்லை" என்றும் கூறுகின்றனர்; ஆனால் சில அறிக்கைகளின்படி "குறைந்தது நூறு" உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறுகின்றன.[1][2][3][4] பல அரசு அலுவலர்கள் இவற்றை மறுத்துள்ளனர்; சிலர் எந்தப் படுகொலையும் நடக்கவில்லை என்றும் நைசீரியப் படைகள் போராளிகளை எதிர்த்து துரத்தி விட்டதாகவும் கூறுகின்றனர். இதனை உள்ளூர் அலுவலர்களும் மக்களும் தப்பிவந்தவர்களும் பன்னாட்டு ஊடகங்களும் மறுக்கின்றனர்.[5] [6][3]
பாகாவும் குறைந்தது 16 மற்ற ஊர்களும் எரியூட்டி அழிக்கப்பட்டதாகவும் 35,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. சாட் ஏரியை கடக்கையில் பலர் மூழ்கி இறந்ததாகவும் இந்த ஏரியின் தீவுகளில் பலர் அடைபட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.[1][4] இந்தத் தாக்குதல்கள் மூலம் போகோ அராம் போர்னோ மாநிலத்தில் 70% பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.[2]
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Boko Haram destroys at least 16 villages in NE Nigeria: officials". Business Insider. Agence France-Presse. 8 January 2015 இம் மூலத்தில் இருந்து 1 ஏப்ரல் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180401115140/http://www.businessinsider.com/afp-boko-haram-destroys-at-least-16-villages-in-ne-nigeria-officials-2015-1. பார்த்த நாள்: 8 January 2015.
- ↑ 2.0 2.1 "Boko Haram crisis: Nigeria's Baga town hit by new assault". BBC World News. பிபிசி. 8 January 2015. http://www.bbc.com/news/world-africa-30728158. பார்த்த நாள்: 8 January 2015.
- ↑ 3.0 3.1 Smith, Alexander (8 January 2015). "Boko Haram Torches Nigerian Town of Baga; 2,000 Missing: Senator". NBC News. National Broadcasting Company. http://www.nbcnews.com/storyline/missing-nigeria-schoolgirls/boko-haram-torches-nigerian-town-baga-2-000-missing-senator-n282291. பார்த்த நாள்: 8 January 2015.
- ↑ 4.0 4.1 "Boko Haram kills dozens in fresh raids in Nigerian town". ராய்ட்டர்ஸ். Thomson Reuters. 8 January 2015 இம் மூலத்தில் இருந்து 8 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150708231338/http://uk.reuters.com/article/2015/01/08/uk-nigeria-violence-toll-idUKKBN0KH1QD20150108. பார்த்த நாள்: 8 January 2015.
- ↑ Olanrewaju, Timothy (9 January 2015). "One week after Boko Haram attack, corpses litter Baga". The Sun (Nigeria). http://sunnewsonline.com/new/?p=99371. பார்த்த நாள்: 9 January 2015.
- ↑ "Boko Haram suffers heavy defeat in surprise attack on military base". News Express. 5 January 2015 இம் மூலத்தில் இருந்து 7 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170807072724/http://www.newsexpressngr.com/news/detail.php?news=8954&title=Boko-Haram-suffers-heavy-defeat-in-surprise-attack-on-military-base. பார்த்த நாள்: 9 January 2015.