பட்கிஸ் மாகாணம்

ஆப்கானிஸ்தானின் ஒரு மாகாணம்

பட்கிஸ் மாகாணம் (Bādghīs (பஷ்தூ/பாரசீக மொழி: بادغیس‎) என்பது ஆப்கானித்தானின் முப்பத்து நான்கு மாகாணங்களில் ஒன்று. இது நாட்டின் வடமேற்கில் துர்க்மெனிஸ்தானை அடுத்து உள்ளது. இந்த பிராந்தியத்தின் பெயருக்கான பொருள் பாரசீக மற்றும் பஷ்டு மொழிகளில் "காற்று இல்லம்" என்பதாகும், இது மாகானத்தின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் இருந்து வீசும் ஊதி என்ற புல்வெளி காற்றை குறிப்பிடுவது ஆகும். முர்காப் ஆற்றிலிருந்து பட்கிஸ் மாகாணம் பாசணவசதி பெறுகிறது. மாகாணத்தின் வட எல்லை சராகாஸ் பாலைவனத்தின் விளிம்புவரை நீண்டுள்ளது. பட்கிஸ் மாகாணம் துர்க்மென்-ஆப்கன் எல்லைக் கோட்டின் ஒரு பகுதியாக உள்ளது.[2] இந்த மாகாணத்தில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு ஹெராட் மாகாணம் மற்றும் மேமனிஸ் மாகாணம் ஆகியவற்றுடன் 1964 இல் இணைக்கப்பட்டன பிரிக்கப்பட்ட பரப்பளவு 20,591 km2 ஆகும்.[3] நாட்டிலுள்ள 34 மாகாணங்களில் இந்த மாகாணம் வளர்ச்சியில் பின்தங்கிய மாகாணமாகும். மாய்மனா மற்றும் ஹெறாத் நகரம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள குவாலா ஐ நாவ் என்ற தற்கால சிறிய நகரமே மாகாணத்தின் தலைநகராக உள்ளது.

பட்கிஸ் மாகாணம்
Badghis
بادغیس
ஆப்கானிஸ்தான் மாகாணம்
பட்கிஸ் மாகாணத்தில் ஒரு கிராமம்
பட்கிஸ் மாகாணத்தில் ஒரு கிராமம்
ஆப்கானிஸ்தானில் உள்ள இடம்
ஆப்கானிஸ்தானில் உள்ள இடம்
Districts prior to 2005 realignment
Districts prior to 2005 realignment
நாடு ஆப்கானித்தான்
தலை நகரம்குவாலா ஐ நாவ்
மாவட்டங்கள்
அரசு
 • ஆளுநர்ஜபாலுதின் ஈசாக்
பரப்பளவு
 • மொத்தம்20,590.6 km2 (7,950.1 sq mi)
 • நீர்0 km2 (0 sq mi)
மக்கள்தொகை
 (2013)[1]
 • மொத்தம்4,99,393
 • அடர்த்தி20.9/km2 (54/sq mi)
மக்கள் வகைப்பாடு
 • இனக்குழுக்கள்தஷிக்குகள், பஷ்டூன், உஸ்பெக்கர், துர்க்மெனியர், பலோச்
 • மொழிகள்துரி பாரசீகம், பஷ்தூ, துருக்குமேனிய
ஐஎசுஓ 3166 குறியீடுAF-BDG

வரலாறு

தொகு

இந்த மாகாணம் 2001 அமெரிக்க தலையீட்டுக்கு முன்பு தாலிபான்களின் படைகளால் கடைசியாக கைப்பற்றப்பட்ட பகுதியாகும். இந்த மாகாணம் விரைபில் தாலிபான்களிடமிருந்து மீண்டும் வடக்குக் கூட்டணி படைகளால் கைப்பற்றப்பட்டது.

மாகாணத்தில் இருந்து தலிபான்கள் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்ட பிறகு ஹமீது கர்சாய் மற்றும் அண்மையில் காஹானி அஹ்மத்ஜல் ஆகியோரின் ஆதரவாளர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டனர். இந்த ஆளுநர்கள் நல்ல மாற்றங்களை மாகாணத்தில் செய்யவில்லை. குறிப்பாக ஆளுநர் நசிரி தலிபான்கள் திரட்ட வசதி செய்து கொடுத்தார்.

அரசியல்

தொகு

மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ஜமாலுதின் ஈசாக் ஆவார்.

மாகாணத்தில் ஸ்பெயின் தலைமையில் இயங்கிய ஒரு மாகாண புனரமைப்பு குழு, இருந்தது.

பொருளாதாரம்

தொகு

முகார்ப் ஆற்றை நம்பி நடக்கும் வேளாண்மையே இந்த பிரதேச மக்களின் வருவாய்க்கு ஆதாரமாக உள்ளது. மாகாணத்தில் 1990 களிலும் முற்பகுதியிலும், 2000 களின் பிற்பகுதியிலும் பெரும் வறச்சியை எதிர்கொண்டு, மக்கள் பல பத்தாயிரம் வீடுகளை விட்டு ஹெராட்டுக்கு வெளியில் உள்ள அகதி முகாம்களைத் தஞ்சமடைந்தனர். இந்த சூழல் தற்போது மேம்பட்டுள்ளது.[4] ஆப்கானிஸ்தானில் பசுங்கொட்டை உற்பத்தியில் பட்கிஸ் மாகாணம் முன்னிலை வகிக்கிறது. இந்த மாகாணம் நாட்டில் கம்பளம் நெய்யும் தொழிலில் தலையாய இடத்தை வகிக்கிறது.

போக்குவரத்து

தொகு

பட்கிஸ் மாகாணத்தில் போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லாத நிலையில் உள்ளது. மாகாணத்தில் ஒரே ஒரு வானூர்தி நிலையமாக மாகாணத்தின் தலைநகரான கலா ஐ நவ்வில் (QAQN) சிறிய வானூர்தி நிலையம் உள்ளது.[5] 233 கி.மீ நீளம் கொண்ட ஆப்கான் வட்டச்சாலையின் பணிகள் 2012 ஆம் ஆண்டு துவங்கியது.[6] இந்தச் சாலை ஹெர்ட் மற்றும் மஜிர்-ஐ ஷரீப் ஆகியவற்றை இணைக்கிறது. இதன் வழியாக பட்கிஸ் மாகாணத்திற்கான பாதை ஆப்கானஸ்தானின் பிற பகுதிகளுக்கு திறக்கும். இந்தச் சாலையின் பிரிவு ஹெர்ட் மாகாணத்தின் லெமன் முதல் ஃபர்யப் மாகாணத்தில் குவாய்சர் வரை, குவாலா-இ-நவ், முகியூர், பாலா முர்காப், கோர்மச் ஆகிய பகுதிகளின் ஊடாக செல்கிறது.

உடல் நலம்

தொகு

மாகாணத்தில் தூய்மையான குடிநீர் பெறும் மக்களின் எண்ணிக்கை 2005 இல் 11.6% என்ற விகிதத்தில் இருந்து 2011 இல் 1% என சரிந்தது.[7] திறமையான பிரசவ உதவியாளர் மூலமாக பிரசவம் பார்க்கும் மக்களின் விழுகாடு 2005 ஆண்டில் 15% என்ற எண்ணிக்கையில் இருந்து 2001 ஆண்டு 17% என உயர்ந்தது.[7]

கல்வி: கல்வி திணைக்களத்தின் தகவல படி, மாகாணத்தில் 457 பள்ளிகளும், அதில் 75 உயர் நிலைப்பள்ளிகள் உள்ளன மற்றும் துவக்கப்பள்ளிகள் மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 120,000 மாணவர்கள் உள்ளனர். அவர்களில் 35% மாணவிகள் ஆவர். மாகாணத்தில் ஒரு வேளாண் தொழில் பள்ளி மற்றும் ஒரு மருத்துவச்சி பயிற்சி நிறுவனம் உள்ளது.

நிலவியல்

தொகு

பட்கிஸ் மாகாணம் வடமேற்கு ஆப்கானிஸ்தானின் தனிமைப்படுத்தப்பட்ட மலைப்பகுதிகளின் மேல் உள்ளது மற்றும் இது தன் எல்லைகளை ஹெராத், கோர், பர்யாபில் மாகாணம் என ஆப்பானிஸ்தானுக்கள் உள்னாட்டு எல்லைகளையும், துர்க்மெனிஸ்தானுடன் வெளிநாட்டு எல்லையையும் பகிர்ந்து கொள்கிறது. மாகாணத்தின் வடக்கில் முர்காப் ஆறு மற்றும் தெற்கில் ஹரி-ருட் ஆறு ஆகியன செல்வாக்கு செலுத்தி வருகின்றன.

மாவட்டங்கள்

தொகு
  • அப் கமரி
  • கோமர்மஞ்ச் மாவட்டம் அரசுமுறையாக பர்யாப் இல் இருந்து நிர்வகிக்கப்படுகிறது.
  • ஜவாண்ட் மாவட்டம்
  • முக்யூர் மாவட்டம், பத்கிஸ்
  • முர்காப் மாவட்டம்
  • க்வாடிஸ் மாவட்டம்
  • குவாலா ஐ நியூ மாவட்டம்

மக்கள் வகைப்பாடு

தொகு

ஆப்கானிஸ்தானின் முழு பகுதியைப் போலவே, துல்லியமான மக்கள் கணக்கெடுப்பு இங்கு இல்லை. ஆப்கானிஸ்தான் ஊரக புனர்வாழ்வு & வளர்ச்சி அமைச்சகம் (MRRD) ஊடாக UNHCR மற்றும் ஆப்கான் மத்திய புள்ளியியல் அலுவலகம் (CSO) மதிப்பிட்ட மாகாணத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 499,393 ஆகும். சில ஆதரங்களின்படி மொத்த மக்கள் தொகையில் தஜிக்குகள் எண்ணிக்கை 56% ஆகவும், பஷ்டூன் 40%, உஸ்பெக்ர், துர்க்மெனியர், பலோச் போன்ற சிறுபான்மை இனத்தவர் 4% எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.[8] AIMS மற்றும் NPS ஆதாரங்களின்படி மொத்த மக்கள் தொகையில் தஷிக்குகள் 62%, பஷ்டூன் 28%, உஸ்பெக்கர் 5%, துர்க்மெனியர் 3%, பலோச் 2% என வாழ்கின்றனர்.[9] நாட்டிலுள்ள 34 மாகாணங்களில் இந்த மாகாணம் வளர்ச்சியில் பின்தங்கிய மாகாணமாகும். செபேர்கன் மற்றும் ஹெர்ராத் நகரம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள குவாலா ஐ நாவ் என்ற தற்கால சிறிய நகரமே மாகாணத்தின் தலைநகராக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Afghanistan Ministry of Rural Rehabilitation and Development: Badghis Provincial Profile" (PDF). Mrrd.gov.af. பார்க்கப்பட்ட நாள் 2016-09-25.
  2.    "Badghis". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911). Cambridge University Press. 
  3. Bosworth, C. E. "BAÚD¨GÚÈS". Encyclopædia Iranica. அமெரிக்க ஐக்கிய நாடு: Columbia University. அணுகப்பட்டது 2007-12-19. 
  4. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  5. Qala-i-Naw Airport பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் at the Islamic Republic of Afghanistan Ministry of Transport and Civil Aviation பரணிடப்பட்டது 2008-12-05 at the வந்தவழி இயந்திரம்
  6. "Archived copy". Archived from the original on 2013-09-30. பார்க்கப்பட்ட நாள் 2013-06-10.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. 7.0 7.1 "Archived copy". Archived from the original on 2014-05-31. பார்க்கப்பட்ட நாள் 2014-05-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  8. http://www.mrrd.gov.af/nabdp/Provincial%20Profiles/Badghis%20PDP%20Provincial%20profile.pdf
  9. http://www.nps.edu/Programs/CCS/Badghis/Badghis_Executive_Summary.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்கிஸ்_மாகாணம்&oldid=3561537" இலிருந்து மீள்விக்கப்பட்டது