2022 கராச்சி தீ விபத்து

2022 கராச்சி தீ விபத்து (2022 Karachi fire) பாக்கித்தான் நாட்டின் கராச்சி நகரையடுத்த அசீசு பட்டி பார்க் அருகில் ஏற்பட்டது. இவ்விபத்து காரணமாக 440 இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் இதர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. தீயை அணைக்கும் பணியில் ஆறு தீ அணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

முதலில் புதர்களில் தீ பரவியது. ஆனால் விரைவில் நசரத் எனப்படும் வழக்குச் சொத்து அல்லது திருடப்பட்ட வாகனங்கள் நிறுத்திவைக்கும் இடம் வரை பற்றி எரிந்தது. தேவைப்படும் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வகையில் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்களும் பிற வாகனங்களும் இத்தீயில் சேதமடைந்தன. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.[1][2][3][4]

தீ விபத்து ஏற்பட்ட 15 நிமிடங்களில் தீ அணைப்பு துறை, காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. நகரத்தில் இருந்த குடியிருப்புகள் பாதுகாப்பாக காக்கப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Over 500 vehicles gutted in Karachi fire".
  2. "Hundreds of vehicles torched after fire in Karachi impoundment lot". 12 June 2022.
  3. "400 bikes, 40 cars gutted in Nazarat fire". 13 June 2022.
  4. "Over 500 vehicles gutted in Karachi fire".
"https://ta.wikipedia.org/w/index.php?title=2022_கராச்சி_தீ_விபத்து&oldid=3774142" இலிருந்து மீள்விக்கப்பட்டது