126 உறுப்பினர் கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.[1] இதில் பாயக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று பாசகவின் சரபானந்த சோனோவால் முதலமைச்சர் ஆனார்.
2016 அசாம் சட்டப் பேரவைத் தேர்தல்
|
← 2011 |
4 ஏப்ரல் 2016 (2016-04-04) — 11 ஏப்ரல் 2016 (2016-04-11) |
2021 → |
|
மொத்தம் உள்ள 126 இடங்களுக்கும் நடந்த தேர்தல் (பெரும்பான்மைக்கு 64 இடங்கள் தேவை) அதிகபட்சமாக 64 தொகுதிகள் தேவைப்படுகிறது |
---|
|
தேதி |
நிகழ்வு
|
11 & 14 மார்ச் |
மனுத்தாக்கல் ஆரம்பம்
|
18 & 21 மார்ச் |
மனுத்தாக்கல் முடிவு
|
19 & 22 மார்ச் |
வேட்புமனு ஆய்வு நாள்
|
21 & 26 மார்ச் |
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
|
4 ஏப்ரல் |
முதல் கட்ட வாக்குப்பதிவு
|
11 ஏப்ரல் |
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு
|
19 மே |
வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு
|
சில்சார், திசுப்பூர், கௌகாத்தி கிழக்கு, கௌகாத்தி மேற்கு உட்பட 10 தொகுதிகளில் வாக்கை தாளில் சரிபார்க்கும் வசதி செய்யப்பட்டது. பாசக போடோலாந்து மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்தது.[2] முதல் கட்டமாக ஏப்பிரல் 4 அன்று 65 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக ஏப்பிரல் 11 அன்று 61 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றன. பாசகவும் அசாம் கன பரிசத்தும் கூட்டணி சேர்ந்துள்ளதாக அறிவித்தன.[3] முதல் கட்டத்தில் தனக்கு ஒதுக்கப்படாத பிசுவந்து, காளிகோன் தொகுதிகளில் அசாம் கன பரிசித்து வேட்பாளர்களை அறிவித்தது. அங்கு பாசகவுடன் நட்பு ரீதியான போட்டியிருக்கும் என்று கூறியது.[4] 126 உறுப்பினர் சட்டப்பேரவைக்கு பாசக 88 வேட்பாளர்களை அறிவித்தது.[5]
கட்டம் |
வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை |
வாக்குப்பதிவு சதவீதம்
|
முதற் கட்டம் |
65 |
78% [6]
|
இரண்டாம் கட்டம் |
61 |
78.09[7]
|
இவற்றையும் பார்க்கவும்
தொகு