2022 அசாம் வெள்ளம்

2022 அசாம் வெள்ளம் (2022 Assam floods) 650,000 மக்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றியது. 25 பேர் வெள்ளத்தால் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.[1] இந்தியாவின் அசாம் மாநிலத்தில் மே மாதத்தில் மூன்று நாட்கள் பெய்த கனமழையால்[2] பிரம்மபுத்திரா நதி கரைபுரண்டு ஓடியது. இதனால் 1,900 கிராமங்கள் நீரில் மூழ்கின.[3]

நிகழ்வுகள்

தொகு

மே 2022 இல் மாநிலம் முழுவதும் இயல்பை விட அதிகமான மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது.[4] மே 25 ஆம் தேதி வரை அசாம் மாநிலத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். 25 பேர் உயிரிழந்தனர்.[5][6] அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான கிராமங்களும் 60,000 எக்டேருக்கும் அதிகமான பயிர்களும் பாதிக்கப்பட்டன.[7] அதிகாரிகள் மாநிலம் முழுவதும் பல நிவாரண முகாம்கள் மற்றும் விநியோக மையங்களை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களுக்கு அடைக்கலம் அளித்தனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இரயில் பாதைகளும் பாதிக்கப்பட்டன.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. Reuters (2022-05-24). "Floods kill 25 in India's Assam, displace thousands" (in en). Reuters. https://www.reuters.com/world/india/floods-kill-25-indias-assam-displace-thousands-2022-05-24/. 
  2. "அசாம், அருணாச்சலில் வெள்ளம் நிலச்சரிவால் 11 பேர் உயிரிழப்பு: சாலை, ரயில் போக்குவரத்து பாதிப்பு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03.
  3. CNN, Reuters and Esha Mitra. "Floods and landslides kill 10 in northeast India after heavy rain". CNN. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03. {{cite web}}: |last= has generic name (help)
  4. Zaman, Rokibuz. "Assam gets 62% above normal pre-monsoon rain. Floods made worse by dams, say locals". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.
  5. "Weather Highlights: 6.5 lakh people affected in Assam floods, death toll rises to 25". The Indian Express (in ஆங்கிலம்). 2022-05-25. பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.
  6. "Weakened Rain Activity to Continue over Northeast India This Week; Assam Flood Situation Improves, Death Toll Up to 25". The Weather Channel (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.
  7. "Assam: Assam floods: 26 killed, 5.8 lakh affected across 17 districts". The Times of India (in ஆங்கிலம்). May 24, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.
  8. Chaudhary, Shiva (2022-05-24). "Assam Floods: In Big Relief, Centre Sanctions Rs 180 Cr For Restoration Of Railway Network In Dima Hasao". thelogicalindian.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2022_அசாம்_வெள்ளம்&oldid=3665784" இலிருந்து மீள்விக்கப்பட்டது