2020 மாலைத்தீவுகளில் கொரோனாவைரசுத் தொற்று
மாலைத்தீவுகளில் கொரோனாவைரசு தொற்று, என்பது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனாவைரசு நோய் 2019 (COVID-19) பரவல் பற்றியதாகும். 7 மார்ச் 2020 அன்று முதல் பரவத் தொடங்கியது. 19 மார்ச் 2020 நிலவரப்படி, 16 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.[1]
2020 மாலைத்தீவுகளில் கொரோனாவைரசுத் தொற்று 2020 Coronavirus Pandemic in the Maldives | |
---|---|
நோய் | கோவிட்-19 (கொரோனாவைரசு) |
தீநுண்மி திரிபு | கடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2) |
அமைவிடம் | மாலைத்தீவுகள் |
முதல் தொற்று | ஊகான், ஊபேய், சீனா வழியாக இத்தாலி |
நோயாளி சுழியம் | குரேடு கேளிக்கை விடுதி |
வந்தடைந்த நாள் | 7 மார்ச் 2020 |
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் | 16 |
குணமடைந்த நோயாளிகள் | 11 |
இறப்புகள் | 0 |
காலவரிசை
தொகு7 மார்ச் 2020 அன்று, மாலத்தீவுகள் முதல் இரண்டு பேருக்கு கோவிட்-19 நோய் இருப்பதாத உறுதிப்படுத்தப்பட்டது. குரேடு தீவு கேளிக்கை விடுதிக்கு வந்து போன இத்தாலி நாட்டினரிடமிருந்து பரவியதாக நம்பப்படுகிறது. மார்ச் 9 அன்று, மாலத்தீவு மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரசுத் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
பயணம் மற்றும் வெளிநாட்டினர் வருகை கட்டுப்பாடுகள்
தொகுமாலைத்தீவுகள் சுற்றுலா துறை அமைச்சகம், மாலைத்தீவுகள் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, பின்வரும் நாடுகளுக்கு தற்காலிக பயண தடையை விதித்துள்ளன.[2]
நாடு | நடைமுறைப்படுத்திய தேதி | மூல |
---|---|---|
சீனா | 2020 பிப்ரவரி 04 முதல் செயலில் உள்ளது | சுகாதார அமைச்சகம் |
தென் கொரியா (வடக்கு மற்றும் தெற்கு கியோங்சாங் மாகாணங்கள்) | 2020 மார்ச் 03 முதல் செயலில் உள்ளது | சுகாதார அமைச்சகம் |
இத்தாலி | 2020 மார்ச் 08 முதல் செயலில் | சுகாதார அமைச்சகம் |
வங்காள தேசம் | 10 மார்ச் 2020 முதல் 24 மார்ச் 2020 வரை செயலில் உள்ளது | சுகாதார அமைச்சகம் |
செருமனி | 15 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது | சுகாதார அமைச்சகம் |
எசுப்பானியா | 15 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது | சுகாதார அமைச்சகம் |
பிரான்சு | 15 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது | சுகாதார அமைச்சகம் |
மலேசியா | 17 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது | சுகாதார அமைச்சகம் |
அமெரிக்கா | 18 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது | சுகாதார அமைச்சகம் |
ஐக்கிய இராச்சியம் | 19 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது | சுகாதார அமைச்சகம் |
இலங்கை | 21 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது | சுகாதார அமைச்சகம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Maldives confirms first two coronavirus cases; two resort islands locked down". The Economic Times. 8 March 2020. https://economictimes.indiatimes.com/news/international/world-news/maldives-confirms-first-two-coronavirus-cases-two-resort-islands-locked-down/articleshow/74535526.cms. பார்த்த நாள்: 11 March 2020.
- ↑ "COVID-19 LOCAL UPDATES" (in En). Ministry of Health இம் மூலத்தில் இருந்து 19 மார்ச் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200319045926/https://covid19.health.gov.mv/en/. பார்த்த நாள்: 19 March 2020.