2022 காபூல் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு

ஆப்கானித்தானின் காபூல் நகரப் பள்ளிவாசலில் நிகழ்ந்தது.

2022 காபூல் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு (August 2022 Kabul mosque bombing) ஆப்கானித்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள அபு பக்கர் அல் சாதிக் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையின்போது குண்டு வெடித்ததைக் குறிக்கிறது.[2][3] ஆகத்து மாதம் நடந்த இக்குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 40 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.[4][5] வெடிவிபத்தை அடுத்து பள்ளிவாசலுக்கு அருகில் வசிப்பவர்களும் துப்பாக்கிச் சத்தத்தை கேட்டதாக தெரிவித்தனர்.[2]

2022 காபூல் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு
August 2022 Kabul mosque explosion
இடம்அபு பக்கர் அல் சாதிக்கு பள்ளிவாசல், காபுல், ஆப்கானித்தான்
நாள்ஆகத்து 17, 2022 (2022-08-17)
இறப்பு(கள்)20+[1]
காயமடைந்தோர்40+

பாதிக்கப்பட்டவர்கள் தொகு

காபூலில் உள்ள அவசர மருத்துவமனையில் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட 27 பேர் அனுமதிக்கப்பட்டனர்.[5] மருத்துவமனைக்கு வரும்பொழுதே இருவரும் மருத்துவமனை சிகிச்சையின்போது ஒருவரும் மரணமடைந்தனர்.[5] பலியானவர்களில் இசுலாமிய மத போதகரான அமீர் முகமது காபூலியும் ஒருவர் என தெரியவந்துள்ளது. முகமது காபூலி இசுலாமியப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.[1][6] மாலை நேர தொழுகையின்போது இந்த தாக்குதலானது நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.[7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Faiez, Rahim (August 17, 2022). "Bombing at Kabul mosque kills 10, including prominent cleric". Associated Press. https://apnews.com/article/religion-bombings-kabul-taliban-d8c5d97123419f3880c24097cfd37a9e. பார்த்த நாள்: August 17, 2022. 
  2. 2.0 2.1 "At least 50 killed after explosion at Afghanistan mosque: Reports". August 17, 2022. Archived from the original on ஆகஸ்ட் 29, 2022. பார்க்கப்பட்ட நாள் August 17, 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Guler, Bilal (August 17, 2022). "Blast in Afghan capital Kabul mosque, casualties feared". Anadolu Agency. https://www.aa.com.tr/en/asia-pacific/blast-in-afghan-capital-kabul-mosque-casualties-feared/2663517. பார்த்த நாள்: August 17, 2022. 
  4. "Explosion erupts inside Kabul mosque, police say". August 17, 2022. பார்க்கப்பட்ட நாள் August 17, 2022.
  5. 5.0 5.1 5.2 "Huge explosion hits Kabul mosque, many casualties feared". August 17, 2022. பார்க்கப்பட்ட நாள் August 17, 2022.
  6. Kohsar, Esmatullah (August 17, 2022). "Afghan Capital Sees Multiple Casualties From Explosion at Mosque". Wall Street Journal. https://www.wsj.com/articles/afghan-capital-sees-multiple-casualties-from-explosion-at-mosque-11660774543. பார்த்த நாள்: August 17, 2022. 
  7. Kosalairaman, Muthu Vinayagam. "காபூல் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு - மதபேதகர் உள்பட 20 பேர் பலி". Hindustan Times Tamil. பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.