2022 ஆப்கானித்தான் நிலநடுக்கம்
2022 ஆப்கானித்தான் நிலநடுக்கம் (2022 Afghanistan earthquake) ஆப்கானித்தான் நாட்டின் வடமேற்கு மாகணமான பட்கிசு மாகாணத்தில் 2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் 17 ஆம் தேதியன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.[1] இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக தோன்றிய பல காரணிகள் விகிதாச்சாரத்தில் சேதம் மற்றும் அதிர்ச்சியின் அளவிற்கு பலி எண்ணிக்கைக்கு வழிவகுத்துள்ளது. நிலநடுக்கத்தில் 22 பேர் இறந்தனர் ஐந்து பேர் காயமடைந்தனர்.[2][3][4]
நிலநடுக்க அளவு | 5.3 Mw |
---|---|
ஆழம் | 18.8 km (11.7 mi) |
நிலநடுக்க மையம் | 34°56′46″N 63°34′48″E / 34.946°N 63.580°E |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | ஆப்கானித்தான் |
அதிகபட்ச செறிவு | VI (Strong) |
உயிரிழப்புகள் | 22 மரணம், 5 காயம் |
இந்த நிலநடுக்கத்தால் வடமேற்கு ஆப்கானித்தானில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.[2][5]
கண்டத்தட்டு அமைப்பு
தொகுஆப்கானித்தான் ஒரு பெரிய புவித்தட்டு எல்லையில் அமைந்துள்ளது.[6] ஈரானிய தட்டு மற்றும் யுரேசிய தட்டு ஆகிய இரண்டு கண்டத்தட்டுகள் சந்திக்கும் எல்லையில் ஆப்கானித்தான் நாட்டின் அமைவிடம் உள்ளது.[7] ஆப்கானித்தானின் தெற்கில், இந்திய தட்டு வடக்கு நோக்கி நகர்கிறது. வடக்கே யுரேசியத் தட்டு தென்-கிழக்கு நோக்கி நகர்கிறது.[6] இத்தட்டுகளின் இயக்கத்தின் விளைவாக இவற்றிடையிலான மோதல் 50 மில்லியன் ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன் காரணமாக ஆப்கானித்தான் அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுகிறது.[6] ஈரானிய தட்டு மற்றும் யுரேசிய தட்டு இரண்டும் கண்டமேலோடுகளைக் கொண்டுள்ளன. எனவே அவை மூழ்கவோ அழியவோ முடியாது. இதன் விளைவாக இரண்டு தட்டுகளுக்கு இடையிலான பாறைகள் மலைகளை உருவாக்க மேல்நோக்கி உயர கட்டாயப்படுத்தப்படுகின்றன.[7] ஈரானிய தட்டு நிலையாகத் தொடர்ந்து நகர்வதால் அழுத்த அதிகரிப்பு விளைகிறது.[7]
நிலநடுக்கம்
தொகுநிலநடுக்கம் ஆரம்பத்தில் 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.[8] சில மணி நேரங்களுக்குப் பிறகு இது 5.3 ரிக்டராக குறைந்துள்ளது. தென்கிழக்கில் சுமார் 9 கிமீ தொலைவில் பின்னர் 4.9 ரிக்டர் அளவிலான ஒரு முன் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.[9]
தாக்கம்
தொகுஆப்கானித்தான் நிலநடுக்கத்தால் 700 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டன.[2] காடிசு மாவட்டத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஒன்பது பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பதினைந்து பேர் பத்ருக் கிராமத்தில் இறந்தனர்.[10][11][12][13] ஐந்து பேர் காயம்பட்டு எலும்பு முறிவுகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட அன்று, ஆப்கானித்தானில் இறப்பு எண்ணிக்கை 12 என்று உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் இது சில மணி நேரங்களுக்குப் பிறகு 22 ஆக உயர்ந்து பின்னர் 26 என்ற நிலையை எட்டியுள்ளது.[12] ஆப்கானித்தான் நாடு ஏற்கனவே ஒரு மனிதாபிமான பேரழிவின் பிடியில் உள்ளது. 2021 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் மேற்கத்திய நாடுகள் பன்னாட்டு உதவி மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை அணுகுவதை முடக்கியபோது தலிபான்கள் ஆப்கானை எடுத்துக் கொண்டதால் நிலைமை மோசமடைந்துள்ளது.[14]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ 2.0 2.1 2.2 "Magnitude 5.6 quake hits western Afghanistan, killing more than 20". devdiscourse.com.
- ↑ "Number of killed in earthquake in Afghanistan rises to 22".
- ↑ "At least 12 killed in Afghan earthquake - district official". news24.com. January 17, 2022. பார்க்கப்பட்ட நாள் January 17, 2022.
- ↑ "Erdbeben (M5.4) Afghanistan; 17. Januar, 12:40 Uhr" (in ஜெர்மன்).
- ↑ 6.0 6.1 6.2 Peter Webber; Neil Punnett (1999). Physical Geography and People. Nelson Thornes. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7487-4303-2.
- ↑ 7.0 7.1 7.2 Neil Punnett; Alison Rae; David Wood; Peter Richardson; John Edwards (2003). The New Wider World. Nelson Thornes. p. 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7487-7376-3.
- ↑ "Earthquake of 5.6 magnitude strikes Western Afghanistan". Deccan Herald (in ஆங்கிலம்). 2022-01-17. பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
- ↑ "M 4.9 - 50 km ESE of Qala i Naw, Afghanistan". earthquake.usgs.gov.
- ↑ "Hundreds of homes damaged as deadly earthquake rocks western Afghanistan". trtworld.com.
- ↑ "Scossa di terremoto di magnitudo 5.3 in Afghanistan: ci sono morti e feriti. Immagini e video" (in இத்தாலியன்).
- ↑ 12.0 12.1 "26 Dead After 5.3 Earthquake Hits Western Afghanistan". ndtv.com.
- ↑ "At least 12 killed in Afghanistan earthquake". rte.ie.
- ↑ "Earthquake kills 12 in Afghanistan". thedailystar.net.