2017 அரியானா கலவரம்

2017 அரியானா கலவரம் என்பது 25 ஆகத்து 2017 அன்று இந்தியாவின் அரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா நகரத்தில் தொடங்கிய வன்முறைகளைக் குறிக்கும். இக்கலவரம் அரியானா, பஞ்சாப் மாநிலங்களின் பிற பகுதிகளுக்கும் நாட்டின் தலைநகர் புது தில்லிக்கும் பரவியது.[1] இந்த வன்முறைச் செயல்களில் 36 பேர் கொல்லப்பட்டனர்; 250 பேர் காயமடைந்தனர்.[2]

2017 அரியானா கலவரம்
தேதி25 ஆகத்து 2017
அமைவிடம்
காரணம்குர்மீத் ராம் ரகீம் சிங் என்பவர் வன்புணர்வு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால்
உயிரிழப்புகள்
இறப்பு(கள்)36
காயமுற்றோர்250+
கைதானோர்3
காவலில் இருத்தி
வைக்கப்பட்டோர்
1000

வன்முறைகள்

தொகு

பஞ்சாப்பிலுள்ள மாலவுட், பல்லுவானா ஆகிய இரு தொடருந்து நிலையங்கள் தீவைப்புக்கு உள்ளாகின. டெல்லியிலுள்ள ஆனந்த் விகார் தொடருந்து நிலையத்தில் ரெவா விரைவுத் தொடருந்தின் காலியான இரண்டு பெட்டிகள் தீ வைக்கப்பட்டன.[3] என்டிடிவி செய்தித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு வாகனம் தாக்கப்பட்டதில், ஒளிபரப்புப் பொறியாளர் காயமடைந்தார். சிர்சா நகரில், இந்தியா டுடே செய்தித் தொலைக்காட்சியின் குழு தாக்கப்பட்டதில் ஒளிப்படக்காரர் காயமடைந்தார். பஞ்சாப்பின் மன்சா நகரில், காவற்துறை வாகனங்கள் 2 கொளுத்தப்பட்டன.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Live updates: 28 dead, 250 injured as Dera chief conviction sets Haryana on fire". தி இந்து. 25 ஆகத்து 2017. http://www.thehindu.com/news/national/other-states/live-updates-dera-sacha-sauda-chief-convicted-in-rape-case/article19558757.ece. பார்த்த நாள்: 25 ஆகத்து 2017. 
  2. "Violent Protests in India Turn Deadly After Guru’s Rape Conviction". நியூ யார்க் டைம்சு. 25 ஆகத்து 2017. https://www.nytimes.com/2017/08/25/world/asia/dealy-protests-indian-guru-rape-conviction.html. பார்த்த நாள்: 25 ஆகத்து 2017. 
  3. "At least 28 dead in riots after Indian guru's rape conviction". டான் (செய்தித்தாள்). 25 ஆகத்து 2017. https://www.dawn.com/news/1353869/at-least-28-dead-in-riots-after-indian-gurus-rape-conviction. பார்த்த நாள்: 25 ஆகத்து 2017. 
  4. Bedi, Rahul (25 ஆகத்து 2017). "Twenty-eight dead as violence erupts among devotees of India's 'guru of bling' following rape conviction". தி டெலிகிராப். http://www.telegraph.co.uk/news/2017/08/25/indian-guru-convicted-rape-amid-fears-violent-reaction-thousands/. பார்த்த நாள்: 25 ஆகத்து 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2017_அரியானா_கலவரம்&oldid=2409000" இலிருந்து மீள்விக்கப்பட்டது